/* up Facebook

May 4, 2011

புகலிடத்தில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான முதற் தமிழ் பெண் ராதிகா


கனடாவில் நடந்து முடிந்த தேர்தலில் ராதிகா சிற்சபைஈசன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் வெற்றி பெற்றுள்ளார்.

கனடா நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட முதற் தமிழ் பெண் இவர். 29 வயதே ஆன ராதிகா சிற்சபைஈசன் இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையில் பிறந்த ராதிகா 5வது அகவையில் கனடாவுக்குக் குடி பெயர்ந்தார். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பட்டப் படிப்பை மேற்கொண்டு, பின்னர் கார்ல்ட்டன் பல்கலைக்கழகத்தில் தொடந்து கல்வி கற்று வர்த்தகவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார். தொடர்ந்து குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்.

ராதிகா புதிய சனநாயகக் கட்சியில் 2004 ஆம் ஆண்டில் இணைந்தார். எட் புரோட்பெண்ட்டுக்கு ஆதர்வாக அவர் பிரச்சாரம் செய்தார். அன்றில் இருந்து அக்கட்சியின் பல செயற்பாடுகளில் தீவிரமாகப் பங்குபற்றி வருகிறார்.

nநடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் படி கன்சவேட்டிவ் கட்சி 165 ஆசனங்களையும், புதிய ஜனநாயகக் கட்சி 104 ஆசனங்களையும், லிபரல் கட்சி 34 ஆசனங்களையும், புளக் கியூபெக்குவா 2 ஆசனங்களையும் பெற்றது. பசுமைக் கட்சி 1 ஆசனத்தையும் தக்க வைத்துள்ளன.

ரொறன்ரோ பெரும்பாகத்தில் இடம்பெற்ற தேர்தலில் ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சிற்சபைஈசன் 17200 வாக்குகளை பெற்று புதிய ஜனநாயகக் கட்சியின் வாக்கு வங்கியை மேற்படி தொகுதியில் கணிசமாக அதிகரிக்க வைத்து இத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவரது தொகுதியில் 90 வீதத்துக்கும் அதிகமானோர் சிறுபான்மை வெளிநாட்டவர்களாவர். கடந்த தேர்தலில் 4900 வாக்குக்களைப் மாத்திரமே இந்தக் கட்சி பெற்றிருந்தது.

இதர பல தொகுதிகளிலும் புதிய ஜனநாயகக் கட்சி, கன்சவேட்டிவ் கட்சி, லிபரல் கட்சி ஆகியன மிக நெருக்கமான வாக்குகளைப் பெற்றிருந்ததுடன், நூற்றுக்கணக்கான வாக்குகளே வெற்றியை நிர்ணயித்தன.

இதேவேளை கன்சவேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட கவன் பரஞ்சோதி 11,039 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக புதிய ஜனநாயகக் கட்சி தெரிவாகியுள்ளது. இதன் பிரகாரம் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக் லெய்டன் எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார். புதிய ஜனநாயகக் கட்சி உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக தெரிவாவது இதுவே முதற்தடவை.

கன்சவேட்டிவ் கட்சி பெரும்பாண்மை அரசை அமைப்பது அகதிகளுக்கும் புதிய குடிவரவாளர்களிற்கும் பாதகமாக அமையும் என்பதும் கடுமையான சட்டங்களை கொண்டுவர வழிவகுக்கும் என்பதும் கருத்தாகவுள்ளது.

லிபரல் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவரை ராதிகா போட்டியிட்ட தொகுதியில் நிறுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெற்றிருந்தால் தமிழர்களின் வாக்குப் பிரிந்து கன்சவேட்டிவ் கட்சியே இத் தொகுதியைக் கைப்பற்றி தமிழர் ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாவதை இவ்விடயத்தில் ஆழமாகச் சிந்தித்துச் செயற்பட்ட கனடியத் தமிழ்க் காங்கிரஸ் போன்ற அமைப்புக்களின் முயற்சி இவ்வாறான ஒரு நிலை தோன்றாமல் தவிர்த்தது.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை புதிய ஜனநாயகக் கட்சியே பெருமளவிலான வாக்குகளைக் கவர்ந்துள்ளது. 70 ஆசனங்களை மேலதிகமாக பாராளுமன்றத்தில் பெற்று இரண்டாவது பெரும் கட்சியாக வந்துள்ளது. அதுபோன்றே பசுமைக் கட்சியும் முதன்முறையாக பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.

கனடியத் தமிழர்கள் தமது வாழ்வை கனடாவில் வளப்படுத்தவும் தாயக நாட்டில் உள்ள மக்களின் உரிமைக்காக பாடுபடவும் கறையில்லாத, பக்குவமான, ஆழமான சிந்தனையுடன் செயல்படுவதே வெற்றியளிக்கும். அந்த வகையில் ராதிகா சரியான நபரே எனத் தோன்றுகின்றது. எது எப்படியானாலும் முதன்முறையாக வட அமெரிக்க நாட்டில் தமிழர் ஒருவர் பாராளமன்றம் செல்கின்றார் என்பது உலகத் தமிழர் அனைவருக்கும் பெருமையான செய்தியாகும். எந்தவிதக் கறையும் இல்லாமல், இளமையும் பொறுமையும் திறமையும் கொண்ட ராதிகாவின் அரசியல் பயணத்துக்கு எமது நல்வாழ்த்துக்கள். தமிழர் மற்றும் தமிழர் அல்லாத கனடா வாழ் மக்களிடையே நற்பணி செய்யவும், பல சாதனைகள் புரியவும் வாழ்த்துவோமாக.

அவர் பற்றிய வீடியோக்கள் இங்கு இணைக்கப்படுகின்றன.

ராதிகாவின் இணையத்தளம்

ராதிகாவின் முகநூல்

ராதிகாவின் டுவிட்டர்

ராதிகாவின் யுடியூப்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்