/* up Facebook

Mar 2, 2011

ஏதிர்பார்க்காதொரு வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயம்


ஆறு வருடங்களுக்கு முன்பு அனுமுகர்ஜியினுடைய அழகான முகத்தில் அமிலம் வீசப்பட்டது. அவளுடைய பேசும் கண்கள் பார்வையிழந்தன, தீர்க்கமான மூக்கு தற்சமயம் இருதுவாரங்களைக் கொண்ட சின்னதுண்டமாக முகத்தில் ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறது, வெளுப்பான சருமம் சுருங்கி கருத்திருக்கிறது. கண்ணீர் மல்கமல்க ஓவென்று சத்தம்போட்டு அழ வேண்டும்போல ஆசையிருந்தாலும் அவளால் அழக்கூட முடியாது, அப்படியே கண்ணீர் விட்டாலும் அது சருமத்தில் பட்டு முகம் எரிந்து சிவப்பாகி விடுகிறது. பொதுவாக உடலை மறைத்துக் கொள்ளுவதற்கு ஆடை தேவைப்படுகிறது, அனுவுக்கு முகத்துக்கும் சேர்த்து ஆடை வாங்க வேண்டியிருக்கிறது. 

“நான் ரொம்ப அழகானவள், வீதியில் நடந்தால் என்னுடைய அழகைப் பலபேர்கள் ரசித்திருக்கிறார்கள், பாராட்டியிருக்கிறார்கள். அழகைப் பார்த்து பொறாமைப்பட்ட சகஊழியருடைய சகோதரன் என்னுடைய முகத்தில் அமிலத்தை வீசி எறிந்தான். ஊசிகுத்துவதைப் போல டெல்லிகுளிர், 2004ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி இரவுப் பொழுதில் எனக்கு இப்படிப்பட்ட துர்பாக்கியம் நிகழ்ந்தது. இந்த அசம்பாவிதம் என்னுடைய கனவுகளை நொறுக்கியது, வாழ்க்கையை Nன்யமாக்கியது. எத்தனை முறை தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறேன், ஒவ்வொரு முறையும் அக்கம்பக்கத்துக்காரர்கள் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எவரேனும் என்னைப் பார்த்தவுடன் பயந்து சத்தம்போட்டு அலறுகிறார்கள், அதனால்தான் என்னுடைய முகம் எப்போதும் துணிக்குள் புதைந்து கிடக்கிறது...... கடந்த ஆறு வருடங்களாக நடந்ததை நினைத்து நினைத்து மனம் புண்ணாகி விட்டது, வருங்காலத்தை நினைத்துப் பார்த்தால் பயம் பிடித்துக் கொள்கிறதென்று”அனுவினுடைய வார்த்தைகள் மனதை கனக்க வைக்கிறது.


அனுமுகர்ஜி கொல்கத்தாவைச் சேர்ந்தவர். அவருடைய பெற்றார்கள் கார் விபத்தில் மரணமடைந்தார்கள். பத்து வயதிருக்கும் போது அனுமுகர்ஜி தம்பியோடு டெல்லியிலுள்ள மெஹரௌலி (Mehrauli) என்ற இடத்திலிருக்கும் அத்தை வீட்டுக்கு வந்தார். பாதியில் பள்ளிப்படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம். மெஹரௌலியை அடுத்து கோவிந்தபுரியிலுள்ள (Govindpuri)  ஆடைகள் தைத்துக் கொடுக்கிற தொழிற்சாலையொன்றில் (Garment factory)  வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு ரூ 2,000- வருமானமாக கொடுக்கப்பட்டது. கிடைத்த வருவாயில் ஒரு பங்கை அத்தையிடம் கொடுத்து விட்டு, மிச்சமுள்ளதை தம்பியினுடைய படிப்புக்கு செலவழித்தார். 

“பருவமடைந்த பின்பு என்னுடைய உடலும், முகமும் அப்படியொரு அழகான தோற்றத்தைப் பெற்றது. அழகை மையமாக வைத்துக்கொண்டு பதினைந்தாவது வயதில் டிவியில் நடிக்க வேண்டுமென்கிற ஆசையோடு மும்பைக்குச் சென்றேன். எவ்வளவு முயன்றும் டிவியில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், மதுபானங்கள் வழங்குமிடத்தில் (Bar) நடனத்தை ஆடிப் பிழைத்துக் கொண்டேன். பெற்றார்கள் பரதநாட்டியம் கற்றுக் கொடுத்திருந்தார்கள். சின்ன வயதில் கற்றுக் கொண்ட கலையை வயித்துப் பிழைப்புக்காக பயன்படுத்திக் கொண்டேன். வருவாயும் அதிகரித்தது, சேமிக்கவும் தொடங்கினேன். இப்படியே இரண்டரை வருடகால வாழ்க்கை மும்பையில் ஓடியது. டில்லியிலுள்ள ராஜ;தூத் ஓட்டலில் (Rajdoor Hotel) நடனக்காரிகள் தேவைப்படுகிறது என்கிற விளம்பரத்தைப் பார்த்தேன். உடனே டில்லிக்கு புறப்பட்டேன், ராஜ;தூத்தில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்டேன். இரண்டு நாட்கள் கழித்து ராஜ;தூத் ஓட்டல,; இன்டர்வியூவில் தேர்வு பெற்றிருக்கிறேனென்று தகவலைக் கொடுத்தது. அன்றிலிருந்து ராஜதூத்தில், என்னுடைய இரவுப்பொழுது நடனம் தவறாமல் நிகழ்ந்தது. ஐந்நூறு ஆம்பிளைங்களுக்கு முன் நடனமாடிக் காட்டினேன், பார்க்க வந்தவர்கள் நோட்டுக்களை வீசி எறிந்தார்கள், பாதி எனக்கும், மீதி ஒட்டல் முதலாளிக்கும் உடமையாகியது. வருமானம் அதிகரித்ததால் சிறிய விடுதி ஒன்றை வாங்கிக் கொண்டு தம்பியோடு குடிபுகுந்தேன். திரைப்படங்களில் நடனமாடுவதற்காக லஜ;பத்நகர் ஏஜென்ஸியொன்றில் (Lajpat Nagar Agency)  பெயரை பதிவு செய்து கொண்டேன். ராஜ;தூத்தில் ஒரு பகுதியில் என்னுடைய நடனமும், மற்றொன்றில் சிம்ரனுடைய நடனமும் நிகழ்ந்து வந்தன. சிம்ரனைவிட நான் அழகாக இருந்தேன்..... அவளுடைய நடனத்தைவிட என்னுடைய நடனம் சிறப்பாக இருந்தது..... என்னுடைய நடனத்தைப் பார்க்க வருகை தந்தர்வர்களும் அதிகமாகயிருந்தார்கள். என்னுடைய வளர்ச்சியைக் கண்டு பொறhமை கொண்ட சிம்ரன் அவ்வப்போது மிரட்டினார். 2004ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ராஜ;தூத்துக்குச் செல்ல ஆட்டோவுக்காக காத்துக் கொண்டிருந்தேன்......... திடீரென்று ஒரு இளைஞன் போர்வையிலிருந்து பாட்டிலைத் திறந்து அமிலத்தை என் முகத்தில் வீசி எறிந்தான்......... ஒரு கணம் அவனை உற்றுப் பார்த்தேன், அவன் வேறு எவருமில்லை, சிம்ரனுடைய தம்பியென்று உறுதி படுத்திக் கொண்டேன். என்னுடைய ஆட்டத்தைப் பார்க்க வழக்கமாக வந்து கொண்டிருந்தவர்களில் ஒரு நல்லவர் சுமார் இரண்டு வருடங்களாக பணம் கொடுத்து உதவி செய்து வந்தார். அவருடைய வியாபாரம் படுத்துக் கொண்டதால் தற்சமயம் அவரும் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டாரென்று” அனுவினுடைய சோகக்கதை ஒருகணம் சிலிர்க்க வைக்கிறது. 


“தம்பியின் வருமானத்தில் வாழ்க்கை ஓடுகிறது. ஆறுமாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் பெரியவர்கள் குடித்தனமிருந்தார்கள். அவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள்;. திடீரென்று வீடு மாற்றிக்கொண்டு போகவேண்டியதால் அவர்கள் ராதாகிருஷ்ண மூர்த்தியை எனக்கு கொடுத்துட்டு விடைபெற்றார்கள். ‘உன்னுடைய பாரத்தை கடவுளிடம் கொடுத்துடு...... அவர்மீது நம்பிக்கை வை........ எல்லாம் அவர் பார்த்துப்பார்......’ என்று பெரியவர்கள் சொன்ன வார்த்தைகளிலிருந்து புதிய தெம்பைப் பெற்றேன். அதிக நேரம் கடவுளை பூஜிக்கிறேன், பிரார்த்தனை செய்கிறேன், தியானம் செய்கிறேன், அளவற்ற நம்பிக்கை வைத்திருக்கிறேன். வீட்டுக்கு வந்தவர்கள் ராதாகிருஷ்ண மூர்த்தி அழகாக இருக்கிறதென்று பாராட்டியிருக்கிறார்கள், மூர்திதியினுடைய அழகை பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டாலும் அது நிறைவேறாது, அவருடைய அழகை தொட்டுதொட்டு உணருகிறேன். சிம்ரனுக்கும், அவளுடைய சகோதரனுக்கும் கீழ்நிதிமன்றம் 5வருடங்கள் கடுமையான சிறைத்தண்டனை வழங்கியிருக்கிறது, ஆனால் வாழ்நாள் முழுவதும் எவரும் நினைத்துப்பார்க்க முடியாதொரு வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கிறது, எனினும் நீதிமன்றம் வழங்கிய தண்டனை நியாயமாகயிருக்கிறதா?” அனுவினுடைய கேள்வி நம்மை சிந்திக்க வைக்கிறது. அனுவின் பிரார்த்தனை நிறைவேற அனைவரும் அவரோடு இணைந்து பிரார்த்தனை செய்வோம்....... 


பெண்ணியத்திற்காக


சந்தியா கிரிதர் 
(நன்றி - இந்தியன் எக்ஸ்பிரஸ்) 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்