/* up Facebook

Mar 10, 2011

பெண்களுக்கு எச்சரிக்கை :- கர்ப்பகாலத்தில் ஆன்டிபயாடிக் - டாக்டர் K.A. சௌடையா


அறிவியல் மருத்துவ முறையில் கிருமிகளை அழிப்பதற்காக வீரிய மிக்க செயற்கை வேதியியல் மருந்துகள் நோயாளருக்களிக்கப் படுகின்றன. அறிவியலினறியாமையே இதன் காரணமாகும். நம் உடலில் பல்வகைகளிலான பண்புகளையும் கொண்ட கிருமிகள் இடைவெளியில்லாமல் பரவியுள்ளன. இவைகளில் பல நன்மைகளை நம்முடலுக்கு நாமறியாமலே செய்கின்றன. எடுத்துக்காட்டாக பெருங்குடலில் உள்ள சில கிருமிகள் விட்டமின் எனப்படும் இயற்கை வேதிப்பொருளை உற்பத்தி செய்கின்றன. தீமை தரும் தன்மை கொண்ட கிருமிகள் நம் உடலுக்கு தானாகவே இவைகள் தீமைகளைச் செய்வதில்லை. உள்ளுடலில் அழுக்குகள் சேர்ந்து அவைகள் கெட்ட ழுகி விடுமானால் அக்கழிவுகளையுண்டு உள்ளுடலை சுத்தப்படுத்தும் தோட்டி போலவே செயல்படுகின்றன. உள்ளுடல் சுத்தமா யுள்ளவர்களை இக்கிருமிகள் ஒரு சதமும் பாதிப்பதே இல்லை. இந்தக் கிருமிகளைப் பற்றி பூதாகரமாக்கி ஒரு அபாய அறிவிப்பை (ஆய்வுக் கூடங்களினால்) வெளியிடப்பட்டு கிருமிகளையழித்திட போருக்குத் தயாராகிறது அறிவியல் (?) மருத்துவம். இது கற்கால நடைமுறைதான் ஆனால் விஞ்ஞான மென்ற பெயரால் நடக்கிறது. இவ்வறிவுப்புக் களைக் கேட்டு பதறுபவர்கள் நாட்டில் பெரும் எண்ணிக்கையிலுள்ளனர். (புலியடித்து சாவோரை விட கிலியடித்து சாவோரே அதிகம்)

மாத்திரை வடிவில் உட்கொள்ளப்படும் ஆ12 உடலால் நிராகரிக்கப்பட்டு உடலை விட்டு வெளியேற்றப்பட்டுவிடுகின்றன என்பதினால் அவை வீணாகி விடுகின்றன. இச்சத்து நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தி அதனியக்கத்தை மேம்படுத்துவதற்கு தவுகிறது. இச்சத்து உடலில் இதரசத்துக் களைப் போல தேக்கப் படுவதில்லை. ஆனால் அன்றாடம் இச்சத்து மிகக் குறைந்தளவில் நம் உடலுக்குத் தேவைப் படுகிறது. நாம் உண்ணும் உணவுப்பண்டங்கள் சில வற்றில் சிறு அளவில் இச்சத்துள்ளது. சமை யல் வெப்பத்தினாலிச் சத்து அவ்வுணவுப் பொருட்களிலிருந்து நீங்கி வீணாக்கப்பட்டு விடுகிறது. கிருமி களினால் நம்முடலால் தயாரித்தளிக்கப்படு மிச் சத்து நம் உடலுக்கு குறிப்பாக நரம்புகளுக்கு நன்மை தருகிறது. (மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவதுபோல்) கிருமிகளை அழித்து ஒழித்து விடும் நோக்குடன் வீரிய மிக்க ஆன்டி பயாடிக் வேதி நச்சுக்களால் நோயாளருக்களிக்கப்பட்டு நன்மை மற்றும் தீமை தருமனைத்துக் கிருமிகளையும் ஒட்டு மொத்தமாக அழித் தொழிப்பதென்பதுதான் அறிவியல் சார்ந்த மருத்துவமா? இதே அறிவியல் மருத்துவ ஆய்வறிக்கையொன்றில் கர்ப்பக் காலத்திலெடுத்துக் கொள்ளப்படும். ஆண்டிபயாடிக்குகள் தாய்க்கும் சேய்க்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய தென கூறப்பட்டுள்ளது. (மனசாட்சியும் சமூக அக்கரையும் கொண்டவர்களால் மேற்கொள்ளப் பட்டுள்ள ஆய்விதென்பது தெளிவாகிறது).

கர்ப்பகாலத்தில் ஆன்டிபயாடிக் பயன் படுத்துவது குறித்து பெரியளவில் ஆய்வு நடத்தப்பட்டது. இவ்வாய்வு முடிவுகளினடிப் படையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை சிசு பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு தர நிர்ணயமளித்து வருகின்றன. ஆனால் இந்த தர நிர்ணயத்தில் எந்த ஆன்டிபயாடிக் மருந்தும் ஏ கிரேடு பெறவில்லை.

இந்த ஆய்வில் வெளியிட்டுள்ள தகவல்கள்:

ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களைவிட பிறவிக் குறைபாடுடன் பிறந்த குழந்தைகளின் தாய்மார்கள் சல்பா வகை மருந்துகள் அல்லது நைட்ரோப்யூரன்ஸ் ஆன்டி பயாடிக் மருந்துகளைக் கர்ப்ப காலத்தில் உட்கொண்டுள்ளனர். பிறவிக் குறைபாடு மற்றும் சிறுநீரக பாதை தொற்றுக்கான சிகிச்சை இரண்டையும் தொடர்புபடுத்தி தற்போதுதான் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

சல்பா வகை மருந்துகளால் அரிய மூளை நோய்கள், இதயநோய் மற்றும் மூளைவளர்ச்சிக் குறைபாடு போன்ற நோய்களும் நைட்ரோ ப்யூரன்டைன்ஸ் மருந்துகளால் இதய நோய்களேற்படுவது இரண்டல்லது மூன்று மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதென இவ்வாய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் குடிமக்களுக்காக தடை செய்யப்பட்ட நடைமுறைகள் இராணுவத்தில் பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதிலொன்றாக பலரைக் காப்பதற்காக சிலரைப் பலிகொடுக்கலாமென்ற (எழுதப்படா) சட்டம் இராணுவ மேலதிகாரிகளால் செயல்படுத்தப்படுகிறது. இதே போல் கெடுதல் தரும் கிருமிகளையழித் தொழிப்பதற்காக மனிதனின் விலைமதித்திட இயலா நோயெதிர்ப்பாற்றலைத் தாக்கியழித்து மனிதனை நடைபிணமாக அறிவியல் மருத்துவம் மாற்றுகிறது. ஆன்டிபயாடிக் மருந்துகளை அடிக்கடி பயன்படுத்தும் மனிதனை மிகச்சிறு நோய்க்காரணியும் சீரழித்து சின்னாபின்னப்படுத்திவிடும். தாய்மார்களே கர்ப்பகாலத்தில்-(கொலைகார) ஆன்டிபயாடிக் பயன்படுத்துவதை முற்றுமாகத் தவிர்த்து உள்ளுடல் தூய்மையடையும் வகையிலான இயற்கை வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள். இதனால் தாயும் சேயும் பேராபத்துக்களிலிருந்து தப்ப வழியேற்படும். எதிர்கால உங்கள் வழித்தோன்றல்களின் உடலாரோக்கிமென்னும் அரிய செல்வத்தை அழிக்கும் ஆன்டி பயாடிக்கினால் சீரழிக்கும் செயலை மறந்தும் மேற்கொள்ளாதீர்கள்.

நன்றி - மாற்று மருத்துவம் 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்