/* up Facebook

May 15, 2011

தற்கொலை - ஒரு தீர்வா ?


" ஒரு உயிரை உற்பத்தி செய்ய முடியாத உனக்கு
அதை பறிக்கும் உரிமை என்றும் கிடையாது "
- யாரோ

மழை மேகம்
தண்ணீர் வளர்க்க
மறந்து விட்டால்
தாவரங்கள்
தரைக்குள்ளே
வேர் நீட்டி
தண்ணீர்
தேடுமேயன்றி
தற்கொலை செய்துகொல்லுமா ?-

கவிசர் சிவா

அன்புள்ள அரசி,

இக்கடிதத்தை நீயும் படித்து பின் உன் நண்பர்களிடமும் காட்டு. எதிர்கால இளைஞ்சர் சமுதாயம் எதிர்நீச்சல் போட இதன் ஒவ்வொரு வரியும் வழிகாட்டும்.நம் நாட்டில் தற்கொலையில் இருப்பவர்கள் நூற்றுக்கு ஒருவர். தற்கொலைக்கு முயற்சிப்பவர் நூற்றுக்கு பத்து பேர். தனக்கு தானே மைத்து கொள்ளும் செயலே தற்கொலை . தாம் மற்றவர்களுக்கு ஒரு சுமை வாழ்கை தேவையற்றது . உயிர் வாழ்வது வீண் என்று தற்கொலை செய்து கொள்பவன் நினைக்கிறான். தற்கொலை ஓர் உள்நோயின் விளைவு.உணர்சிவசபடுகிற கணநேர முடிவு , இது வாழ்கை சிக்கலை எதிர்த்து நிற்கும் திறமையின்மையின் வெளிப்பாடு . மலிவு சரக்குகளை விலைபேசும் பத்திரிக்கைகள் ,திரைப்படங்கள் ,சில அரசியல் சக்திகள் இதை தூண்டிவிடுவது வருந்தத்தக்கது.

தற்கொலை பெரும்பாலும் இருவர் சம்பந்தப்பட்டது. இவர்கள் காதலர்,காதலியாகவோ , கணவன் , மனைவியாகவோ, பெற்றோர் , குழந்தைகளாகவோ , தலைவன், தொண்டனாகவோ இருக்கலாம்.

தற்கொலையின் காரணங்கள்
1. மனநோய்கள்
மனவருத்த நோய்
மனசிதைவு நோய்
குடிநோய்
போதை அடிமைகள்
குனனலகேடு


2. சமூகவியல் காரணங்கள்
1. பொருளியல் -வறுமை ,சுயநலம்
2. அரசியல்
3. மதம் (வடகிருதல் -சமணமதம் )
4. போர் நெறி (தற்கொலைப்படை )

3. தனிமனித காரணங்கள்
முதுமை
தனிமை
ஏமாற்றம்
அவமானம்
தீராத உடல் நோய்
இழப்பு
தோல்வி
சண்டை
மன முரண்பாடு

தற்கொலை முறைகள்

1. நஞ்சுன்னல்
2. தீக்குளித்தல்
3. நீரில் மூழ்குதல்
4. தூக்கில் தொங்குதல்
5. உயரத்தில் இருந்து குதித்தல்
6. வாகன விபத்துகள்

தற்கொலையின் மூலகாரணங்கள்
1. பக்குவப்படாத மனநிலை
2. உணர்ச்சியில் அவசர முடிவு
3. இழப்பு,ஏமாற்றம் இவற்றை சமாளித்து எதிர்நீச்சல் போடா தெரியாத மனகலக்கம்.
4. கிணற்று தவளை வாழ்க்கை
5. நினைத்ததை சாதிக்கும் பிடிவாதம்
6. மற்றவர்களை பழிவாங்கும் முயற்சி
7. குழப்பமோ, நிரந்தரப் பாதுகாப்பற்ற சூழ்நிலை

மேற்கூறிய காரணஙகைனால் மனபோராதங்களும் , வருத்தங்களும் , குழப்பங்களும் ஒருவருக்கு ஏற்படும்போது மன நெருக்கடி , மன அழுத்தம் ஏற்படுகிறது. இம்மனகுலப்பங்களிலிருந்து அவர்கள் விடுபட எழுப்புகின்ற அபயக்குரல் தற்கொலை முயற்சியாகும்.தற்கொலை செய்ய எண்ணுபவர்கள் எதையாவது ஒருதடவை தன் என்னத்தை வெளியிட்டுருப்பார்கள் . இதை ஒரு முநேச்சரிக்கையாக நாம் எடுத்து கொள்ள வேண்டும்.தற்கொலை பிரச்சனைக்கு எந்த வழியிலேயும் ஒரு நிரந்தர தீர்வு கிடையாது.

எனவே தற்கொலை முயற்சிகள் தட்டுக்க படவேண்டியவையே . சரியான சமயத்தில் அவர்கள் மனநிலையை அடையாளம் கண்டுகொண்டு , மனநிலை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தடுக்க வேண்டும். தற்கொலை எண்ணம் பலரையும் ஒரு நேரத்தில் தட்டிப்பார்த்து போயிருக்கலாம். அனால் அவர்கள் அந்தப் பிரச்சனையில் மூழ்கிவிடலாம் , எதிர்கொண்டு அறிந்த வெற்றி பெற்றுருக்கலாம்.

ஆகவே பிரச்னைகளை சமாளிக்க மனதில் உறுதியுடன், தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையும் வேண்டும். இதற்கு நண்பரோ, உறவினரோ ,குடும்பநல மருத்துவரோ, மன நல மருத்துவரோ கைகொடுக்ககூடும். அவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களிடம் மனம் விட்டு பேசி வருத்தம், ஏமாற்றம், கோபம்,பாரம் இவற்றை புரிந்து கொண்டு தீர்வுக்கான வேண்டும். அதற்குரிய ஆலோசனைகள் , அன்பு, அரவணைப்பு இவற்றை நேசகரதொடு நீட்டினாள் தற்கொலை முயற்சிகள் நிச்சயமாக நாம் தடுக்க முடியும். அண்ணனுக்கு அரசுரிமை தர இளங்கோ அடிகள் காவியை தரிக்காது ஆவியைத் துறந்திருந்தால் சிலப்பதிகாரம் பிறந்திருக்காது. அம்மா என் சோகம் பெரிதென்று ஏமாற்றமே உன் சோக பெரிதன்று ஏமாறாதே முனைகள் பிணைத்தால் உருவான் முடிச்சுகள் , முனைதால் அவிழும். சோதனை தீ சுட்டால் தான் வாழ்க்கைப் பொன் ஒளியிடும். தற்கொலை எண்ணத்தை தாமதிக்காமல் தகர்த்து விட வழி செய்.நீரும் நெருப்பும் இனியாவது நிம்மதியாய் வாழட்டும்.

அச்சமின்மையின் அடிப்படை அலகு

எது அச்சமின்மை ? அல்லது எது தைரியம் - அச்சமில்லாது இருப்பது தைரியமா என்றால் இல்லை. தைரியமாக இருப்பது என்பது அச்சபடுகின்ற போதும் சரியானதை செய்வது.

ஒவ்வொரு அச்சம் நிறைந்த சூழ்நிலையும் நாம் மேற்கொண்டு வளருவதட்கே நமக்கு உதவுகிறது.

நாம் சில வேளைகளில் தமக்கு வருகிற சூழ்நிலையும் நாம் சவால்கள், பிரச்சனைகள் போன்றவை அவைகளாகவே முடிந்து விடும் என்று எண்ணுகிறோம்.

இது ஒருபோதும் நடப்பதில்லை நாம் எதிர்பார்க்கிற மாதிரியே வாழ்கை அமைந்துவிட வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை.

வாழ்க்கையிலிருந்து படிப்படியாக நாம் பாடம் பெறுகிறபோது நமது வாழ்கை மகத்தான மாறிவிடுகிறது.

ஒருமுறை நாம் எதிர்கொண்ட பிரச்னை நமக்கு திரும்பி வருகிறபோது அடுத்த முறை இதே பிரச்னை வந்தால் அதை எவ்வாறு சமாளிப்பது என்று நாம் கற்றுகொள்கிறோம்.

நமது பலத்தை, எப்படி பணத்தை முதலீடு செய்வது போல செய்வது என்று அறிந்து கொள்கிறோம் .

மென்மையாக வண்டியை ஒட்டிக்கொண்டு போவது என்பது கடினமான சாலைக்கு சரிவராது. எப்போதெல்லாம் எதிர்ப்பு வருகிறதோ அப்போதெல்லாம் நம்மால் இந்த எல்லை வரைக்கும் தான் செல்ல இயலும் எம்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.

அச்சம் தரத்தக்க சூழ்நிலையில் நமது இதயம் நின்று நின்று போலாமா வேண்டாமா என்று கேட்டுக்கொண்டே போகிறது. நமது கால்கள் நடுங்க தொடக்கி விடுகின்றன . கைகள் உதறல் எடுக்கின்றன .

ஆனால் நாம் என்ன அறிந்து கொள்ள வேண்டும் என்றால் இம்மாதிரியான சூழ்நிலைக்கு உடனே பயன்பட்டு விடவேண்டும். அதுதான் நம்பிக்கையை வரவழைத்து கொள்வது ஆகும்.

இப்போது மீண்டும் தைரியம் என்பது அச்சமின்மை அல்ல அச்சத்தோடு இருந்தாலும் சரியானதை செய்வது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

நாம் அச்சத்தோடு இருந்தாலும் சரியானதையே சொல்ல வேண்டும் ,சரியானதையே செய்ய வேண்டும். அப்படியென்றால் தான் வாழ்கை நமக்கு வழிவிடும்.

மனிதர்கள் வேண்டும் என்றே நம்மை காயபடுதுவதட்கான எல்லா முயற்சிகளையும்
மேட்கொல்லுவார்கள்.

ரவிவர்மாவின் ஓவியத்தை கிறுக்கல் என்று பழிப்பார்கள் . ஆனால் தாங்கள் தகாளிகமாக உயர்ந்த நினைத்த ஒருவரின் கரிக் கோடுகளை மாபெரும் ஓவியம் என்று பேசுவார்கள்.

இவர்கள் உண்மையை ஊனபடுதுகிறார்கள். வாழுகிற காலத்தில் மின்மினிகள் போல கானபடுகிற இவர்களை வரலாறு தனது குப்பை கூடைய்கலிலே எடுத்து கொள்வதற்கான இடத்தை போட்டு வைத்திருக்கிறது என்பதை இவர்கள் இறுதிவரைக்கும் அறியமாட்டார்கள்.

பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தது கடல் . இது ஆண் பறவையின் கோபத்தை இன்னும் அதிகபடுதியது உன்னை என்ன செய்கிறேன் பார் என்று சொல்லிவிட்டு அந்த பறவை தனது சின்ன மூக்கால் ஒரு கிளிஞ்சலை எடுத்து கடல்நீரை அதில் கொண்டு வந்து கரையில் கொட்டியது. பிறகு மீண்டும் கடலுக்கு சென்று , கிளிஞ்சலை கொஞ்சம் நீரை கொண்டு வந்து கரையில் கொட்டியது. இப்படியே அது கடல்நீர் முழுவதையும் கொண்டு வெளியே கொட்டிவிட போவதாக சூளுரைத்து.

"இது நடக்கிற காரியமா....? இது என்ன பைத்தியகாரத்தனம் ....? இப்படியே செய்து கொண்டிருந்தாள் , நீதான் சுருண்டு விழுந்து செத்து போவாய் என்று மற்ற பறவைகள் கூறின . என்று, அதை அந்த பறவை காதிலேயே வாங்கவில்லை.

இப்படி ஒரு நாள் , இரண்டு நாள் அல்ல.... பல மாத காலம் தொடர்ந்து செய்வதை பார்த்து ஆச்சர்யமடைந்த கருட பகவான் ,அந்த பறவையின் எதிரில் தோன்றி,"நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்.....? என்று கேட்டார். அதற்கு அந்த பறவை, "என்னை தொந்தரவு செய்யாதீர்கள் .சுற்றி நின்று கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பறவைகளிடம் விசாரித்து தெரிந்து கொள்ளுங்க..."என்று கூறிவிட்டு பழயபடி செயலில் இறங்கியது.

இந்த சிறிய பறவையின் மனஉறுதியை கண்டு பிரமித்து போன கருட பகவான் , நேராக மகாவிச்னுவிடம் சென்று நடந்த விஷத்தை சொல்ல, காவிச்னுவிடம் கடலுக்கு கட்டளையிட .... கடல் மன்னிப்பு கேட்டதுடன் , தான் அபகரித்த முட்டைகளை அந்த பரவையிடமே திருப்பி தந்தது.

நம்பிக்கையோடு எந்த காரியத்தை செய்தாலும் வெற்றி நிச்சயம்தான் இந்த கதை.. மலையையே பெயர்த்தெடுக்கும் காரியமாக இருந்தாலும் , அதை பார்த்து நாம் மலைத்து விட கூடாது." உலகில் மிகப்பெரிய காரியங்களை செய்து முடிததட்கான ஆரம்ப வேலைகள் அனைத்தும் சிறிய அளவில் தான் ஆரம்பித்தன.

மகாத்மா காந்தி தண்டி யாத்திரை தொடங்கியபோது , அவரோடு கலந்து கொண்டவர்கள் ஒரு சிலரே...... என்று, போகப் போக வேடிக்கை பார்க்க வந்தவர்கள் கூட அந்த யாத்திரையில் சேர்ந்தனர். அந்த யாத்திரை தண்டி கடற்கரையை அடையும்போது மிக பெரிய ஜனசமுதிரமாக மாறியிருந்தது என்பது வரலாறு.

"என் வழி நேர் வழி "

சமீபத்தில் ஒரு வீட்டுக்கு சென்றிருந்தேன். அங்கெ இருந்த பெரியவர்கள் பேச்சோடு பேச்சாக தங்கள் பிள்ளை நுருகு பார்ப்பதை பற்றி பெருமையாக சொன்னார்கள். "இதை ஏன் உட்சாகபடுதுகிறீர்கள்...? என்று கேடதட்கு ."இந்தக் காலத்தில் வாழைபழம் மாதிரி பிள்ளைகளை வளர்த்தால், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் சமாளித்து முன்னுக்கு வரமுடியாது " என்று பதில் சொன்னார்கள். " இது என்ன விபரீத எண்ணம் ....? என்று தோன்றுகிறது.

பரிட்சைக்கான கேள்வித்தாளை சமூகவிரோதிகள் அரசுக்கு விற்பனை செய்தால், அதை எவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் இந்த காலத்தில் சில பெற்றோர்கள் தயாராகிவிட்டனர். பரிட்சையில் மாடிகொல்லாமல் காப்பி அடிக்க முடியும் என்றால் , அதைக்கூட உற்சாகப்படுத்த சிலே பெற்றோர்கள் தயாராகிவிடிருபது எனக்கு அதிர்ச்சியை தருகிறது.

"இந்த காலத்தில் சத்தியம் தர்மம்.... இதற்கெல்லாம் மதிப்பே இல்லையப்பா ... ஊரை அடிச்சு உலையில போடுரவனுக்குதான் காலம்...? என்று ஜனங்கள் சர்வசாதாரணமாக பேச தொடங்கிவிட்டனர் .

அவன் ஒரு சிற்றரசன் நீதி தவறாதவன் . தனக்கு பிறகு தன்னுடைய பிள்ளைகள் தான் என்றில்லை ... நீதி தவறாத ஒருவன் தான் நாட்டின் மன்னனாக வரவேண்டும் என்று நினைத்தான். அதற்காக அவன் ஒரு வினோதமான போட்டியை நடத்தினான்.

சில சிறுவர்களை தேர்ந்தெடுத்து அழைத்து அவர்கள் அனைவரிடமும் ஒரு செடியின் விதையை கொடுத்து "இதை நன்றாக வளர்த்து, ஆறு மாதத்திற்கு பிறகு என்னிடம் கொண்டு வாருங்கள் " என்று சொன்னான். அவர்களின் லிங்கு என்ற சிறுவனும் ஒருவன் .

லிங்கு, மன்னன் கொடுத்த விதையை ஒரு பழதொட்டியில் புதைத்து தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்தான். மற்ற சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்ட விதைகள் எல்லாம் துளிர் விட்டு முளைக்க ஆரம்பித்தன .

ஆனால் , லிங்குவின் விதை மட்டும் முளைக்கவே இல்லை . இதனால் வருத்தம் அடைந்த லிங்கு என்னெனவோ முயற்சி செய்து பார்த்தும், விதை முளைபதட்கான இந்த அறிகுறியும் தென்படவே இல்லை.மன்னன் கொடுத்த ஆறு மாத காலமும் முடிவடைந்தது.

" நான் கொடுத்த விதையை ஏன் பாலடிதாய் ..? எனக் கேட்டு மன்னன், தனக்கு தண்டனை கொடுதுவிடுவானோ என்று லிங்கு பயந்தான். ஆனால் மன்னனோ, லிங்கு கொண்டுவந்த ஜாடி வெறுமையாக இருபத்தி கண்டு ," உன் பெயர் என்ன ..?" என்று கேட்டான். "லிங்கு" என்று பதற்றத்தோடு சிறுவன் பதில் சொல்ல... மன்னர் உரத்த குரலில் அறிவித்தார்.."எனக்கு பின் லிங்குதான் இந்த நாட்டின் மன்னன்.."

நன்றி - சிநேகிதி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்