/* up Facebook

Feb 28, 2011

யங் ஏசியா டெலிவிஷனில் உமாவின் பேட்டி

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம், உள்ளுராட்சித் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு குறித்தும், இலங்கையின் அபிவிருத்தி குறித்தும் யங் ஏசியா டெலிவிஷன் ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சி இங்கு பதிவு செய்கிறோம்.

இதில் புகலிட பெண்ணிய செயற்பாட்டளரும், "பெண்கள் சந்திப்பு" குழுவை சேர்ந்தவருமான உமாவின் நேர்காணலும் இடம்பெறுகிறது.- பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் - தேவை சிந்தனை மாற்றம் 

- படகு தரிப்பிடமின்றி சாய்ந்தமருது மீனவர்கள் 

- மிதிவெடிகளை தாண்டிய வாழ்க்கை 

- புலம்பெயர் சந்திப்பில் உமா சானிகா எழுத்தாளர் ஜேர்மன் 

...மேலும்

Feb 26, 2011

ட்ரோஜனின் உரையாடலொன்று - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி


இது என்ன விசித்திரமான தேசம்

கைக் குழந்தைகள் தவிர்த்து

ஆண் வாடையேதுமில்லை

எல்லோருமே பெண்கள்

வயதானவர்கள்

நடுத்தர வயதுடையோர்

யுவதிகள்

எல்லோருமே பெண்கள்

விழிகளில் வியப்பைத்தேக்கிய நண்ப

பாழ்பட்டுச் சிதைந்து வெறுமையான

இவ் விசித்திர நகரில்

எஞ்சியுள்ள

எல்லோருமே விதவைகள்

எமக்கெனவிருந்த கணவர்களைத் தந்தையரைச்

சகோதரரைப் புத்திரர்களை

சீருடை அணிவித்து

வீரப் பெயர்கள் சூட்டி

மரியாதை வேட்டுக்களின் மத்தியில்

புதைத்திட்டோம்

செத்துப்போனவர்களாக

மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்)

தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
...மேலும்

Feb 25, 2011

யுத்தத்தின் பின் இலங்கைப் பெண்களின் வாழ்வு நிலை. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

19- 20 .02.2011 பாரிஸ் இலக்கியச்சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை

ஓரு நாட்டில் உள்ள பெண்களின் பொருளாதார, அரசியல் வாழ்வின் நிலைப்பாடுகள்; எப்படி இருக்கின்றன என்ற கேள்விகளுக்குப் பதில் அந்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் நிலை பொருளாதார, சமுகவாழ்க்கை நிலைகள் எப்படி இருக்கின்றன என்பதில் தங்கியிருக்கின்றன.

உலகத்தில் நடந்த பாரிய விடுதலைப்போராட்டங்கள், புரட்சிகளின்பின் பெண்களின் நிலையில் ஏற்படும் பல தரப்பட்ட மாற்றங்களும் இலங்கையிலும் நடந்து கொண்டிருக்கின்றன. உயிர் அழிவுகள், அங்கவீனங்கள், உடைமைகளின் அழிவுகள், இடம் பெயர்வுகள் என்பன மிக அளவில் இலங்கையில் நடந்திருக்கின்றன. இதன் விளைவுகளால் மக்களின் சாதாரண வாழ்க்கை அசாதாரணமாவிருக்கின்றது. உடைந்த கட்டிடங்களைத் திருப்பிக் கட்டலாம். இடம் பெயர்ந்தவர்கள் காலக் கிராமத்தில் தங்கள் இடங்களுக்கத் திரும்பிப்போகலாம். ஆனால் நடந்து முடிந்தபோரில் அடைந்த உயிர் இழப்புக்கள் இலங்கையின் சமுதாய வாழ்க்கைமுறைகளை அளவிடமுடியாத விதத்தில் மாற்றியமைத்திருக்கிறது.

தொடர்ந்து நடந்த முப்பது வருடபோர் நிலையால் பட்ட அவதிகள் மட்டமல்லாது அத்துடன் இலங்கையை மிகவும் அழிவுக்குள்ளாக்கிய சுனாமி அனர்த்தம், தற்போது வந்துபோன பாரிய வெள்ளம் என்பவற்றால் முக்கியமாகப் பாதிக்கப் பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளும் என்றால் அது மிகையாகாது.

இலங்கையின் சனத் தொகை, கடந்த வருடக்கணிப்பின்படி 20,410074 ஆகும். இதில் 52 விகிதமானவர்கள் பெண்கள். இவர்களில் 23 விகிதமானவர்கள் கடந்த காலத்தில் நடந்து முடிந்த பலவிதமான அனர்த்தங்களாலும் குடும்பத்தைச்சுமக்கும் குடும்பத்தலைவியான பணிக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள் இவர்களில் 50 விகிமானோர் 30 வயதுக்குற்பட்டவர்கள் என அறிக்கைகள் சொல்கின்றன.

இலங்கையில் தொடர்ந்த போரின் காரணமாக விதவையாக்கப்பட்டவர்கள் 100.000க்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது. அதில் 90.000 போர்வரையிலுள்ளவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கிறார்கள். போரில் பங்கேற்ற பெண்களில் கைதிகளானவர்கள் 2.000 புனர்வாழ்வுத்திட்டங்களின் பின் விடுதலை செய்யப் படுகிறார்கள். சில போராளிகளின் மனைவிமார் இன்னும் தடுப்புக்காவல்களில் வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

2004ம் ஆண்டில் கிழக்குப்போராளிகள் பிரிந்தபோது 'பழையபோராளிப்' பெண்களானவர்கள் கிட்டத்தட்ட 3000மேல். போரால் அங்கவீனமானவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள். அனாதையாக்கப்பட்ட பெண்குழந்தைகள் பல நூறாகும் கிழக்கு மாகாணத்தின் தலைநகரை ஒட்டிமட்டும் 14 சிறுவர் நிலையங்கள் இருக்கின்றன அதில் கணிசமான தொகையினர் பெண்களாகும்.

பல துறைகளிலும் அல்லற்படும் பெண்களுக்கு உதவி செய்யப் பல குழுக்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமான ஒரு சிறந்த வேலைப்பாட்டை முன்னேடுக்கப் பல நிர்வாகத் தடைகள் இருக்கின்றன. லஞ்ச ஊழல்கள் பொதுமக்களை மிகவும் வாட்டுகிறது. எதற்கும் பணம் எதிர்பார்ப்பது என்பது அரச ஊழியர்களிடம் தடையின்றி காணப்படுவதான புகார்கள் வருகின்றன.

இலங்கையில் நடைமுறையிலிருக்கும் பண்பாடு , கலாச்சார விழுமியங்கள் ஆண்களை முன்னிலைப் படுத்தி அவர்களின் ஆளுமைகளை கேள்;விக்குறியின்ற ஏற்றுக்கொள்வதால் எப்படித்தான் பல அரசியற் சட்டங்கள் பெண்களின் முன்னேற்றத்தை ஒட்டி எழுதப்;பட்டிருந்தாலும் அவை நடைமுறைக்குக் கொண்டு வரும் சாத்தியங்கள் பல காரணிகளால் முட்டுக்கட்டைகளைப் போடுகின்றன.

உதாரணமாக இன்று போரின் நிமித்தம் இடம் பெயர்ந்த குடும்பங்களில் பெண்கள் படும் பல தொல்லைகள் விபரிக்கப்பட்டன. அதாவது, தங்களின் சொந்த இடங்களுக்குப்போகத் தேவையான பத்திரங்களைத் திரட்டுவதிலிருந்து அதைக்கொண்டு போய்த்தங்கள் தேவைகளை முடிக்கும் வரை நிர்வாகத்தில் மேன்மைநிலையிலிருக்கும் உத்தியோகத்தர்களால் உதாசீனங்களுக்கும் லஞச எதிர்பார்ப்புக்களுக்கும் ஆளாகும்; நிலை ஏராளம் என்று சொல்லப்பட்டது.

இலங்கைச் சட்டத்தின்படி:

இன்று பெண்கள் எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கும் ஆதிக்கத்தை நடைமுறைப் படுத்தும் அரச நிhவாகத் துறையில் பல பெண்கள் பெரிய இடங்களில் இல்லாததும் ஒரு காரணமென்று சொல்லப் பட்டது. இவற்றை எடுத்து விவாதிக்கும் பாராளுமன்றத் தரத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாததும் அதனால் பெண்கள் பிச்சினைகள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாமல் மறைந்து போகின்றன. திருமதி பண்டாரநாயக்காவைத் தங்கள் முதற் பெண்மணியாகத் தெரிவு செய்த நாட்டில் இன்று பெண்களின் பிரச்சினைகளைத் தீ+ர்க்க ஒரு ஆளுமையான பெண்தலைமை பாராளுமன்றத்தில் கிடையாது.

இந்தியாவில் பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் 33விகித பாராளுமன்ற இடங்களும் பாகிஸ்தானில் 33விகித இடங்களும், நேபாளத்தில ;20 விகித இடங்களும் பங்களதேசில் 25விகித இடங்களும் இலங்கைச் சட்டத்தின்படி 25விகிதமான இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டாலும் 4 விகிதமான பெண்களே இலங்கைப் பாராளுமன்றத்திற்குப்போக முடிகிறது. 2விகிதம் மட்டும் உள்ளூர்ஆட்சிக்குள் நுழையமுடிகிறது. பெண்கள் அரசியலில் பிரவேசிப்பது என்பது ஆண்களின் தயவைப்பொறுத்திருக்கிறது. பெண்களின் படிப்பு அரசியல் திறமை என்ற பரிமாணத்தில் தெரிவு செய்யப் படாமல் அரசியலில் இருக்கும் ஆண்களின் உறவினர்களும் சினேகிதிகளும் தேர்தலில் நிற்கத் தெரிவு செய்யப்படுகிறார்கள். பாராளுமன்றக்கட்சிகள் பெண்களுக்காக 6விதமான இடத்தைக்கூட அனுமதிக்காதிருக்கிறார்கள்.

இதனால் இன்று பெண்கள் முகம் கொடுக்கும் பாரதூரமான பொருளாதார, சமுகப்பிரச்சினைகள் தீர்க்கப்பட ஆண்களின் புரிந்துணர்தலும் உதவியும் தேவைப்படுகிறது.

முப்பது வருடங்கள் தொடர்ந்து நடந்த சீர்;நிலையற்ற பல மாற்றங்கள் பழமை தழுவிய குடும்ப அமைப்புக்களைப் பெரிதும் பாதித்திருக்கின்றன. 1971ல் நடந்த Nஐவிபியினரின் போராட்டத்தால் பல நூற்றுக்கணக்கான உழைக்கும் வயதுடைய இளம் தலைமுறை அழிக்கப்பட்டது. பல நூற்றுக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்டார்கள். அதைத்தொடர்ந்து வடக்கிலும் கிழக்கிலும் தெடர்ந்த போராட்டத்தால் உழைக்கும் வயதுடைய பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப் பட்டார்கள். பல்லாயிரம் இளம் தலைமுறையினர் நாட்டை விட்டுச் சென்றார்கள்.

இப்படியான மாற்றங்களால் தென்கிழக்காசிய நாடுகளில் பொருளாதாரத் துறையில் இலங்கையால் மற்ற நாடுகள்போல் துரிதமாக இதுவரை முன்னேற முடியவில்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தால் 1.8 மில்லியன் இலங்கையர் அன்னிய நாடுகளில் பணிபுரிகிறார்கள். இதில் 500.000 பெண்கள் மத்திய தரைக்கடல் நாடுகளில் வேலைக்குப்போகிறார்கள் இவர்களால் 3.5 பில்லியன் டொலர்ஸ் அன்னிய செலவாணி இலங்கைக்குக் கிடைக்கிறது. ஆனால் வெளிநாடு செல்லும் பெண்களின் துயர்கள் பலபத்திரிகைகளில் தினமும் வந்து கொண்டிருந்தாலும் இலங்கையிலுள்ள வறுமை காரணமாகப் பெண்கள் வெளிநாடு சென்று கொண்டேயிருக்கிறார்கள்.

இவர்களில் பெரும்பான்மையாகச் சிங்கள முஸ்லிம் பெண்கள் அடங்குவர். அவர்களின் வயது 18லிருந்து 40 வயது வரையிருக்கும். பெரும்பாலோனோர் தாய்களாக இருப்பதாலும் அவர்கள் தங்கள் குழந்தைகளை உற்றார் உறவினர் பாதுகாப்பில் விட்டுச்செல்வதாலும் பல தரப்பட்ட உள உடல் நலப் பிரச்சினைகளுக்குக் குழந்தைகள் உள்ளாகிறார்கள்

வெளிநாட்டுக்கு வேலைக்குப்போகும் பெண்களுக்கு பெரும்பாலான இடங்களில் நிலை மிகப் பரிதாபமாகவிருக்கிறது. இவர்கள் எதிர்நோக்கும் பல தரப்பட்ட உடல் உள, பாலியல் வன் முறைகள் இலங்கைப் பத்திரிகைகளில் அடிக்கடி வந்தாலும் அந்தச் செய்திகளையும் பார்த்து விட்டும், வெளிநாடுகளில் பணிப்;பெண்ணாக வேலைபார்;க்க ஆயிரக்கணக்கான பெண்கள் முன்வருவதற்கு இலங்கையின் வறுமை அளப்பரியதாகவிருக்கிறது. பணிப் பெண்களாகவிருக்கும் பெண்களை மிருகத்தனமாக அடித்தல், அவர்களின் உடம்பில் ஆணிகளை அடித்து சித்திரவதை செய்தல், அவர்களின்மேல் கொலைக்குற்றம் சுமத்துதல் என்பன் மத்திய தரைக்கடல் நாடுகளில் பரவலாக நடக்கின்றன. 2007ம்; ஆண்டு சவுதி அரேபியாவில் வேலைக்குப்போய் அங்கு கொலைக் குற்றம் சாட்டப்பட்ட றிஷானா நபீக்க் என்ற இளம் பெண்ணின் ; நிலை அதற்கு ஒரு உதாரணமாகும்

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி 2004-5ல் 796 குற்றச்சாட்டுக்கள் வந்தன. அதில் சவுதி அரேபியாவிலிருந்து மட்டும் 40 விகிதமான புகார்கள் வருகின்றன. சிலர் வேலைபார்க்கப் போகுமிடங்களிலிருந்து பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகுவதுமட்டுமல்லாது இலங்கைக்கு வரும்போது அவர்கள் வேலை செய்யும் இடங்களிலுள்ள ஆண்களின் கொடுமைக்குள்ளான துன்பத்தால் கர்;ப்பம் அடைந்து குழந்தைகளையும் கொண்டுவருவதால் அவர்கள் இலங்கையிலுள்ள அவர்களின் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். சில வருடங்களுக்கு முன் இப்படிப் பிறந்த 4000 குழந்தைகளை இலங்கை அரசு இலங்கைப் பிரiஐகளாக ஏற்கவேண்டி வந்தது.

ஓவ்வொரு நாளும் சிங்கள இளைஞர்கள் இத்தாலி போன்ற நாடுகளுக்கும் தமிழ் இளைஞர்கள் பல வேறுபட்ட நாடுகளுக்கும் நூற்றக்கணக்கான தொகையில் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். போரின் இழப்புக்கள் மட்டுமல்லாது இப்படியான காரணிகளாலும் இலங்கையில் சனத்தொகையில் இன்று ஆண்களின் தொகையைவிடப் பெண்களின் தொகை அதிகமாகும்.

இதனால் வரும் திருமணப் பிரச்சினைகள் பிரமாண்டமானவை. திருமணமாத பெண்களின் தொகை கூடிக்கொண்டு வருகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய பிரச்சினையாகும். இதில் ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

பெண்கள் மருத்துவத்துறை, ஆசிரியத் துறைகளை நாடுகிறார்கள். அதை விட்டால் வேறு எதுவும் பெரிதாக இல்லை. ஓருகாலத்தில் வெளிநாட்டுதவியுடன் நடத்தப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களில் பெண்களுக்கு வேலை கிடைத்தது. இன்று ஒரு குறிப்பிட்ட இடங்களில் தவிர மற்ற இடங்களில் எந்த என் ஐp ஓ வும் கிடையாது.

பொருளாதாரத்தை முன்னெடுக்கும் சாதனங்களாக இந்தியாவில் செயற்படும் பெரிய தொழிற்சாலைகள், கணனி நிலயங்கள், அத்துடன் பெருந்தோட்ட விவசாயத் திட்டங்கள் என்பனவற்றைச செயல் முறைபப்படுத்தஅரசு முயன்று கொண்டிருந்தாலும் அண்மையில் தொடர்ந்த இயற்கை அனர்த்தங்கள் அத்திட்டங்களைப் பல வருடங்கள் பின் தள்ளிப் போடப்படவைத்து விட்டன என்று தான் சொல்லவேண்டும்.

இலங்கையரின் ஒருவருட சராசரி சம்பளம் 2.200 டொலர்ஸ் என்று சொல்லப்படுகிறது;. இந்த வருமானத்தை 4.000 டொலர்ஸாக வளர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகச் சொல் லப்படுகிறது.

இலங்கையின் அன்றாட வாழ்க்கைக்கு 39.000 ரூபாய்கள் சராசரியாகத் தேவைப்படுவதாகச்சொன்னாலும் குடும்பத்தைத் தாங்கும் பல பெண்களிற் பெரும்பாலானவர்கள் 9.000 ரூபாய்கள் உழைப்பதும் அரிதே. அதிலும் கட்டுநாயக்காவை அண்டியிருக்கும் உடுப்புத்தைக்கும் தொழிற்சாலைகளில் 100.000 பெண்கள் அளவில்வேலை செய்கிறார்கள். ஆரம்ப சம்பளம் 3500 ரூபாயிலிருந்து பின்னர் சராசரி சம்பளம் 9.000 ரூபாய்களாகும். அண்மையில் இந்தத் தொழிற்சாலையில் 15.000 வெற்றிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டாலும் அங்கு கொடுக்கும் சம்பளம் மிக்குறைவாகவிப்பதால்; இலங்கையின் தென்பகுதியிலுள்ள ஏழைப்பெண்கள் பலர் வெளிநாடுகளுக்குப்பணிப் பெண்களாகப்போகிறார்கள்.

தமிழ்ப்பகுதிகளில் 89 000 விதவைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. போராளிகளின் குடும்பம் அல்லது போரினால் விதவையாக்கப் பட்டவர்களாகவிருக்கிறார்கள்.. இலங்கையில் அதிலும் தமிழ்ப் பகுதிகளில் 53விகிதமான குடும்பங்கள் பெண்களின் தலைமையில் வாழ்கின்றன.

இவர்களுக்கென்று கிடைக்கும் நிவாரண நிதிகள் மிகச்சொற்பமே. வடக்கில் 60 விகிதமான வர்களின் வருமானம்; 9000 ரூபாய்க்கும் குறைய இருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பல படித்த பெண்கள் கடைகளிலும் தனியார் நிறுவனங்களிலும்; மிகக் குறைந்த சம்பளத்தில் வேலைபார்க்கிறார்கள்.

சத்துள்ள உணவு வாங்க வசதியற்ற நிலை பெரிதாகவிருக்கிறது. போதிய அளவு போசாக்குணவு இல்லாததால் இலங்கை பூராவும் போசாக்கற்ற பெண்களும் குழந்தைகளும் பல நோய்களுக்கும் ஆளாகிறார்கள் என்று சுகாதார அறிக்கைகள சொல்கின்றன. இலங்கையிலுள்ள குழந்தைகளில் 29 விகிதம் போசாக்கற்றவர்களாக இருக்கிறார்கள் அந்த நிலை வடக்கிலும் கிழக்கிலும் வாழும் குழந்தைகளிடம் இன்னும் மோசமாக சராசரி 50 விதமாகக் காணப்படுகிறது.

உயர்ந்து கொண்டு போகும் விலைவாசியால் அன்றாட வாழ்வே மிகக் கஷ்டமாவிருக்கிறது. பல விதவைகளுக்கு அவர்களின் வாழ்வுதவிகளுக்குக் கொடுக்கப் பட்ட ஆடுமாடு, கோழிகள் அண்மைய இயற்கை அனர்த்தால் அழிந்து விட்டன. ஓரு இலட்சத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அழிந்துவிட்டன. ஆயிரக்கணக்கா ஏக்கர் பயிர் நிலம் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறது. தென்னை மரங்கள் ஒருவித நோயற் பாதிக்கப் பட்டிருக்கின்றன.
விதவைகளுக்கும் ஏழைகளுக்கும் கட்டிக்கொடுத்த பல வீடுகளளை வெள்ளம் பாதித்தவிட்டது.

தொழில் உதவி என்ற பெயரில் வடக்கிலிருந்து பழைய போராளிப்பெண்களைத் தென்பகுதிகளுக்குக் கொண்டுவந்து வேலை கொடுப்பதாகச்சொல்லப்பட்டது. விசாரித்துப் பார்த்தபோது இவர்களும் இந்தத் துணிதைக்கும் ப்றி ட்ரேட் சோன் (Free Trade Zone) பகுதிகளில் வேலைக்கமர்த்தப்படுகிறார்கள் என்று தெரியவந்தது. இந்தத் தொழிற்சாலைகளில் வேலைசெய்பவர்களுக்கு எந்த விமான தொழிலாளர் பாதுகாப்பும் கிடையாது. மிகவும் மோசமான விதத்தில் வேலைவாங்கப்படுவார்கள். இங்கிருக்கும் நிலையைமாற்றிச் சம்பளத்தைக் கூட்டிப்பெண்களுக்கு உதவி செய்யும் திட்டங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் இருப்பதாகத்தெரியவில்லை.

வறுமை காரணமாகவும் வேறுபல காரணிகளாலும் வட பகுதியில் கொள்ளை கொலைகள் நடக்கின்றன. இலங்கையில் பல இடங்களிலும் பாலியற்தொழிலிலும் கணிசமான பெண்கள் ஈடுபடுவதாச் செய்திகள் சொல்கின்றன. நாடுபூராக எடுத்த கணிப்பில் கிட்டத்தட்ட 40.000 பெண்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தமிழ்ப்பகுதிகளிலும் இவை இருக்கின்றன என்று சொல்லபட்டது.

வடக்கில் அதிக அளவில் வரும் உல்லாசப் பிரயாணிகளாற் பல மாற்றங்கள் நடக்கின்றன. பல ஹோட்டல்கள், றெஸ்ட் ஹவுஸ்கள் ஸ்தாபிக்கப் படுகின்றன. பழைய வாழ்க்கை முறைகள் உடைபடுகின்றன. இளைஞர்கள் டிஸ்கோ போன்ற விடயங்களில் நாட்டம் கொள்வதால் இளம் பெண்களும் அவற்றாற் கவரப்படலாம் என்ற பயம் சமூகத்தில் வந்திருக்கிறது.

சமூக மாற்றங்கள்;:

போர்க்காலத்தில் புலிகள் இளம் வயதினரைப் பலவந்தமாகக் கடத்திக்கொண்டு போவதற்குப் பயந்து பல பெற்றோர் தங்கள் பெண்களுக்குச்சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்;. பல திருமணங்கள் பெண்களின் சம்மதமின்றி நடந்தன. இன்று அப்படித் திருமணம் செய்து வைக்கப்பட்ட பல இளம் பெண்கள் இன்று விவாகரத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். விவாகரத்து என்பது மிகவும் மோசமான சமூக வரைமீறலாகக் கருதப்படுவதால் இந்தப்பெண்களின் போராட்டம் தோல்வியில் முடியலாம். இலங்கையிலுள்ள பெண்களின் பிரச்சினைகள் வடக்கு கிழக்கு தெற்கு சார்ந்த பெண்களின் பிரச்சினைகளாகப் பார்க்கப் படாமல் ஒரு தேசியப் பிரச்சினையாகப் பார்க்கும் சமூகப்பார்வையுள்ள பெண்தலைவிகள் இலங்கையில் ஒன்று சேர்ந்து போராடவேண்டும். அதற்கான அமைப்புக்களை உருவாக்கிப் போராடவேண்டும். பெண்களால் நடத்தப்படும் பல என்ஐpஓக்கள் அங்கும் இங்குமாய் இருக்கின்றன. இவர்களின் வேலைப்பாடும் குரல்களும் ஒருமித்து ஒலிக்கவேண்டும்.

கடந்த முப்பது வருடங்களில் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் தமிழர்கள் பல நாடுகளுக்கும் அகதிகளாகப்போயிருக்கிறார்கள். இவர்களிற் பெரும்பாலோர் மேற்குடி சார்ந்தவர்கள். வடக்கிலுள்ள இவர்களின் சொந்தங்கள் பொருளாதாரத்தில் பரவாயில்லாமல் வாழ்கிறார்கள் ஆனால் இன்று வடக்கில் இருக்கும் மக்களில் கணிசமான தொகையினர் விளிம்பு நிலை மக்கள். இவர்களின் நிலை பழையபடியே மிகவும் துக்கமான நிலையில் இருக்கிறது.. பொருளாதார வளர்ச்சியோ கல்வியில் மேம்பாடோ பெரிய அளவில் நடக்காததால் பெரும்பாலான விளிம்பு நிலை மக்கள் வறுமைக்கோட்டுக்குள் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

வடக்கிலுள்ள 20.000 மீனவர்களில், பாதுகாப்பு வலயங்கள் காரணமாக 6000 மேற்பட்டவர்கள் இன்னும் இடம் பெயர்ந்திருக்கிறார்கள் இவர்களின் நிலை இன்னும் பரிதாபமாவிருக்கிறது. அத்துடன் இலங்கை மீனவர்களின் தொழிலில் இந்திய மீவர்களின் பலம்வாய்ந்த படகுகளுடன் வந்து எல்லை தாண்டி மீன் பிடித்துத் தொல்லைகள் வருவதால் மீன்பிடித் தொழிலில் பல பிரச்சினை வருவதாக மீனவர்கள் சொன்னார்கள். எழுவைதீவு போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்களின் நிலை பரிதாபமாகவிருக்கிறது.

மலையகப்பெண்களின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் நடப்பதாக இல்லை. தொடர்ந்தும் பாhரிய வறுமைக்கோட்டுக்குள்ளேயே வாழ்கிறார்கள். போசாக்கற்ற பெண்களும் குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகாத பெண்களும் கூடுதலாக வாழும் மலையகமாகும் அதிலும் மலையகத் தமிழ் மக்கள் கூடுதலாகவாழும் நுவரெலியாவில் பல பிரச்சினைகள் மக்களைப் பாதிக்கிறது.
;
வடக்கில் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் சில உதவிகளை பெண்களுக்குச் செய்து கொடுப்பதுபோல் கிழக்கில் நடக்கவில்லை; குறிப்பாக அண்மையில் நடந்த வெள்ளப் பெருக்கும்போது கிழக்கில் உள்ள ஏழைத்தமிழர்கள் பட்டினியைச்சந்தித்து வாடினார்கள். ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள் நீரில் அமிழ்ந்துவிட்டுவிட்டது. பயிர்கள் நாசமாகிவிட்டன.வயலின் உரிமையாளர்களும் வயலை நம்பி வாழ்பவர்களும் வறுமையை எதிர்நோக்குகிறார்கள். இவர்களுக்குக் கிடைக்கும் உதவி மிகச்சொற்பமே.

பயிர்கள் அழிந்ததினால் இன்னும் சிலமாதங்களில் இலங்கையில் பரவப்போகும் பட்டினிக்கொடுமைக்குக் குழந்தைகளும் தாய்களும் ஆளாகப்போகிறார்கள்.

தமிழருக்கான பிரச்சினைகளைப் பார்ப்பதில் அரசியல் கலந்திருக்கிறது. ஓட்டுமொத்தமாகச் சொல்லப்போனால் வடக்கு கிழக்குப் பிரிவினை மனப்பான்மை இன்னும் இருப்பதால் தமிழர்களுக்கான பொதுப் பிரச்சினைகள் சரியான விதத்தில் கையாளப்படவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். தமிழ் அரசியற் தலைவர்கள் அங்கொன்றும் இங்கொற்றுமாகப் பல கருத்துக்களை அவ்வப்போது சொல்லிவிட்டுப்போகிறார்கள் . தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்க்கவோ அல்லது பொருளாதாரப் பிரச்சினைகளை அலசி ஆராயவோ தமிழ்த் தலைமைகளிடமிருந்து ஒரு தீர்கக்மான திட்ட அமைப்பு முன்வைக்கப் படவில்லை. முப்பது வருடப்போருக்குப் பின்னும் ஒர ஆணித்தரமான குரல் வரவில்லை என்பது எனது கருத்தாகும்.முரண்பாட்டு அரசியல்பேசும் நேரத்தைக் குறைத்து மக்களுக்குக் கிடைக்கவேண்டிய உதவிகளை எடுக்கப் பல தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் கருத்தைத் திருப்பினால் எத்தனையோ மாற்றங்களை மக்களுக்குச் செய்யலாம்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் ஊர்களில் உள்ள கோயில்களைப் பல வித்திலும் அழகுபடுத்த பல நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். புதிய கோபுரங்கள் வானைமுட்டுகின்றன் அதே நேரம் வறுமையால் வாடும் ஏழைத்தமிழரின் எண்ணிக்கையும் வானைமுட்டுகிறது.

19- 20 .02.2011 பாரிஸ் இலக்கியச்சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை


நன்றி தேனீ
...மேலும்

Feb 24, 2011

லீனா மணிமேகலையின் இயக்கத்தில் 'செங்கடல்' திரைப்படம் - வெளி ரங்கராஜன்


மாத்தம்மா, பறை, பலிபீடம், தேவதைகள் போன்ற ஆவணப்படங்கள் மூலம் சமூகத்தின் சில பாரம்பரியமான கண்மூடிப் பார்வைகளால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் சிற்றினக்குழுக்களின் வாழ்நிலையை கவனப்படுத்திய லீனா மணிமேகலையின் இந்த 'செங்கடல்' திரைப்படம் கடலின் நடுவே வதைபடும் தனுஷ்கோடி மீனவர்களின் ஜீவ மரணப் போராட்டங்களையும், ஆயுதத்தாலும் இனவெறியாலும் அலைக்கழிக்கப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தனுஷ்கோடி கரையில் ஒதுங்கும் ஈழத் தமிழ் அகதிகளின் அவல வாழ்க்கையையும் ஒளிவுமறைவுகள் ஏதுமின்றி நேரடியாகப் பேசுகிறது.

1964-ல் ஆழிப் பேரலையால் நிர்மூலமாக்கப்பட்ட தனுஷ்கோடி கிராமம் கம்பிப்பாடு தனது சிதைவுகளுடனும், மண்ணின் மீனவக் குடும்பங்களுடனும் இன்னும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கடலைத் தவிர வேறு எதையும் அறியாத அந்த மக்கள் மீண்டும் மீண்டும் உயிரைப் பணயம் வைத்து ஒரு பிடி உணவுக்காக கடல்நீரில் இறங்குகிறார்கள். அவர்கள் விடுதலைப் புலியென்றோ, கடத்தல்காரனென்றோ, உளவாளியென்றோ சந்தேகத்தின் பேரால் இலங்கைக் கடற்படையால் அடித்தோ, கொல்லப்பட்டோ, கொள்ளையடிக்கப்பட்டோ துன்புறுத்தப்படுவதுதான் அங்கு அன்றாட நிகழ்வாக இருக்கிறது. சூழலுக்கும், புயலுக்கும், மழைக்கும் போலவே குண்டடிகளுக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும் அஞ்சாமல்தான் அவர்கள் தங்கள் வாழ்க்கைப்பாட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. கடல் வழியே ஈழத்து அகதிகள் வந்து நிறையும் இடமாகவும் அது இருக்கிறது. நம்பிக்கைகள் சிதைந்த நிலையிலும், தங்கள் குழந்தைகளுக்காக தங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் அந்த மீனவர்கள் மற்றும் அகதிகளின் வாழ்க்கை அதிகார வர்க்கத்தின் அசட்டையினாலும் கடற்படை, மற்றும் காவற்படையின் கண்காணிப்புகளாலும் இழைக்கப்படும் அவமானங்களாலும் மேலும் மாசுபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த வாழ்க்கை அவலங்கள் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்கிற முனைப்புடன் படம் பிடிக்கக் களமிறங்கிய தன்னார்வச் செயலாளி லீனா மணிமேகலை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்கள் பிணமாகத் திரும்புவதையும், மனைவியரின் ஓலங்களையும், நிர்க்கதியான குழந்தைகளையும், நீதி கேட்டு ஊர்வலம் செல்வோர் காவல் துறையால் ஒடுக்கப்படுவதையும் அருகிருந்து பார்த்துப் படமெடுக்கும் நிலையில் தானே ஒரு கையறு நிலை கொண்ட பார்வையாளராகிறார். மீனவர்களின் நல்வாழ்வுக்காக போராடும் மீனவ இனக் குப்புசாமி, கரையொதுங்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவிக் கரம் நீட்டி முகாமுக்கு வழி நடத்தும் தொண்டு நிறுவன ரோஸ்மேரி, யுத்தத்தாலும், துரத்தும் மரணங்களாலும் உருக்குலைந்து கிறுக்கனான ஈழ அகதி சூரி, பள்ளிக்குச் செல்ல மனமில்லாமல் கடற்கரை உயிரினங்களுடன் ஓடித் திரியும் சிறுவர்கள் என வாழ்வுணர்வுத் துடிப்புகளும் அங்கே உண்டு. ஆனால் மனித நேயமற்ற நம்முடைய அரசு மற்றும் கண்காணிப்பு நிறுவனங்கள் இந்த அவலங்களைத் தடுத்து நிறுத்தவோ, நாடி வரும் அகதிகளுக்கு கெளரவமான வாழ்க்கை அமைத்துத் தரவோ இயலாதவைகளாகவே இருக்கின்றன. ஆனால் உண்மை நிலவரங்களைத் தெரியப்படுத்த போராடுபவர்களை மிரட்டவும், தடுத்து நிறுத்தவும் அவைகளால் முடியும். எல்லாம் அப்படியே விட்டுவிட்டு கனத்த மனத்துடன் திரும்பத்தான் முடிகிறது போராளிகளுக்கு. ஆனால் நிரந்தர அகதியான சூரியின் வடிவில் மீனவச் சிறுவர்களின் மனமகிழ்ச்சித் துணையாக ரேடியோப் பெட்டியுடன் எங்கும் பிரசன்னமாக உள்ளது ஒரு நம்பிக்கைக் கீற்று.

உண்மை நிலவரங்கள் அறியப்படுவதைத் தடுக்க நினைக்கும் அரசு அமைப்புகளுக்கு எதிராக மனித உரிமை இயக்கங்களின் துணையுடன் ஒரு பரந்த அணியை முன்னிறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையிலும் தடைகள் நிறைந்த தனி மனித முனைப்பின் தோற்றத்தையே இயக்குனரின் பாத்திரச் சித்திரிப்பு உருவாக்கினாலும் ராமேஸ்வரம் மீனவர்கள், கிடாத்திருக்கை கிராமக் கூத்துக் கலைஞர்கள், நாடகக் குழுக்களின் நடிகர்கள், எழுத்தாளர்கள் என ஒரு கூட்டியக்கம் சாத்தியப்பட்டிருக்றிது. முக்கியமாக கம்பிப்பாடு மீனவர் சமூகமே ஒட்டு மொத்த தயாரிப்பிலும் பங்கு கொண்டிருக்கிறது. பல கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் மண்டபம் முகாம் ஈழத்து அகதிகளும், கடலிலும் சுடுமணலிலும் கூட சிறுவர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சதா ஓலமிடும் கடல் முழக்கங்களுக்கு இடையே இச்செங்கடல் திரைப்படம் மரணம் துரத்திக் கொண்டிருக்கும் வலிகள் நிறைந்த ஒரு உண்மை வாழ்வை அதன் பல்வேறு முகங்களுடன் பதிவு மிகைப்படுத்தலோ, உணர்ச்சி மயமாக்கலோ இன்றி பதிவு செய்துள்ளது. ஷோபா சக்தி நடிகராகவும் கதை வசனகர்த்தாவாகவும் ஒரு சிறப்பான கலைப்பங்களிப்பு செய்துள்ளார்.

தன்னுடைய வழக்கமான பிற்போக்குப் பார்வையுடன் நம்முடைய சென்ஸார் போர்டு இப்படத்துக்கு அனுமதி மறுத்துள்ளளது. அரசாங்கங்கள் முறைதவறி விமர்சிக்கப்படுவதும், திரைப்படத்தில் சில இடங்களில் உபயோகப்படுத்தப்படும் மொழி unparliamentary யாக இருப்பதும் தடைக்கான காரணங்களாக காட்டப்பட்டுள்ளன. பெருவாரியான மக்களைச் சென்றடையும் வர்த்தகப் படங்களில் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச வசனங்களையும், கட்டற்ற வன்முறையையும் அனுமதிக்கும் சென்ஸார் போர்டு எளிய மக்கள் பேசும் இயல்பான கொச்சைப் பேச்சுவழக்கை unparliamentary யாகப் பார்ப்பது எவ்வளவு பெரிய முரண்? வட்டார வழக்குகளை ஏற்றுக் கொள்ளத் தெரியாத கலை உணர்வற்ற ஒரு மேட்டிமைக் குழுதான் இதுபோன்ற படங்களின் தரத்தை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. மேலும் அரசாங்கங்கள் மக்களுடைய நலன்களுக்கு எதிராக செயல்படும்போது அவைகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு இல்லையா? வளர்ச்சி பெற்ற ஜனநாயக அமைப்புகளில் எல்லாம் கருத்து சுதந்திரம், விலகல், மறுப்பு இவை குறித்த ஆழமான கருத்தாக்கங்கள் வலுப்பெற்று வரும் இன்றைய காலகட்டத்தில் நம்முடைய அரசு அமைப்புகள் தற்குறிகளாய் More loyal than the king அணுகுமுறையையே பின்பற்றி வருகின்றன. அருந்ததிராய், பினாயக் சென் போன்ற மனித உரிமைப் போராளிகளையே தேசத்துரோக வழக்குகளால் முடக்க முடியுமென்றால் இங்கே எந்தக் கருத்துரிமைதான் சாத்தியம்?

நன்றி - தீராநதி - பிப்ரவரி 2011
...மேலும்

Feb 23, 2011

10 வயது மகளை பாலியல் வல்லுறவு செய்த தகப்பன்


கத்தியைக்காட்டி தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தகப்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் நாவலபிடிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த கொடுமையை புரிந்த தகப்பன் பல மாதங்களாக மகளை இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளதாக விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

நாவலபிட்டிய பகுதியை சேர்ந்த இந்த பேர்வழிக்கு 3 மகள்கள் உள்ளனர். தாயார் தோட்ட வேலைக்கு சென்றதன் பின்னர் மகளை இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியிருப்பதாக தெரியவருகிறது.

ஒருநாள் தாயார் வேலைக்கு சென்று இடையில் திரும்பிய வேளை நேரடியாக இந்த சம்பவத்தை கண்டு ஆத்திரமுற்றிருக்கிறார். அதனை தொடர்ந்து நிகழ்ந்த சண்டைக்குப்பின் தகப்பன் தப்பி தலைமறைவாகியிருக்கிறார்.

அவ்வாறு ஒளிந்து இருந்த இடத்திலிருந்த பொலிசாரிடம் பிடிபட்டுள்ளார். பாலியல் வல்லுறவுக்கு உள்ளான 10 வயது சிறுமி இப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

http://www.ahrchk.net/ua/mainfile.php/2010/3657/
...மேலும்

Feb 22, 2011

'படைப்பிலக்கியத்தில் அடையாளத்தை முன்னிலைப்படுத்துவது ஒருவகை வியாபாரம்' - லதா, சிங்கப்பூர்


இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த லதா 1982ஆம் ஆண்டு குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார். இருபது ஆண்டுகளாக சிங்கப்பூர் தமிழ்முரசு பத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றும் இவர் 'தீவெளி' (கவிதைகள் 2003), 'பாம்புக் காட்டில் ஒரு தாழை' (கவிதைகள் 2004) என்ற இரு கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார். அண்மையில் இவரது சிறுகதை தொகுதிக்கு (நான் கொலை செய்யும் பெண்கள்) 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு பத்தாயிரம் சிங்கப்பூர் டாலரைப் பெற்றுத் தந்தது. லதாவின் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் கணையாழி, காலச்சுவடு, உயிர்நிழல், வல்லினம், குங்குமம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது தீவெளி நூல் தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வல்லினம்: கதை, கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

லதா: ஒவ்வொரு கணமும் நம்மைச் சுற்றி பல நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டே இருக்கின்றன. செய்தியாளராய் அவற்றின் புறத்தோற்றங்களைக் கவனிக்கும் அதே நேரத்தில் அவற்றின் அகத்தோற்றங்களிலும் ஆழ்கிறேன். அவை அந்தரங்கமானதாகவும் நுட்பங்கள் நிறைந்ததாகவும் அதனூடே பயணிக்கும் போது ஒரு மர்மமான இருண்ட சுரங்கத்தில் பயணிப்பது போலவும் தோன்றும். ஒரு சாதாரண விபத்தில் மரணம் அடைந்தவரின் துண்டான கையில் இறுகி இருக்கும் கை கடிகாரத்தில் தொடங்குகின்றது இந்தப் பயணம். அவை தொடுக்கும் புதிர் கதைகளாகவும் கவிதைகளாகவும் பரிணமிக்கின்றன. வாழ்க்கை கொடுக்கும் புதிர்களுக்குப் பதில் தேட இருக்கும் நிறைய வழிகளில் எழுத்தும் ஒன்றாக இருக்கிறது.

வல்லினம்: 'நான் கொலை செய்யும் பெண்கள்' என்ற உங்கள் சிறுகதை தொகுதியில் பெரும்பாலான பெண்கள் பலவீனமானவர்களாகவும், துன்பம் மிகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள். சிங்கப்பூர் பெண்களின் மனநிலை இவ்வாறுதான் இருக்கிறதா?

லதா: முதலில் ஒரு படைப்பை வைத்து எந்தப் பொதுப்படையான தீர்மானத்துக்கும் வரமுடியாது, வரக்கூடாது. இந்தக் கதைகளில் பிரச்சனைகள் மட்டுமே பேசப்படவில்லை. மேலும் கதைகளின் களம் சிங்கப் பூராக இருந்தாலும் கருவும் சிந்தனையும் எண்ணப் போக்குகளும் உலகப்பொதுவானவை. இவர்கள் முழுக்க முழுக்க பலவீனமானவர்கள் மட்டுமே அல்ல. எல்லா மனிதர்களுக்கும் உள்ள பலவீனங்கள்தான். இவர் களுக்கும் உள்ளன. ஆனால் இவர்கள் அவற்றிலிருந்து மீண்டுவர முயற்சி செய்கிறார்கள். அதற்கான பாதையைத் தேடுகிறார்கள். 'நாளை ஒரு விடுதலை' கதையில் வரும்வேலைக்காரி முதலாளியிடம் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்போதும் 'தமிழுக்கு அமுதென்று பேர்' கதையில் நீர்படிவத்தில் தனது பெயரை அப்பெண் எழுதும் போதும் 'அறை' கதையில் தன் வீட்டில் நிகழ்ந்த ஒரு மரணத்தைத் தொடர்ந்த அடுத்த நாள் வாழ்வுக்கு ஒரு பெண் தயாராகும் போதும் துளியளவான நம்பிக்கை அரும்புவதை பார்க்க முடியும். பெண்களின் கண்ணீர் வெறும் சோகத்தின் அடையாளமாக மட்டும் இருந்துவிட முடியாது அல்லவா? ஒவ்வொரு மனிதருக்கும் பல அடையாளங்கள் இருக்கும்.சுயம் இருக்கும்.வாழ்க்கையும் வாழும் சூழலும் சமூகமும் அந்தச் சுயத்தையும் இயல்பான அடையாளங்களை மெல்லச் சிதைக்கின்றன, அல்லது சிதையச்செய்கின்றன அல்லது நாமே அழித்துக்கொள் கிறோம். இப்படி ஒரு பெண்ணின் சுயம் அழிக்கப்படுவது, அழிப்பது, தொலைவது, மாற்றம் பெறுவதைத்தான் 'நான் கொலை செய்யும் பெண்கள்' எனச் சொல்கிறேன்.

வல்லினம்: பெண்களின் விடிவு, மிகை உணர்ச்சியான சோகம் என தமிழ் சீரியல் கதைகள் போல அமைந்திருக்கும் மலேசிய- சிங்கப்பூர் சிறுகதைகளுக்கு மத்தியில் அவர்கள் வாழ்வை அதன் அழகியலோடு நீங்கள் வெளிப்படுத்தியுள் ளீர்கள்.

லதா: வாழ்வில் நிரந்தர உணர்ச்சியென ஏதும் இருப்பதில்லை. உணர்ச்சி என்பதே மாறக்கூடியதுதான். எனது மிகச்சிறிய வயதில் பள்ளித் தோழி ஒருத்தி என்னிடம் தனது மாமா குத்துச்சண்டை வீரர் என பொய் சொல்லி பயமுறுத்துவாள். எனக்கு விருப்பமில்லாவிட் டாலும் அவள் என்னைத் தன் தோழியாகத் தேர்ந் தெடுத்ததனால் எந்நேரமும் தன்னுடனே இருக்கும்படி கட்டளையிடுவாள். நானும் அவள் குத்துச்சண்டை மாமாவுக்குப் பயந்து அவளோடே இருப்பேன். ஆனால் ஒரு போதும் நான் அழுததோ ஆசிரியரிடம் சொல்லி அவளை மாட்டிவிட்டதோ இல்லை. இது பயத்தில் புதைந் துள்ள சின்ன தைரியம்தான். இதுபோல இயலாமையில் துளிரும் கட்டுப்பாடும், புறக்கணிப்பில் தோன்றும் நம்பிக்கையும், அழுகையில் விடியும் தெளிவும் கொண்ட பெண்கள்தான் எனது கதைகளில் வருகிறார்கள்.

வல்லினம்: இந்த சிறுகதைத் தொகுப்புக்கு சிங்கப்பூர் இலக்கிய விருது கிடைத்துள்ளது. அதுபற்றி கூறுங்களேன்.

லதா: சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டு வாரியத்தின் 2008ம் ஆண்டுக்கான இலக்கிய விருது எனது 'நான் கொலை செய்யும் பெண்கள்' சிறுகதைத் தொகுப்புக்குக் கிடைத்துள்ளது. தேசிய புத்தக மேம்பாட்டு வாரியம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆங்கிலம், தமிழ், மலாய், சீனம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளிவரும் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகளின் நூல்களுக்கு இந்த விருதை வழங்கி வருகிறது. ஒவ்வொரு மொழிப் பிரிவுக்கும் 10,000 சிங்கப்பூர் டாலர் பரிசாக வழங்கப் படுகிறது. சிங்கப்பூர் எழுத்தை ஊக்கப்படுத்தி வளர்க்கும் நோக்கில் தேசிய புத்தக மேம்பாட்டு வாரியம், 'தேசிய புத்தக பரிசு' என்ற பெயரில் 80 களின் தொடக்கம் முதல் வழங்கி வந்தது. இடையில் தடைபட்ட இந்த விருது 2004கஆம் ஆண்டு முதல் 'தேசிய இலக்கிய விருது' என்ற பெயரில் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு மொழி நூல்களுக்கும் வழங்கி வருகிறது. 2004இல் எனது தீவெளி கவிதைத் தொகுப்பும், 2006ஆம் ஆண்டு பாம்புக் காட்டில் ஒரு தாழை கவிதைத் தொகுப்பும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன

வல்லினம்: உங்கள் நூலுக்கு விருது கிடைத்தது குறித்து சர்ச்சைககள் ஏதும் எழுந்ததா?

லதா: விருது அறிவிக்கப்பட்ட சமயத்தில் பலர் நேரிலும் தொலைபேசியிலும் விருதுக்கு தகுதியான நூல் என வாழ்த்தினார்கள். உங்கள் தொகுப்புக்குத்தான் விருது கிடைக்கும் என எதிர்பார்த்தேன் என்று விருதுக்கு நூல்களை அனுப்பி வைத்திருந்த சில எழுத்தாளர்களும் கூறினார்கள். இதுவரை வெளிப்படையான சர்ச்சை எதுவும் கிளம்பியதாக தெரியவில்லை. முகத்துக்கு நேரே புகழ்வதையும் முதுகுக்குப் பின்னால் இகழ்வதையும் பொருட்படுத்தத் தேவையில்லை.

வல்லினம்: இந்த விருது உங்களுக்குக் கிடைத்தது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

லதா: மகிழ்ச்சியாக இருக்கிறது. பரவலான வாசகர்களும் ஆழமான விமர்சனங்களும் இல்லாத நிலையில் விருது களும் பாராட்டுகளும்தான் இலக்கிய அறிமுகத்தை இந்த நாட்டில் ஏற்படுத்தித் தருகின்றன. புத்தகங்கள் வெளியிடுவதும் விற்பனை செய்வதும் பொருளாதார ரீதியாகவும் படைப்பு ஊக்க ரீதியாகவும், அதுவும் தமிழ் நூல்களுக்கு இந்த நாட்டில் பெரிய மன உளைச்சலையும் சோர்வையுமே ஏற்படுத்தும். அவரவர் சொந்த செலவில் நூல் வெளியிட வேண்டும். வெளியிட்டப் பணத்தைத் திரட்ட நினைத் தால் நண்பர்களையும் பிரமுகர்களையும் அழைத்து நூல் வெளியீடு செய்யலாம். அழைத்த கடமைக்காக அவர்கள் வந்து மொய் எழுதி விட்டுப் போவார்கள். சில சமயங் களில் நூல் வெளியிட செலவான தொகையிலும் பல மடங்கு அதிகமாக வசூலாகும். இலக்கிய அறிமுகமே இல்லாதவர்களையும் சினிமா, அரசியல் பிரமுகர்களையும் அழைத்து புகழ்ந்து, பொன்னாடை போர்த்தி, முதல் நூலை வாங்க வைத்து, பேசச் சொல்லி இப்படிப் பல வேதனைகளை அனுபவிக்க வேண்டும். உள்ளூர் படைப்புகளை முக்கியமாகத் தமிழ் படைப்புகளையும் முறையாக அறிமுகப்படுத்தப் பிரத்தியேக முயற்சிகள் எதையும் செய்ய வேண்டிய அமைப்புகள் செய்வதில்லை. தேசிய நூலக வாரியத்தைத் தவிர. உதாரணமாக இங்கு 12ம் வகுப்பு வரை மாணவர்கள் தமிழ் படிக்கிறார்கள். அடுத்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் தற்போது SIM எனப்படும் பல்கலைக்கழகத்திலும் தமிழ் கற்றுத் தரப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் தமிழ் பயின்றும் மாணவர்களுக்கு உள்ளூர் தமிழ்ப் படைப்பிலக்கியம் குறித்த விரிந்த அறிமுகம் கிடைப்பதில்லை.கல்லூரி தமிழ் இலக்கியத்தில் தமிழ் நாடே மறந்துவிட்ட அய்க்கனின் சிறுகதைகளும் மு.வ.கதைகளும் இடம்பெறுகிறது. ஒரே ஒரு உள்ளூர் கதைகூட இந்த மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதில்லை. உள்ளூர் படைப்பிலக் கியத்தை வளர்ப்பதில் ஊடகங்களும் பெரிதாக எதுவும் செய்வதில்லை. தேடிப் பிடித்துப் படிக்கும் அளவுக்குத்தேடலோ நேரமோ மக்களுக்கும் இல்லை. இந்நிலையில் தேசிய அளவில் வழங்கப்படும் விருது களும் பாராட்டு களும் மட்டுமே அறிமுகத்தையும் விளம்பரத்தையும் படைப்புகளுக்குப் பெற்றுத் தருகிறது. இந்த அறிமுகம் மூலம் நூல் விற்க முடியாது என்றாலும், இப்படி ஒன்று இந்த நாட்டில் எழுதப்பட்டிருக்கிறதே என்பதாவது பலரால் அறியப்படும்.

வல்லினம்: உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது நிறையச் சொல்வதாகவும், எதையோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் வேறொன்றைச் சொல்வதாகவும், இறுதியில் ஒன்றும் சொல்லாமல் போவது போலவும் தோன்றுகிறது.

லதா: சின்ன வயதில் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடியதாக நினைவு இல்லை. தனியாகச் செடி களுடன் உரையாடிக் கொண்டிருப்பேன். அன்றாடம் தொடர்ந்த மிக நீண்ட உரையாடல் அது. எங்கோ தொடங்கி எங்கோ செல்லும் அந்த உரையாடல்களின் இறுதியில் ஒன்றும் இல்லாதது போல தோன்றும். ஆனால் அவை உயிருள்ள உரையாடல்கள். பிறகு ஒரு சில காலம் என்னுடனே நான் பேசிக் கொண்டிருந்தேன். இப்போது அது எழுத்தாகியுள்ளது.

வல்லினம்: பொதுவாகவே எல்லா எழுத்தாளருக்கும் அவர்களின் சிறிய வயது அனுபவங்கள் படைப்புகளில் புகுந்து கொள்ளும். உங்கள் படைப்புகளில் அவ்விதம் காணமுடிவதில்லையே?

லதா: இந்தப் படைப்பு ஏன் உருவானது என்று கேட்பது போலவே இந்தப் படைப்பு ஏன் உருவாகவில்லை என்று கேட்பதும் அபத்தமாகவேபடுகின்றது. படைப்பே அதன் போக்கை தீர்மானிப்பதாக நான் கருதுகிறேன். எனது இளவயது அனுபவங்கள் எனது பல கவிதைகளில் வெளிப் பட்டுள்ளன. அவை அவ்வனுபவத்தை நேரடியாக சொல்லாமல் அவற்றின் மைய உணர்ச்சியை மட்டுமே ஆங்காங்கே சொல்லிச் செல்கின்றன.

வல்லினம்: முதன் முதலில் எழுதத் தொடங்கும் எவருக் குமே தொடக்கத்தில் வாய்ப்பும் களமும் தூண்டுதலும் தேவைப்படுகிறது. அது உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?

லதா: தமிழ் முரசில் நான் சேர்ந்த போது, ஆசிரியராக இருந்த அமரர் வை.திருநாவுக்கரசு அவர்கள்தான் எனக்கு அந்த வாய்ப்பையும் களத்தையும் நம்பிக்கையும் கொடுத்தவர். முரசின் ஞாயிறு பதிப்புக்கு நான் பொறுப் பாக இருந்த சமயத்தில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத் தார். அந்தச் சமயத்தில்தான் சொந்தப் பெயரிலும் புனை பெயரிலும் பல கதைகள் எழுதினேன். வை.திருநாவுக்கர சைப் பத்திரிகை ஆசிரியராகவும் சமூகத் தலைவராகவும் மட்டுமே பெரும்பாலோருக்குத் தெரியும். ஆனால் அவருக்குள் தேடல் மிக்க ஒரு படைப்பாளி இருந்தார். அவர் அதனை வளர்த்துக்கொள்ளவில்லை. வெளிப்படுத் தவும் இல்லை. ஆனால் அவரது அந்தத் தேடல், சிங்கப்பூரின் தமிழ் படைப்பிலக்கியத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பல வழிகளில் உதவியுள்ளன. சிங்கப்பூர்- மலேசியாவின் தமிழ்ப் படைப்பிலக் கியப் பொற்காலமாகத் திகழ்ந்த 50 களில் தமிழ் முரசின் உதவி ஆசிரியராகவும் தமிழவேள் கோ.சாரங்கபாணியின் நம்பிக்கைக்குரியவராகவும் பல காரியங்களை அவர் செய்துள்ளார். தமிழ் முரசில் சிறுகதைப் பட்டறைகளைத் தொடங்கி, பவுன் பரிசு போட்டிகளை ஆரம்பித்தவர் அவர். காரசாரமான இலக்கிய விமர்சனங்கள் வளர வாய்ப்பளித்துள்ளார். எழுத்தாளர் கழகம் அவரது முயற்சியால்தான் தொடங்கப்பட்டது. மாணவர்களுக் கான மாணவர் மணி மன்றத்தை மாற்றி அமைத்து பல எழுத்தாளர்களுக்கு ஆரம்ப களத்தை அமைத்துக் கொடுத்ததில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. பல நல்ல எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மறைந்த சுந்தரராமசாமி, அகிலன் உட்பட பலரை முதன் முதலில் சிங்கப்பூருக்கு வரவழைத்து இந்நாட்டு மக்களுக்கு நல்ல இலக்கிய ரசனை ஏற்பட வழிவகுத்துள்ளார். அரசாங்க அமைப்புகளின் உறுப்பினர்களாக இருந்து, தமிழுக்கும் தமிழ்ப் படைப்பிலக்கியத்துக்கும் படைப்பிலக்கிய வாதிகளுக்கும் உரிய அங்கீகாரங்களைப் பெற்றுத் தர உதவியுள்ளார். அவரது பதவிக்காகவும் அந்தஸ்துக் காகவும் பல நூல் வெளியீட்டு விழாக்களுக்கு அவரைத் தலைமை தாங்க அழைத்திருக்கிறார்கள். ஆனால் கடைசி காலம் வரை அவர் சென்ற அத்தனை நிகழ்ச்சிகளிலும் உள்ளார்ந்த அக்கறையோடுதான் அவர் கலந்து கொண்டுள்ளார். மிகுந்த அக்கறையுடன் தனது கருத்து களையும் ஆதங்கங்களையும் வெளியீட்டு விழாக்களில் அவர் எடுத்துச் சொல்வார். அவர் நூல்களுக்கு எழுதி யுள்ள முன்னுரைகளையும், வெளியீட்டு விழாக்களில் அவர் பேசியவற்றையும் தொகுத்தாலே சிங்கப்பூர் இலக்கியத்தின் நிலை, அது செல்ல வேண்டிய பாதைகுறித்த தெளிவு கிடைக்கும். என் கதைகளைப் படித்து விமர்சித்து மெருகேற்ற உதவிய அக்கறை மிகுந்த மிகச் சில நண்பர்களுக்கும் இச்சமயத்தில் நான் நன்றி கூற வேண்டும்.

வல்லினம்: ஒரு மண்ணில் இலக்கியம் வளர விமர்சனம் இன்றியமையாததாகிறது. சிங்கப்பூரை பொருத்தவரை விமர்சனம் என்பது சிறிதும் இல்லையென அறியப் படுகிறது. இந்நிலையில் தங்களின் எழுத்தின் வளர்ச்சிக்கு எது உந்துதலாக இருக்கிறது?

லதா: எனது எழுத்து இன்னும் பல தளங்களில் வளர்ச்சி அடையவேண்டும் என நினைக்கிறேன். இதை நான் தன்னடக்கத்திற்காகச் சொல்லவில்லை. எனது சிறுகதை தொகுப்பை வாசித்த எழுத்தாளர் அம்பை 'நீ இன்னும் வளரவேண்டியுள்ளது. நிறைய எழுது. அப்போதுதான் நல்ல கதை உருவாகும்" என்றார். அது மிகவும் நேர்மை யான விமர்சனம் என நான் கருதுகிறேன். தமிழ் இலக்கிய உலகில் நாம் எங்கு நிற்கிறோம் என்பது முக்கியம். விருது களையும் பாராட்டுகளையும் விட ஒரு எழுத்தாளனுக்கு வாசகன் மிக அவசியம். இன்று வரையில் என் வாசகர்கள் யார் என்பதை நான் அறியவில்லை. பாராட்டி அல்ல விமர்சித்தும் கூட சிங்கப்பூரில் யாரும் பேசுவது குறைவு. அப்படி ஒரு சூழல் இருந்தால் இன்னும் மேம்பட்டப் படைப்புகள் உருவாகும் என்பது என் கருத்து.

வல்லினம்: சிங்கப்பூரில் ஆக்ககரமான படைப்பிலக்கியத்திற்கான சூழல் உள்ளதா?

லதா: அரசாங்கம், கலை இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் ஊக்கம் தருகிறது. தேசிய கலை மன்றம், தேசிய புத்தக மேம்பாட்டு மன்றம், தேசிய நூலக வாரியம் போன்ற அமைப்புகளின் மூலம் நாட்டின் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் கலை, இலக்கிய வளர்ச்சிக்குப் பல்வேறு உதவிகளையும் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றன. இரண்டாண்டுக்கு ஒரு முறை தேசிய சிறுகதை போட்டி நடத்தப்படுகிறது. படைப்பிலக்கியத்துக்குப் பரிசு வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி நிலையிலேயே கலை இலக்கியப் போட்டிகளை நடத்தி இள வயதிலேயே கலை இலக்கிய ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துகிறார் கள். பல மில்லியன் செலவில் நூலகங்கள் நாட்டில் பல்வேறு இடங்களிலும் அமைக்ப்பபட்டுள்ளன. உலகின் தலைசிறந்த கலை, இலக்கியப் படைப்பாளர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். உலகத் தரமிக்க கலை இலக்கி யங்களை பல்வேறு தளங்களில் அறிந்து கொள்ளவும் அவற்றில் ஆர்வம் கொள்ளவும் ஈடுபடவும் ஏராளமான வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுகின்றன. இங்கு நாள்தோறும் ஏதாவது ஒரு கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. ஆக அறிவு, தெளிவு, சிந்தனை, வெளிபாடு அனைத்துக்கும் இடம் இருக்கிறது. எனினும் இந்தப் படிநிலையில் வளர்வதற்கு தேவையான மனப்பக்குவம் அல்லது தேடலுக்குப் போதிய வெளி இல்லை என நினைக்கிறேன். நமக்குரிய அந்த வெளியைத் தேடும் அலைந்துழல்விலேயே நேரம் செலவாகி விடுகிறதோ எனக் கருதுகிறேன்.

வல்லினம்: அப்படி வாய்ப்புகளைப் பயன்படுத்தி வளரும் ஒருவரால் சுதந்திரமான படைப்பை சிங்கப்பூரில் உருவாக்க முடியுமா?

லதா: பொதுவாகவே ஒரு நாட்டின் கட்டமைப்பின் கீழ் வளர்க்கப்படும் மனிதனின் எண்ணம் இயல்பாகவே அம்மண்ணிற்கான வரையறைகளுக்குட்பட்டுத்தான் வளர்கிறது. சில விதிவிலக்குகளை தவிர்த்து சிங்கப்பூரில் தமிழ் இலக்கியத்தில் ஒருவகையான சுயதணிகையே தொடர்நது நிலவுகிறது. சிங்கப்பூர் படைப்பிலக்கியத்துறை என ஒன்று உருவாகி பரிமளித்த காலத்தில் (சிங்கப்பூர்- மலேசியாவை உள்ளடக்கிய மலாயா படைப்பிலக்கிய தோற்ற, மறுமலர்ச்சிக் காலம் எனவும் கொள்ளலாம்). எது எழுத்து, எதை எழுதுவது, என்ன வடிவம் போன்ற தேடல்களாகவே அமைந்தது. தற்சமயம் ஈடுபடுபவர் களில் பெரும்பாலோர் இந்தியா இலங்கை போன்ற அந்நிய தேசத்தவரே. இந்நாட்டு குடிமக்களாகவே இருந்தாலும் அவர்களது வேர் வேறு எங்கோ ஊன்றி உள்ளது. இயல் பாகவே இவர்களுக்கு, அந்நிய தேசமும் அதன் ஆட்சியும் ஒரு வகை அச்சத்தையும் பாது காப்பின்மையையும் கொடுத்திருக்கலாம். அரசாங்கத்தை விமர்சிக்கும் படைப்புகளும் சிங்கப்பூரில் வெளிவரவே செய்கின்றன, மற்ற மொழிகளிலும் மிக அரிதாக தமிழிலும்.

வல்லினம்: சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தில் ஈடுபடுவது ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் தமிழகம், இலங்கை மற்றும் மலேசியாவிலிருந்து தொழில் நிமித்தமாக வந்தவர்கள். இந்நிலையில் வருங்காலத்தில் சிங்கப்பூர் இலக்கியத்திற்கு என தனி அடையாளம் இருக்குமா?

லதா: சிங்கப்பூரை ஒரு 'டிரான்ஸிஸ்ட் சிட்டி' அதாவது பயணத்தின் இடையில் தங்கிச் செல்லும் ஒரு நகரம் எனச் சொல்லலாம். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்துப் போய்க் கொண்டிருக்கின்றனர். அப்படி வரும் பலரும் தங்களால் ஆன பங்களிப்பைச் சிங்கப்பூருக்குத் தருகின்றனர். எனினும் இந்தத் தங்கும் விடுதிக்கும் ஒரு வாழ்க்கை, ஒரு மனம் தனித்தன்மையான அனுபவம் உள்ளன. எதிர்காலத்திலும் இலக்கியம் வாழ்வது, வளர்வது திண்ணம். ஆனால், தனித்த அடையாளத்தோடு உலக அரங்கை எப்போது எட்டும் என்பது தெரிய வில்லை. அதற்கான சாத்தியங்கள் அவ்வப்போது அரும்பு கின்றன. எனினும் இதுவரை ஆழமான தாக்கத்தை ஏற் படுத்தும் அளவுக்கு ஓர் அடையாளத்தை எவரும் பதிக்க வில்லை. ஒரு நாள் பதிப்பார்கள் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது.

வல்லினம்: பிற நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்வு போல சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வு வெளிப்படையாகத் தெரியாதது போல உள்ளதே?

லதா: அப்படி இல்லை. சிங்கப்பூர் தமிழர்களும் ஏறக் குறைய மலேசியத் தமிழர்களின் வாழ்வு முறையை ஒத்தே இருக்கின்றனர். ஆனால் முன்பிலும் இப்போது பெரும் பகுதியினர் படித்தவராக உள்ளனர். அனைவருக்கும் பிறப்புப் பத்திரம் இருக்கிறது. சிங்கப்பூரின் 4.5 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 7 விழுக்காடு இந்தியர்கள். அதில் ஏறக்குறைய அறுபது விழுக்காட்டின் தமிழர்களாக உள்ளனர்.என்னதான் சிங்கப்பூர் வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும் இன்னும் தமிழர்கள்தைப்பூசத்தில் ஆடுவது, குண்டர் கும்பலில் ஈடுபடுவது, மனைவியை அடிப்பது, மதுக் கடையில் நேரத்தை போக்கு வது எனும் சாமான்ய மக்களின் குணாதிசயங்களுடன் வாழவே செய்கின்றனர். நிறைய உடல் உழைப்புத் தொழிலாளர்களும் சிங்கப்பூரில் தமிழர்களாகவே இருக்கின்றனர். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வருகையால் இவர்கள் நிறையவே தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வல்லினம்: பெரும்பாலான நாடுகளில் இதுதான் நடக்கிறது. அதிலும் குறிப்பாக விமான நிலையங்களில் கூலித் தொழிலாளர்களாக இந்தியர்கள் திட்டமிட்டே நிறுத்தப் படுவது போலத் தெரிகிறது. ஒரு நாட்டில் நுழையும் அந்நிய தேசத்தவரின் பார்வை இவர்களைச் சந்திக்கும்போதே அந்நாட்டில் இவர்கள்தான் ஒடுக்கப்பட்டவர்கள் என மறைமுகமாகத் தெரிவிக்கப்படுவதாகத் தோன்றுகிறது.

லதா: சிங்கப்பூர் மலேசியத் தமிழர்களின் பெரும் பகுதியினர் அடிமைத் தொழிலாளர்களாக இங்கே அழைத்து வரப்பட்டனர். ஆங்கிலேயர்களுக்கு அடிமை யாக இருந்து பழகி விட்டதால் சீனர்களிடமும் அடிமை யாக இருப்பதில் எந்தச் சங்கடமும் இருப்பதில்லை எனத் தோன்றுகிறது.

வல்லினம்: இலங்கையில் பிறந்து சிங்கப்பூரில் வளர்ந்த நீங்கள், உங்களை எந்த நாட்டவராக அடையாளப் படுத்துகிறீர்கள்?

பதில்: எனது பாஸ்ப்போர்ட்டும் அடையாள அட்டையும் சிங்கப்பூர் குடி என சொல்கின்றன.அதே பாஸ்ப் போர்ட்டில் பிறந்த இடம் இலங்கை என குறிக்கப்பட்டுள்ளது.அடையாள அட்டையில் இனம்: இந்தியன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவை நான் தேர்வு செய்த அடையாளங்கள் அல்ல. என் வாழ்வுரிமை மீது குத்தப் பட்டுள்ள முத்திரைகள்.இது ஒரு வகையான அரசியல். படைப்பிலக்கியத்தில் அடையாளத்தை முன்னிலைப் படுத்துவது ஒருவகை வியாபாரமாக இப்போது ஆகிவிட்டது.எனவே இது குறித்து பேசுவது சலிப்பைத் தருகிறது.

வல்லினம்: இலங்கையில் பிறந்து வளர்ந்த உங்களுக்கு இன்றைய இலங்கைத் தமிழர் நிலைகுறித்த பார்வை என்ன?

லதா: இதில் இலங்கைத் தமிழர், இலங்கைத் தமிழர் அல்லாதவர் என்ற பேதமெல்லாம் இல்லை. பொதுவாக இது தமிழர் பிரச்சனை. தமிழ் இனத்துக்கான பிரச்சனை. ஏறக்குறைய இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த கடந்த அறுபது ஆண்டு காலமாக தமிழர் படும் அவலம் உலகப் பார்வைக்கு பரவலாகச் சென்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் இந்த இன படுகொலை குறித்து உலக நாடுகள் கண்டு கொள்ளாமல் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க ஆக்ககரமான முடிவு எடுக்காமல் இருப்பது கொடுமையானப் புறக்கணிப்பு. உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் தங்களால் இயன்றவரை இலங்கைத் தமிழர்களுக்கு உதவி வருகின்றனர். இதை வைத்துக் கொண்டு சிலர் அரசியலும் சென்கின்றனர் என்பது வேறு. ஆனால் இந்த ஆதரவும் கூக்குரலும் அதே போல் எதிர்ப்பும் பெரும்பாலும் உணர்ச்சிப்பூர்வமானவை யாகவே உள்ளன. கண்மூடித்தனமான ஆதரவும் வெறித்தனமான எதிர்ப்பும் மிக ஆபத்தானவை. அறிவு நிலைப்பட்ட ஆக்கப்பூர்வமாக ஆதரவும் உதவியும் வழிகாட்டலுமே தமிழினத்துக்குத் தேவைப்படுகிறது. இதற்கு மேலும் சிங்கள அரசாங்கம் இலங்கை எனும் ஒரே நாட்டில் தமிழ் மக்களை சம உரிமையோடு வாழவிடும் என எதிர்பார்க்க முடியாது என்பது உலகம் அறிந்த ரகசியம். எலி வளையானாலும் தனி வளைதான் வேண் டும். தமிழ் மக்களுக்கு என ஒரு நாடு, சுதந்திரமான குரல், அந்த தமிழ் நாட்டிலிருந்து செழிக்கும் தமிழர் பொருளாதாரம் பிற இன தாக்கங்களிலும் கலப்புகளிலும் அடிபட்டுப் போகாதப் பண்பாடு, இதன் மூலம் தழைத்து வளரும் கலை, இலக்கியங்கள் இவையெல்லாம் உலகெல் லாம் வாழும் தமிழ் மக்களுக்கு ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்குமே ஒரு மதிப்பையும் அடையாளத்தையும் நம்பிக்கையையும் எழுச்சியையும் ஏற்படுத்தும். காட்டிக் கொடுத்தல், பிளவு படுதல், நீயா நானா போட்டி, சுய நலம், சந்தர்ப்ப அரசியல் போன்ற எல்லாம் தூக்கி யெறிந்து விட்டு ஒன்று பட்டு போராடினால் நமக்குரிய இடத்தை இந்த உலகத்தில் நாமே பெற முடியும். இது ஒரு மாயக்கனவுதான். ஆனாலும் அப்படி ஒரு வாழ்வை தமிழினம் பெறும் என நம்பிக்கை எனக்குள்ளது.

நேர்காணல், படம் : ம.நவீன்
நன்றி வல்லினம்
...மேலும்

Feb 21, 2011

நோம் சோம்சுக்கி… - வீ.அ.மணிமொழி


2002 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் காலடி எடுத்து வைத்தேன். எனது தேர்வு மொழி மொழியியல் துறை. விரிவுரையாளர் எனக்கு அறிமுகம் செய்து வைத்த பெயர்களில் ஒன்று நோம் சோம்சுக்கி (Noam Chomski). 'யார் அந்த நோம் சோம்சுக்சி?' என்பதுதான் அன்றைக்கான எனது வீட்டுப்பாடம். தகவல்களைச் சேமிக்க ஆரம்பித்தேன்.

மொழி வரலாற்று பட்டியலில் இடம் பெறும் பெயர்களில் இவர் முக்கியமானவர். 1928 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் பிறந்தார். இவருடைய தந்தை உக்ரேன் நாட்டில் குடியேறிய ஈபுறு மொழி அறிஞர். தாயார் யூதர் இனத்தைச் சேர்ந்தவர். மொழியியல் துறையைப் பற்றி 1945-ல் பிலடெல்வியா பல்கலைக்கழகத்தில் பயிலத் தொடங்கினார். சொற்றொடரியல் அமைப்புகள் (syntactic structures) என்ற தலைப்பில் ஆய்வு செய்து புத்தகமாக தொகுத்தார். 40 வருடங்களுக்கு முன்பு தோன்றிய மொழிக் கோட்பாடுகளைக் குறிக்கும் வகையில் இப்புத்தகம் அமைந்துள்ளது. இது இன்றளவும் பரவலாக மொழியியலில் பேசப்படும் புத்தகமாகும்.

இவர் தோற்றவாய் இலக்கணத்தை (Generative Grammar) மொழியியல் துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவ‌ர் க‌ருத்தின் ப‌டி, தோற்றுவாய் என்றால் உற்பத்தி என்று பொருள். மனிதனின் மூளை அளவு அளக்கப்பட்டிருந்தாலும் அதன் உள்ளடக்கம் அளக்கப்பட்ட‌தில்லை. ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் எத்தனை வார்த்தைகள் குடிக்கொண்டிருகிறது என்ற பிரக்ஞை இல்லாமலே ஒவ்வொரு நாளும் வார்த்தைகளை உபயோகித்தும் அதனை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறான்.

ஆரம்பக் காலக்கட்டத்தில் நோம் சோம்சுக்கியின் கருத்துகள் பல மொழி அறிஞர்களால் எதிர்க்கப்பட்டிருந்தாலும் அவை நாளடைவில் பொதுவில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மூளையில் சொற்கள் வரிசையாக அடுக்கப்படுவதில்லை. மாறாக, அவை நாளுக்கு நாள் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டு தன் கருத்துகளை வெளியீடு செய்ய உதவுகிறது. ஒருவர் பேசும் மொழியை மட்டும் வைத்து தகவல் சேகரித்து பகுப்பாய்வு செய்வதில் இவர் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. மேலும், திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு இலக்கண விகுதிகளைத் திணித்துக் காட்டுபவர்களைக் கடுமையாக எதிர்த்தார்.

இதற்கு காரணம், மொழி வரையறையற்றது. கட்டமைக்கப்பட்டதொன்றல்ல. அதன் கிளைகள் பரந்து விரிந்து கொண்டே போகும். இலக்கண விதிகளை கொண்டு ஒரு மொழியை சரியாக கற்றுக் கொள்ள முடியும் , ஆனால் இலக்கண விதியில் மொழியை அடக்க முடியாது. காரணம், வெவ்வேறான மொழிகள் வெவ்வேறான இலக்கண விதிகள் கொண்டிருந்தாலும் அது வெளிப்படுத்த நினைக்கும் கருத்து ஒன்றுதான். அல்லது அது ஒரே மொழியில் கூட நடக்கலாம். அதாவது

நேற்று நான் சோறு சாப்பிட்டேன்.

நான் நேற்று சோறு சாப்பிட்டேன்.

சோறு நான் சாப்பிட்டேன், நேற்று.

சோறு சாப்பிட்டேன், நான் நேற்று.

சோறு சாப்பிட்டேன், நேற்று நான்.

மேற்காணும் வாக்கியங்கள் இலக்கண மரபுகளைப் பின்பற்றியும் பின்பற்றாமலும் காணப்படுகின்றன. இருப்பினும் அதன் உள்ளடக்கம், பொருள் அல்லது கருத்து ஒன்றே. அதனோடு இலக்கண மரபுகளைப் பின்பற்றாமல் இருக்கும் வாக்கியங்களுக்கு புதிய மரபுகளை ஏற்படுத்தலாம் என்பதே நோம் சோம்சுக்கியின் கூற்று.

குழந்தைகள் முத‌லில் மொழியைக் இலக்கணம் தெரியாமல்தான் கற்றுக்கொள்கின்றனர். ஒவ்வொரு குழந்தையும் மதத்தால் மொழியால் ஒற்றுமைக் கொண்டிருந்தாலும் தன் கருத்தை வெளிப்படுத்த வெவ்வேறான உத்திகளைக் கையாளுக்கின்றனர். நோம் சோம்சுக்கி இதை வழுவாக உறுதிப்படுத்தினார்.

வார்த்தைகள் சேருகையில் சொற்றொடர் பிறக்கின்றன. பிறகு சொற்றோடர்கள் வாக்கியமாகிறது. பேசுகின்றவர்களின் வாக்கியங்கள் சுருக்கமாகவோ அல்லது நீண்டோ காணப்படலாம். இவ்வகையான மொழிகளில் இலக்கணம் காண முடியாது. இலக்கணத்தில் சேர்க்கப்படாத அல்லது கண்டுப்பிடிக்காத கூறுகள் இதில் அடங்கி இருக்கலாம். அந்த அடிப்படையில் நோம் சோம்சுக்கியின் ஆய்வு தொடர்ந்தது. அவரின் ஆய்வின் காரணமாய் விளைந்ததுதான் 'தோற்றுவாய் இலக்கண கோட்பாடு'.

நன்றி - வல்லினம்
...மேலும்

Feb 20, 2011

முத‌லாளிக‌ள் வைத்துள்ள முக‌மூடிக‌ள் - யோகி


ஒரு பொழுதுபோக்குக்காக வேலைக்குப் போகலாம் என்றிருந்த எனக்கு நிரந்தரமாக வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தை அப்பாவின் மறைவு ஏற்படுத்தியது. தோட்டத்தில் கூலி வேலை செய்யும் அம்மாவின் சொற்ப சம்ப‌ள‌த்தை ஐந்து பேரின் வயிற்றுக்கும், பள்ளிப்படிப்பு மற்றும் இதர செலவுகளுக்கும் ப‌ங்கிடுத‌ல் என்பது கனவிலும் நடவாத ஒன்று. பகுதி நேர வேலையைத் தேடிக்கொண்டு சமாளிக்கலாம் என்பதெல்லாம் வாய்மொழிக்கே வசதியாக இருந்ததே ஒழிய நிஜ வாழ்க்கையில் எப்படித் திட்டமிட்டாலும் செலவுகள் கழுத்தை நெரித்தன. மேலும் அப்பாவின் பராமரிப்பின் போதே தடுமாறிய குடும்ப வண்டியை எங்களால் சீர் செய்து ஓட்ட முடியும் என்றெல்லாம் கூறிக்கொள்ள தைரியம் இல்லை. சமையல் கட்டுக்குள்ளேயே அனுமதிக்காத... பகுதி நேர வேலைக்குத் தடைக்கூறும் அப்பா குடும்ப சந்தையின் செலவாணிகளையும், அதன் பராமரிப்பின் முறைகளையுமா கற்றுக்கொடுப்பார்?

அப்பா "One Man Show"வாக இருந்தே வாழ்ந்தவர். அவரின் விஷ‌யத்தில் தலையிடுவதையோ மூக்கை நுழைப்பதையோ விரும்பாதவர். 18 வருடமாக அவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த குடும்ப வண்டியை மேம்படுத்துவதை விட குடைசாய்ந்திடாமல் காப்பற்றுவதே முக்கியமாக எங்களுக்கு பட்டது. அதற்கு உடனடியாக ஒரு வேலையை நான் தேடிக்கொள்ள வேண்டும். பகுதி நேரமாக அல்லாமல் முழுநேரமாகவே. இந்த முடிவை நான் தெரிவு செய்தபோது ஏற்பட்ட மன உளைச்சலை சொல்லி மாளாது. ஓர‌ள‌வு அந்தஸ்தான வேலைக்குப் போவதற்கும் போதிய கல்வி பூர்த்தியாகாத நிலையில் தொழிற்சாலைக்கு வேலைக்கு போவதற்கா இத்தனைக்காலம் மிகுந்த பண சிரமத்திலும் கல்வி பயின்றேன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். அம்மாவைப் போல‌வே அப்பாவும் ஒரு கூலித்தொழிலாளிதான். அந்த வரிசையில் நானும் சேர்ந்து விடுவேனா என்ற எண்ணம் தீயாக நெஞ்சில் உழல ஆரம்பித்தது. என் ஆற்றலை சக்கையாக யாரோ பிழிந்தெடுப்பதைப் போன்ற ஒரு பீதி கௌவிக்கொண்ட‌து. கனத்த இதயத்தோடு அக்கம் பக்கமெல்லாம் வேலைக்குச் சொல்லி வைத்தேன். நானும் அங்காடிக் கடைகள், சில தொழிற்சாலைகள் என வேலைக்கு விண்ணப்பித்து வந்தேன்.

ஒரு மாலைப்பொழுதில் எங்கள் வீட்டிற்கு வந்தான் ஓர் இளைஞன். அழகான முகவெட்டு. கவர்ச்சியான தோற்றம். இதற்கு முன் நான் அவனை பார்த்ததில்லை. "வேலைக்குச் சொல்லி வச்சிங்களா?" என்றான். "ஆமாம்" என்றேன். நான்தான் வேலைக்கு ஆள் எடுக்கிறேன் என்றான். என்ன வேலை? என்றேன். குளிர்சாதன அறையில் வேலை என்றான். குளிர்சாதன அறையில் வேலை என்பது படித்தவர்களுக்கு மட்டுமே அமையக்கூடிய இடமாக பலரும் ஒரு மாயையில் இருந்த கால‌ம் அது. வந்தவனும் கனகச்சிதமாக மாயையை என் மேல் பாய்ச்ச ஆரம்பித்தான். சட்டையில் அழுக்குப் படாமல் வேலைப்பார்த்துவிட்டு வரலாம். நீங்கள் இன்னும் சாமர்த்தியமாக வேலைப்பார்த்து மேல் இடத்தில் நல்ல பெயர் வாங்கிவிட்டால் சூப்ப‌ர்வைச‌ர் ப‌த‌விகூடக் கிடைக்கும். எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கு என்றான். இப்படி பதவி ஆசையைக் காட்டியே வேலையில் சேர்த்துவிடுவ‌து என்ன கலாச்சாரம் என்றே தெரியவில்லை. அவன் என் கண்களையே ஊடுருவி பார்த்தான். இனிக்க இனிக்க பேசினான். என் கண்கள் காட்டப்போகும் ஆர்வத்தையே தேடினான். வேலை எங்கே என்றேன். அருகில் இருக்கும் 'யுபி' தோட்டத்தில் என்றான்.

'யுபி' தோட்டம் வெள்ளைக்கார துரையுடையது. அந்தத் துரை கூலியாட்களுக்கு நல்ல நல்ல சலுகைகள் வழங்குவதாகவும் கூலியாட்களின் நலனைப் பேணுவதாகவும் நானும் கேள்விப்பட்டு இருந்தேன். ஆனால் எனக்கு தோட்டத்தில் வேலைப்பார்ப்பதில் துளியும் விருப்பம் இல்லை என்று தயங்கினேன். தோட்டத்தொழிளார்கள் தற்சமயம் நாள் ஒன்றுக்கு 14ரிங்கிட் சம்பளம் பெறுவதாகவும் இதர அலவன்ஸ்களை சேர்த்து கணிசமான ஒரு தொகையைச் சம்பளமாக ஈட்ட முடியும் எனவும் தொழிற்சாலைகளை விட கொஞ்ச‌ம் அதிகமாகவே சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது எனவும் நம்பிக்கை வார்த்தைகளை கூறிக்கொண்டிருந்தான். பார்த்து அரைமணி நேரம் கூட ஆகாத அவன் நெருங்கிய நண்பன் மாதிரி சில சமயம் குழைந்தும், சில சமயம் கனிந்தும் பேசினான். பலவீனமான இதயம் கொண்ட பெண்களாக இருந்தால் அவனிடம் நிச்சயம் காதல் வசப்படக்கூடும். அது அவனின் சாமர்த்தியமாக இருக்கலாம். அல்லது அவனின் இய‌ல்பாக‌வும் இருக்கலாம். மூடுந்து ஓட்டுனரான அவன் ஆட்களைச் சேகரித்து வேலைக்கு அமர்த்தினால் கமிசன் உண்டு. தொழிலாள‌ர்களின் அன்றாட வேலை போக்குவரத்துக்குத் தனியாக மாதச்சம்பளம் உண்டு. பயன்படுத்த‌ப்படும் வாகனம் அவனின் சொந்த வாகனமாக இருப்பின் அதற்கும் த‌னி அல‌வ‌ன்ஸ் உண்டு. இத்தனை சம்பளத்துக்கும் அவன் பேச்சையே அதிகமாக முதலீடு செய்வான் போல் தோன்றிய‌து. குறிப்பாக பெண்களிடம்.

குளிர்சாதன அறையில் சுலபமாக யாருக்கும் வேலை கிடைக்காது. உங்களைப்போன்ற வயதுப் பெண்கள் மட்டுமே அங்கே வேலை செய்கிறார்கள். தயங்காமல் வரவும் என்றான். அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் "சரி வருகிறேன்" என்றேன். நாளைக்காலை 7 மணிக்குத் தயாராக இருங்கள் என்றுக்கூறி மெல்லியதாக சிரித்துவிட்டு சென்றான். என் வாழ்க்கையில் நிகழப்போகும் எதிர்பாராத திருப்பங்களை எப்படி எதிர்க்கொள்ள போகிறோம் என்ற ஆற்றாமை ஒரு புறமும் அப்பாவின் மரணம் மறுபுறமும் என்னை நெருக்கடியில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன.

என் எதிர்காலத்தை நிர்ணயித்த அந்த விடியலில், அவன் சொன்ன அந்த நேரத்தில் நான் தயாராக இருந்தேன். இதே போல விடியலில்தான் நான் நேற்றுவரை பாடசாலைக்கு போய்க்கொண்டிருந்தேன். இன்று அந்த விடியல் உழைப்புக்காகவும் ஊதியத்துக்காகவும் எனக்காக உதித்திருந்த‌து. காலம் எத்தனை விரைவாகவும் சாதுர்யமாகவும் தன்னை நகர்த்திக்கொள்கிறது. அது கற்பிக்கும் பாடம்தான் என்ன? விளங்காமலே மூடுந்துக்காகக் காத்திருந்தேன். அந்த பையன் வந்தான். காலை 8 மணிக்கு வேலை. காலை பசியாறுவதற்கு ஏதாவது வாங்கிக் கொள் என்றான். நான் தயாராக வைத்திருப்பதாக அவனிடம் சொன்னேன். மீண்டும் அதே புன்முறுவல். ஏன் சிரிக்கிறான்? வழிவதைப்போல அல்லது மழுப்புவதைப்போல. அப்பாவின் மரணம் நெஞ்சில் கனன்றுகொண்டே இருந்ததால் அவன் பார்ப்பதையும் சிரிப்பதையும் சிலாகிக்க முடியவில்லை. அவன் என்னை சிடுமூஞ்சி என்றோ நினைப்பு பிடித்தவள் என்றோ நினைத்திருக்கலாம்.

நெடுஞ்சாலையை ஒட்டி இருந்த தோட்டத்துச் சாலையை நெருங்கியபோது காலை மணி 7.30 ஆகியிருந்தது. உள்நுழையும் தோட்டத்துச் சாலையின் வடது இடது புறமும் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு பொட்டலான நிலம். அங்குதான் வெள்ளைக்கார துரை தன் ஹெலிகாப்ட‌ரை கொண்டு வந்து இறக்குவானாம். அதைப்பார்ப்பதற்கே நிறைய மக்கள் அங்கே கூடுவார்கள். இதற்காகவே துரை அந்த இடத்தை பொட்டலாக வைத்திருந்தான். அவன் சொன்ன அந்தக் குளிர்சாதன அறையின் முன் வண்டியை நிறுத்தினான். அது ஒரு பலகை கொட்டகை. பழைய பொருட்களை போட்டு வைக்கும் ஸ்டோர் மாதிரி இருந்தது. திரு திருவென விழித்துக்கொண்டே நின்றேன். ஆனால் ஒரு வார்த்தைக்கூட அவனிடம் எதுவும் பேசவில்லை. எனக்குள்ளே ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தேன். அவன் இதுதான் குளிர்சாதன அறை. உள்ளே போ என்றான். கழுத்து அறுக்கப்ப‌ட‌ப்போகும் கோழியின் மனநிலை எப்படி இருக்குமோ தெரியாது. அந்நேர‌த்தில் என் ம‌ன‌நிலையை வைத்து அதை யூகித்துக் கொண்ட‌ப‌டி உள்ளே சென்றேன். வயதுப்பெண்கள்தான் உள்ளே இருந்தனர். சுமார் 14 பெண்கள் இருந்திருப்பார்கள். அத்தனைக் கண்களும் ஒரே நேரத்தில் என்னை எதிர்க்கொண்டன. சிலர் சிரித்தனர் சத்தமாகவும் சிலர் மௌன‌மாகவும். அதற்கு காரணம் நான் அணிந்திருந்த உடை. அவர்கள் முழுக்கால் சிலுவார். அதன் மேல் முட்டிக்கால் வரை பாவாடை. நீண்ட காலுரையை சிழுவாரின் மேல் இழுத்துமாட்டி இருந்தனர். ரப்பர் காலணி. முழுக்கை சட்டையினுள் அரைக்கை சட்டை. முகத்தில் மஞ்ச‌ள். பொட்டு, கண்மை, தலையில் பூ. என் பாட்டி தோட்டத்தில் வேலைப் பார்த்தபோது இப்படித்தான் உடை அணிந்து மண் வெட்டியை தோளில் மாட்டிக்கொண்டு வருவார். இந்தப்பெண்கள் என் பாட்டியை ஞாபகப்படுத்தினர். நானோ முழுக்கால் சிலுவார். இடுப்புவரைக்கொண்ட அரைக்கை சட்டை. துணிச் சப்பாத்து. 'வந்துட்டா துரை பொண்டாட்டி, மேனஜர் வேலைக்கு' என்பது மாதிரி இருந்தது அவர்களின் பார்வையும் சிரிப்பும்.

யாருமே என்னிடம் பேச வில்லை. கற்கள் படாமலே அவமானத்தில் அடி வாங்கிக்கொண்டேன். உள்ளே 2 மேஜைகள். அதற்கு தோதாக நீண்ட நாற்காலிகள். ஒரு மேஜையில் 8 பேர் அமரலாம். காலியாக இருந்த இடத்தில் அமர்ந்துக்கொண்டேன். அங்கே ஒரு காத்தாடிக்கூட இல்லை. ஏன் குளிர்சாதன அறை என்று அதை அழைக்கிறார்கள் என்றே புரியவில்லை. இர‌ண்டு ஜன்னல்கள் இருந்தன. அதையும் மெல்லிய வலைக்கொண்டு மூடி இருந்தனர். சிறையில் மாட்டிக்கொண்ட மாதிரி ஒரு பரிதவிப்பு இருந்தது. நான் அமர்ந்திருந்த இடத்தில் துணியால் சுற்றப்பட்ட பொட்டலம் ஒன்றை கொண்டுவந்து வைத்தாள் ஒரு பெண். பாத்திரம் நிறைய செம்பனை உதிரி பழங்களையும் கொண்டு வந்து வைத்தாள். கையுரையும் கொடுத்தாள். எல்லோருக்கும் அது போலவே கொண்டு வந்து வைத்தாள். நான் பொட்டலத்தைப் பிரித்தேன். கையளவு சின்னதாக ஒரு வெட்டுக்கத்தி. வெங்காயம் நறுக்குவதை போன்றதொரு சிறிய கத்தி. ஆறு இஞ்சிக்கும் குறைவான நீள‌த்தில் ஒரு பலகை. நிமிந்து பார்த்தேன். பெண்கள் துரிதமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர். உதிரி பழங்களை ஒவ்வொன்றாக பலகையில் வைத்து நறுக்கி அதன் விதையையும் சுளையையும் தனியே பிரித்துக்கொண்டிருந்தனர். இதுதான் வேலை என்பதை புரிந்துகொண்டேன். பெண்களின் கை எவ்வளவு வேகமாக வேலை செய்ததோ அதே அளவுக்கு அவர்களின் வாயும் வேலை செய்தது. முந்திய நாளில் பார்த்த படம், புதிதாக வாங்கிய துணி, கூட்டுக்கட்டுதல் இப்படி ஆளுக்கொரு கதையாக அவர்களின் வாய் அளந்துகொண்டே இருந்தது.

சிறிது நேர‌த்தில் கங்காணி வந்தார். என்னை நேர்முக தேர்வு செய்வதற்கும் பெயர் பதிவதற்கும். அரைக்கால் சிலுவார் மற்றும் அரைக்கை சட்டையை 'டக் இன்' செய்து இடைவார் அணிந்திருந்தார். தொப்பி போட்டிருந்தார். என் பெயர், வயது, படிப்பு போன்றவற்றை விசாரித்தவர், தாய் தகப்பன் தோட்டத்தில் வேலை பார்த்திருக்கிறார்களா என்று கேட்டார். ஏன் அப்படி கேட்டார் என்று தெரியவில்லை. வேலைக்கு வரும் யாரிடமும் இதைக்கேட்பார் என்றே நினைக்கிறேன்.

அம்மா தோட்டத்தில் பிறந்து வள‌ர்ந்தவர். பாட்டி ஓய்வு பெறும் வரை தோட்டத்தில் வேலை செய்திருக்கிறார். அம்மா கொஞ்ச‌காலமாகத்தான் வேறு ஒரு தோட்டத்துக்குக் காட்டுவேலைக்கு போய்க்கொண்டு இருக்கிறார். அப்பா திருமணத்துக்கு முன் தோட்டத்தில் ஒரு மாதம் என்னவோ வேலை பார்த்தாராம். காட்டு வேலைதான். அதன்பிறகு தோட்டத்து வேலைக்கே போகவில்லை என விள‌க்கினேன். அதற்குதான் நீ வந்துட்டியே என்றார். சடாரென்று யார் யாரோ என் முகத்தில் அறைவது மாதிரி இருந்தது. வாயடைத்துப்போய் அவரையே பார்த்தேன். எந்த சீமைக்கு போனாலும் பூர்வீகத்துக்கு வந்துதான் ஆகனும். டாக்டர் மகன் டாக்டர்; டீச்சர் மகன் டீச்சர்; கூலி மகன் என்ன வென்று பெண்களைப்பார்த்து கேட்டார் கங்காணி. 'கூலி' என்றார்கள் பெண்கள் ஒரே குரலில். அவர் என்னிடம்தான் பேசுகிறாரா என்ற குழப்பமே எனக்கு வந்துவிட்டது. அதற்கு பிறகு அவர் பேசிய எதுவுமே என் செவிகளில் விழவில்லை. அதைவிட நானே என் மனதுக்குள் உரக்க பேசிக்கொண்டிருந்தேன்.

தப்பு செய்துவிட்டேன். நான் இங்கு வந்திருக்கவே கூடாது. இது அப்பாவுக்கு செய்யும் துரோகம். நாங்கள் செய்யும் பணியை நீங்கள் செய்யக்கூடாது என்ற அவரின் சொல்லை மிகை படுத்தி மீறுவதற்கு ஒரு போதும் நான் தயாராக இல்லை. உண்மையில் வேறு வேலை கிடைக்கும் வரை இந்த வேலையை செய்யலாம் என்றெண்ணிதான் போனேன். ஆனால் கூலி என்ற அப்பாவின் முத்திரையின் நிழல் எங்கள் மேல் விழுவதற்கு நானே காரணமாக இருக்க கூடாது. அதைவிட கூலி என்ற முகமுடியை அணிவிக்க இவர் யார். சிலர் இதுபோன்ற முத்திரை குத்துவதில் கில்லாடிகள். முகத்துக்கு நேராகவும், முகத்துக்கு பின்னாடியும் எப்படி வசதி படுகிறதோ அப்படி முத்திரையை குத்துகிறார்கள். இது விதி செய்த சதி என்று வரையருக்க நான் பக்குவப்படவில்லை. தாத்தாவிடமிருந்து அப்பாவுக்கும் அப்பாவிடமிருந்து எனக்கும் இடம் மாறப்போகும் முத்திரையை உடனே கிழித்தாக வேண்டும். அது என்னால் முடியும். தாமதிக்காமல் குளிர்சாதன அறையை விட்டு வெளியேறினேன். மூடுந்து ஓட்டுனரான அந்த இளைஞன் வெளியே நின்றுகொண்டிருந்தான். எனக்கு உடல்நலம் சரியில்லை. வீட்டிற்கு போகனும் என்றேன். அவன் என்னை எந்தக்கேள்வியும் கேட்கவில்லை. இவன் இதை எதிர்பார்த்திருக்கவும் கூடும் என நினைக்கிறேன். வீட்டை அடைந்ததும் நாளை வேலைக்கு ஏற்றுவதற்கு வர வேண்டாம். நான் வர மாட்டேன் என்றேன். அவன் அப்போதும் எதுவும் பேசவில்லை. முக்கியமாக இந்த முறை அவன் என்னைப்பார்த்து சிரிக்கவில்லை.

நன்றி - வல்லினம்
...மேலும்

Feb 19, 2011

இந்திய அரசு - ஒரு விசாரணை - வ.கீதா


(வ.கீதா கட்டுரையாளர், சுயமரியாதை இயக்கம் மற்றும் பெண்ணியம் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்களை வெளியிட்டுள்ளார். எஸ்.வி.ராஜதுரை அவர்களோடு இணைந்து பல நூல்களை எழுதியுள்ளார். முழுநேர ஆய்வாளர்)

தெற்காசியாவில் தான் வல்லரசாக அறியப்பட வேண்டும். தனது பலத்தையும் அதிகாரத்தையும் கண்டு பிற தெற்காசிய நாடுகள் அச்சப்பட வேண்டும். தனது ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளாக அவை இருக்க வேண்டும் என்ற பேராசையும் ஆணவமும் இந்திய அரசின் பண்புகளாக, அடையாளங்களாக தங்கிவிட்டன. பிறதெற்காசிய நாடுகள் அமெரிக்காவுக்கு இணையான நாடாக, தம்மை அதட்டி, மிரட்டி அடிபணிய வைக்க வல்லவராக இந்திய அரசினை அடையாளங் காண்கின்றனர். நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சாமான்ய மக்களுங்கூட இந்திய அரசின்பால் வெறுப்பை செலுத்தத் தயங்குவதில்லை. உலக காவலாளிகளாக விளங்கும் அமெரிக்கா சம்பாதித்து வைத்துள்ள வெறுப்புக்கு இணையான ஒன்றை இந்திய அரசு சம்பாதித்துக் கொண்டுள்ளது என்று கூடச் சொல்லாம்.

வல்லரசாக தன்னை அறிவித்துக் கொள்ளும் இவ்வரசின் தன்மை, உள்ளீடு பற்றி நாம் சிந்திக்க வேண்டியது என்பது காலத்தின் தேவையாக உள்ளது. இத்தகைய சிந்தனையை வளர்த்தெடுக்கும் முகமாக சில அனுமானங்களை இக்கட்டுரை முன் வைக்கிறது. தாராளவாத சனநாயக சிந்தனையில் தேசநலம், குறிப்பிட்ட தேசத்தின் இறையாண்மை முதலியன குடிமக்களின் நலம், குடியரசின் திண்மை ஆகியவற்றோடு தொடர்பு படுத்தப்படுவதும் அந்த அடிப்படையில் விளக்கப்படுவதும் வழக்கம். இந்தியா போன்ற சனநாயக நாடுகளின் அரசியல் வாழ்க்கையை மதிப்பிடுவதற்கும் புரிந்து கொள்வதற்கும் இத்தகைய விளக்கங்களும் வரையறைகளும் கையாளப்படுவதும் வழக்கம். இத்தகையவற்றின் அடிப்படையில் இந்திய அரசு பறைசாற்றும் தேசநலம், தேசத்தின் இறையாண்மை குறித்த வாதங்களை பரிசீலிக்க முற்படுவோமேயானால் சாதி நலன்களுக்கு தேசிய முலாம் பூசப்பட்டு அவையே பொது நலன்களாக உருமாற்றப்படுவது என்பது நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்று வருவதை தற்கால நிகழ்வுகள் பல நமக்கு உணர்த்துகின்றன.

முதலாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், சிறப்பு பொருளாதார மன்றங்களை அமைத்தே தீருவோம் என்பதில் உறுதியாக நின்று கோடானு கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கத் துணியும் அரசின் மெத்தனம், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இறந்து போனதற்கு காரணமாக உள்ள நரேந்திர மோடியின் பொருளாதார வளர்ச்சிப் பணிகளை முதலாளிகள் புகழ்ந்துப் பேசுவதற்கு வழிவகுத்துக் கொடுக்கும் அரசின் பொருளாதாரத் திட்டங்கள், வாழ்வாதார உரிமையை தக்கவைத்துக்கொள்வதற்காக ஆதிவாசிகளும், குடியானவர் களும்,தலித்துகளும் முன்னெடுத்துள்ள போராட்டங்களை ‘பயங்கரவாத’ செயல்பாடுகளாக அடையாளப்படுத்தும் அரசின் அறமற்ற, பொய்யான அரசியல் தந்திரம்: இவை அனைத்தையும் செய்தாலும் நாட்டு நலம், எல்லைப் பாதுகாப்பு, இந்திய இறையாண்மையை பேணுதல் என்பனவற்றின் பெயரில் தனது செயல்பாடுகளை சாடுபவர்களையும் எதிர்ப்பவர்களையும் ‘தேச துரோகி’களாக முத்திரையிட்டு, சாமான்ய குடிமகனின் உணர்ச்சி மேம்பட்ட தேசியவுணர்வை உசுப்பிவிட்டு, தனது குற்றங் குறைகளை அரசு இருட்டடிப்பு செய்து விடுகிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் ‘சட்ட ஒழுங்கு’ நடவடிக்கைகள், ‘பாதுகாப்பு’ நடவடிக்கைள் ஆகியவற்றை, தான் பேண விரும்பும் இறை யாண்மைக்கான உத்திரவாதங்களாக இந்திய அரசு ஆக்கியுள்ளது. தனது ‘நியாயத்தை நிறுவுவதன் பொருட்டு மக்கள் மத்தியில் பணிப்புரிந்து வருவோரையும், அவர்களுடைய சனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போரையும் ‘குற்றவாளி’களாக இந்த அரசு அறிவித்து வருகிறது. அரசு என்ன செய்தாலும் அது சட்டத்துக்கு உட்பட்டதாக விளக்கப் படுவதும், அதனை எதிர்ப்பவர்கள் நியாயம், நீதிகோரி போரிட்டாலும் அது சட்ட விரோதமானதாக ஆக்கப்படுவதும் காலத்தின் கோலமாக உள்ளது.

இந்திய அரசின் செயல்பாடுகளை மேன்மேலும் ஊக்குவித்து அவற்றை தொடரச் செய்வதில் பன்னாட்டு மூலதனத்துக்கும் உள்நாட்டு முதலாளிகளுக்கும் பெருத்த அக்கறை உள்ளது போலவே, முதலாளிகள் பெறும் கொள்ளை இலாபத்தில் தம் பங்கைக் கேட்டுப் பெறுவதற்காகக் காத்திருக்கும் நிர்வாகத் துறைக்கும், அரசின் நியாயத்தை ஏற்று அதற்கு மெருகூட்டும் நீதித்துறைக்கும் அக்கறை உண்டு. சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று வரும் முதலாளித்துவ பகல் கொள்ளைக்கு ஆதரவாக அனைத்து அரசு நிறுவனங்களும் துறைகளும் செயல்பட்டு வருவதை நாம் யாவரும் அறிவோம். இந்தப் பகல் கொள்ளையால் பெரும்பாதிப்பை சந்தித்துள்ள ஆதிவாசிகளை கூறுபோட்டு அவர்களின் சிலரைக் கொண்டே அங்கு நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ளத் துணிந்துள்ள மாநில அரசின் சாதுரியமும் அதனை ஒரு அரசியல் கொள்கையாக ஆக்கத் துடிக்கும் மத்திய அரசின் சாணக்கியத்தனமும் இந்திய அரசினை இயக்கும் பார்ப்பனீயத் தின் வெளிபாடுகளே அன்றி வேறல்ல.

இந்து - இந்தி -இந்தியா குறித்து தமிழ்நாட்டில் நாம் அதிகம் பேச வேண்டியத்தில்லை என்ற போதிலும் பெரியாராலும் அம்பேத்கராலும் ‘பார்ப்பன _ பனியா’ அரசு என அழைக்கப் பட்ட அரசின் தன்மையை குறித்து நாம் தொடர்ந்து பேசுவ தென்பது தவிர்க்க முடியாததாக ஆகியுள்ளது. இதைச் செய்யும் போது இந்த அரசின் ‘சனநாயக’த் தன்மை குறித்தும் யோசிக்க வேண்டியவராகிறோம்.

இந்திய பாராளுமன்றத்தை எடுத்துக் கொள்வோம். காலங்காலமாக அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட கடைநிலை சாதிகளின், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின், தாழ்த்தப் பட்ட சாதிகளின் பிரதிநிதிகள் அதில் இன்று கூடுதலான எண்ணிக்கையில் உள்ளனர். தேர்தல் அரசியலும் அது சாதிக்க விரும்பும் வரம்புக்குட்பட்ட சனநாயகமும் இதை சாத்திப் படுத்தியுள்ள போதிலும், இப்பிரதிநிதிகள் அரசியல் வாழ்க்கை யில் தமக்குரிய இடத்தையும் உரிமையையும் பெறுவதற்காக அவர்களது மூதாதையர்களும், சென்ற தலைமுறையினரும் மேற்கொண்ட போராட்டங்கள்தான். இந்த குறைந்தபட்ச சனநாயகத்துக்கும் கூட ஆதாரமாக விளங்கி வருகின்றன. பார்ப்பனர்களின் மேலாண்மையை முற்றிலும் தகர்க்காது. பிறப்பின் அடிப்படையில் அவர்கள் செலுத்தும் மேலாதிக்கத்தில் பங்கு பெற விழையும் இதர சாதியினரின் அரசியலுங்கூட ஏதோவொரு வகையிலான சனநாயகத்தை சாத்தியப்படுத்த வல்லதுதான்.

இன்னும் சொல்லப்போனால் இவ்வாறு உள்ள படியே ஆட்சியதிகாரத்தில் பங்கு கேட்க விழையும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அரசியல் தலைமைகளின் அரசியல் ஆர்வத்துக்கான நியாயத்தை, மேற்கூறிய போராட்டங்களைப் பற்றிய நினைவும் அந்நினைவு தோற்றுவிக்கும் மனக்கிளர்ச்சி யும்தான் இயற்றியளித்துள்ளன. மேலும்,சாதி ஏற்றத் தாழ்வுகள் மலிந்து கிடக்கும் சமுதாயத்தில் சாதி நலன்களை கடந்த,பொதுநலனை, பொதுவுரிமையை ‘அரசு’ என்ற ஒன்றுதான் இதுநாள் வரைக்கும் பிரதிநிதித்துவப்படுத்தி வந்துள்ளது. அத்தகைய பொதுவுரிமைக்கான அடிப்படை ஆதாரங்களையும் அந்த அரசின் இருப்புக்குக் காரணமாக உள்ள அரசியல் சட்டமும்,அதன் முக்கியமான பகுதியாக உள்ள அடிப்படை உரிமைகள் சாசனமும் தான் வழங்கி வருகின்றன. இத்தகைய அரசை இயக்கும் சனநாயக உந்து சக்திகளில் ஒன்றான பாராளுமன்றம் கண்டுள்ள சனநாயக மாற்றங்களை இந்தக் கோணத்தலிருந்தும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பொதுவுரிமைக்ககான அரசாக அது இருக்க வேண்டுமானால் சகல சாதியினரும் தமக்குரிய பங்கை கோருவது என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

பிரச்சினை என்னவெனில் நவீன கால இந்திய அரசு தன்னை ஒரு குடியசராக வரையறுத்துக் கொண்டதாலேயே பொது உரிமையை பிரதிநிதித்துவப்படுத்த வல்லதாகி விடுவதில்லை. காரணம், ஒரு குடியரசின் தன்மை அது வகுத்துக் கொண்டுள்ள அற்புதமான சட்டத்திட்டங்களைப் பொருத்து இருப்பதில்லை. அச்சட்டத்திட்டங்கள் அரசியல் வாழ்வுக்கு மட்டுமில்லாது சமுதாய வாழ்வுக்கும் உரியவையாய் அறியப்படுவதும், பொருளாதார வாழ்வில் சமத்துவத்தையும் சமநீதியையும் ஏற்படுத்த வல்லதுமாக இருந்தால்தான் ஒருஅரசானது ‘குடியரசு’ என்ற தகுதியைப் பெறும். அரசியல் சட்டத்தைக் கொண்டு சாதிய தன்மையுடைய இந்திய அரசை குடியரசாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் பணிபுரிந்த அம்பேத்கரும் கூட, பின்னாட்களில் சமுதாய மாற்றம் என்பதை இவ்வாறு சாதிக்க இயலாது; முற்றிலும் வேறுபட்ட அறவியல் வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே சாதி இந்து சமுதாயத்தை எதிர்க்கொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அரசியல் சட்டத்தை வரைந்த அறிவு தம்மத்தில் தன்னை இணைத்துக் கொண்டது.

அம்பேத்கரைப் போல அல்லாது, அரசியல் சட்டம் உருவாக்கும் முயற்சியை பற்றி தொடக்கம் முதலே பெரியாருக்கு நல்லெண்ணமும் நம்பிக்கையும் இருக்கவில்லை. சாதி அமைப்பை கட்டுக்குலையாது காப்பாற்றும் வேலைகளை அரசியல் அமைப்பின் பார்ப்பன-பனியா அங்கத்தினர் செய்து வருவதாக அவர் 1948இலேயே குற்றம் சாற்றினார். பார்ப்பனீய தத்துவமும் பனியாக்களின் பொருளாதாரச் கொள்கைகளும் கைக்கோர்த்துக்கொண்டு பொதுவுரிமை, பொதுவுடைமை ஆகிய இரண்டையும் தவிடுபோடியாக்கி விடும் என்பதை அவர் தொடர்ந்து சுட்டிக்காட்டினார்.

தத்துவரீதியாகவும் வர்க்கரீதியாகவும் குடியரசாக விளங்காது இந்து-இந்தி-இந்தியாவாக அவதாரம் எடுத்துள்ள இந்திய அரசானது தொடர்ந்து தன்னை ஒரு சனநாயக அரசாக இனங்காட்டிக் கொண்டு வருவதன் சூட்சமத்தை மேலும் ஆராய்வோம்.

குறிப்பிட்ட சாதி, வர்க்க நலன்களை முன்னிட்டே அரசின் திட்டங்களும் செயல்பாடுகளும் அமைந்துள்ள போதிலும், அரசு தன்னை அனைவருக்குமான அரசாகக் காட்டிக் கொள்ளவும் விழைகிறது. சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே தனது ‘சனநாயக’த் தன்மையின் மேன்மையையும் பாகிஸ்தானின் ‘ஏதேச்சதிகார’ அரசியலையும் ஒப்பிட்டுக்காட்டி முற்போக்கான அரசாக தன்னை காட்டிக் கொண்டது. மேலும்,தாராளவாத சனநாயகம் என்பதில் முழு நம்பிக்கையுடைய அரசியல் தலைமைகள் அக்காலக் கூட்டத்தில் அரசியல் வாழ்க்கையிலும் சுதந்திர இந்தியாவின் அரசியலதிகாரத்திலும் பங்கு வகித்து வந்தனர். தங்களது வர்க்கசாதி நலன் அச்சுறுத்தலுக்கு ஆளானபோது இவர்கள் வெகுண்டு செயல்பட்டனர் என்பதை மறுப்பதற்கில்லை.

தெலுங்கானா போராட்டத்தை நேரு அரசு முடிவுக்குக் கொண்டு வந்தவிதம்,தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யுனிச அரசை (கேரள அரசை) கலைத்த தோரணை போன்ற சம்பவங்கள் சுதந்திர இந்திய அரசின் பண்புகளை சுட்டுவனவாக அமைந்தன. 1950களில் பெரியாரின் கொடி எரிப்புப் போராட்டத்தையும் சட்ட எரிப்புப் போராட்டத்தையும் ஒடுக்கியதிலும் நேரு பேணிய சனநாயகத்தின் வரம்புகள் வெளிபட்டன என்றாலும் தாராளவாத அரசியல் சிந்தனையுடைய சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தவும் சுதந்திர இந்திய அரசு ஆவல் கொண்டிருந்தது. நீதித்துறை சுயாதீனமாக செயல்படுவதை அது எல்லா நேரங்களிலும் கட்டுப்படுத்தவில்லை. அரசாங்கம், கட்சி, நிர்வாகம், ஆகியன தம்மளவில் சுதந்திரமாக இயங்குவதையும் ஓரளவுக்கு அனுமதித் தது. பாராளுமன்ற செயல்பாடுகளும் சனநாயகத்தை விரிவுப்படுத் துபவையாக அமைந்தன. நேரு அரசு தொடர்ந்து எதிர்க்கட்சி களின் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

காலப்போக்கில், பாராளுமன்ற உறுப்பினர்களின் அடை யாளங்களும் மாறின. 1970ஆதிக்கசாதிகளையும் வாக்கங்களை யும் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல், நாம் ஏற்கனவே கூறியதுபோல, பல்வேறு சமூக வகுப்புகளின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகத் துறையில் இந்த வகுப்பினருக்குப் போதுமான பிரதிநிதித்துவம் வாய்த்திருக்கவில்லை என்றாலும்,பாராளுமன்ற அரங்கில் வகுப்புரிமைக்கான விவாதத்தையும் அதற்கான தேவையையும் முன்னெடுத்துச் செல்ல இவர்களால் முடிந்தது. பல்வேறு சமூக, சாதி நலன்களுக்கிடையே நிலவிய முரண்கள், போட்டா போட்டிகள் முதலியவற்றுக்கு பாராளுமன்ற சனநாயகம் ஈடுகொடுக்க வேண்டியிருந்தது. மண்டல் பரிந்துரைகள் தொடர்பாக நிகழ்ந்த நிகழ்வுகளும், சமுதாய களத்தில் இப்பரிந்துரைகளின் விளைவாக உண்டாகிய சலன்களும் இந்திய சனநாயகத்தின் எல்லைகளை விரிவுப்படுத்தின. இந்திய அரசு தனது உள்ளார்ந்த வர்க்க, சாதி நலன்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத போதிலும் இவற்றுக்கு சவாலாக தோன்றியிருந்த எதிர்ப்புக் குரல்களுக்கும் எதிர்வினைகளுக்கும் செவி மடுக்க வேண்டியிருந்தது. ஏன், அவற்றுடன் சமரசம் செய்து கொள்ளவும் தள்ளப்பட்டது.

பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் இவ்வாறிருக்க, மாறி வரும் சமூகச் சூழலின் எதிரொலிகள் வேறு தளங்களிலும் ஒலிக்கத் தொடங்கின. 1975க்குப் பிறகு, அதாவது அவசர சட்டக்காலத்துக்குப் பிறகு, இந்தியாவின் அரசியல், சமுதாய வாழ்வில் சிவில் உரிமை அமைப்புகளும் இயக்கங்களும் முக்கிய பங்காற்றி வந்தன. அடிப்படை உரிமைகள் என்பனவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த வரையறைகளுக்கு புரட்சிகரமான விளக்கங் களை அளித்து அவற்றின் வீச்சை சிவில் உரிமைகளை வழக்காட வந்த வழக்கறிஞர்கள் விரிவுப்படுத்தினார்கள். எடுத்துக்காட்டாக உயிர் வாழ்வதற்கான உரிமை என்பது மிக விரிவான பொருள் பெற்று, சாமான்ய இந்திய குடிமக்களின் உரிமைப் போராட்டங் களுக்கு ஆதாரமாக அமைந்தது. அரசியல், சமுதாய களங்களில் தீர்க்கமுடியாதப் பிரச்சினைகள் நீதிமன்றங்களில் அடைக்கலம் கண்டன. நிர்வாகமும் அரசாங்கமும், பாராமுகமாக இருந்தா லும் நீதிமன்றம் கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையை வளர்க்க, மக்கள் சார்பாக வழக்காட வந்தவர்களின் நேர்மையும் திறமையும் காரணமாக அமைந்தன.

இவ்வாறாக மக்களின் செயல்பாடுகளும் அரசியல் பங்கேற்பும் இந்திய அரசை சனநாயகப்படுத்த, அதாவது, சற்றே சனநாயகப் படுத்த உதவின. அரசின் வர்க்க-சாதி பண்புகள் நேரடியாக மேலாதிக்கம் செலுத்தும் நிலை மாறியமைந்தது. இப்பண்புகளை உருட்டிப்போட்டு, பதம்பார்த்து, தரம்பிரித்து பிரத்யேக வடிவங்களில் அவற்றை செதுக்க பல சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முட்டி மோதுவதென்பது தவிர்க்க முடியாத தாகியது.

அதேசமயம் இந்தியஅரசு தொடர்ந்து தனது உள்ளார்ந்த சாதி-வர்க்க நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் அவற்றை பொது நலன்களாக விளக்கி, பரந்துப்பட்ட மக்களின் ஒப்புதலைப் பெறவும் முக்கியமான கருத்தியல் பணிகளை மேற்கொள்ள தவறவில்லை. தேசியம் என்ற கருத்தாக்கத்தை சமயத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற வகையில் கையாண்டது. இந்தியா, சீனா எல்லைப் போரின்போதும், வங்கதேச விடுதலைப் போரின்போதும். தேசபக்தியாக அவதரித்த தேசியமானது, அவசர சட்டக் காலத்தில் கண்டிப்பான கொள்கையாகவும் நாட் டின் எதிரிகளாக அரசால் அடையாளங் காணப்பட்டவர்களை தண்டிக்கவும், அத்தகைய தண்டனையை நியாயப்படுத்தவும் உதவக்கூடிய பாசிச சாயலுடைய சூத்திரமாகவும் உருவெடுத்தது. இந்திய அரசின் மேலாண்மை காஷ்மீரத்திலும் நாகலாந்திலும் எதிர் வினைகளை சந்தித்தப்போது இத்தேசியம் வன்மத்தை உமிழ்ந்தது. தீர்க்க இயலாத வர்க்க சாதி முரண்பாடுகளை களையெடுக்க வகுப்பவுவாதத்தை ஊக்குவித்து ‘இந்து’க்களை அணித்திரட்டும் தேசியமாக (1980களில்) பரிணமித்தது.

தேசியம் கண்ட பல்வேறு அவதாரங்களுக்கு சிகரம் வைத்தாற் போல இந்துத்துவம் என்ற தத்துவம் எழும்பி, அப்பட்டமான சனநாயக விரோத வடிவங்களை மேற்கொண்டு,சிறுபான்மை யினரை வதைத்தது. வருணதருமத்தை நிலைநிறுத்தப் பார்த்தது.

1990களின் இறுதி ஆண்டுகளில் உருதிரட்சி பெற்று வளர்த்த இந்துத்துவம் இந்திய அரசின் வர்க்க-சாதி நலன்களுக்குரிய பிரத் யேக அடையாளமாக அமைந்தது. இந்நலன்களை ஊடறுக்க வல்ல சமூக பின்புலத்தையும் கருத்தியல் செறிவையும் பெற்றிருந்த அரசியல் மரபுவழி வந்த மாயாவதி போன்றவர்கள் கூட,இந்தஅடையாளத்துடன் சமரசம் செய்ய துணிந்தனர் என்றால், இந்துத்துவம் சாதித்த அரசியல் வெற்றியை என்னவென்று சொல்வது? பெரியார் பலமுறை சொன்னதுபோல, ‘பலித்தவரை என்பதுதான் பார்ப்பனீயம்’ என்பதற்க்கு இதைவிடச் சிறந்த சான்று இருக்குமா என்று தெரியவில்லை.

இந்துத்துவம் வேறொன்றையும் அம்பலப்படுத்தியது. தாராளவாத சனநாயக அரசுக்குரிய பண்புகளை ஏற்று இயங்கிய அரசானது, உண்மையில், யாருக்கானதாக, யாருடைய உரிமையைக் காக்க வல்லதாக இருந்து வந்துள்ளது என்பதை அரசு அமைத்த சச்சார் குழு வெளிப்படுத்தியது. இக்குழு, இஸ்லாமியர்களின் வாழ்நிலைமைகளை ஆராய்ந்தது. அவர்களின் முன்னேற்றத்துக்கென சில பரிந்துரைகளை செய்தது. இந்துத் துவத்தின் கொடூர முகத்தை வெளிப்படுத்தவும், தனது ‘மரச்சார் பற்ற’ அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்த குழுவை அமைத்திருந்தாலும், அக்குழுவின் பரிந்துரைகளினு டாக இந்துத்துவத்தின் பாரபட்சங்கள் சாதித்தவை மட்டும் வெளிபடவில்லை. சுதந்திர இந்தியாவில் நெடுநாள் ஆட்சி நடத்திய ‘மதச்சார்ப்பற்ற’ காங்கிரஸ் அரசுகள் யாவும் செய்ய தவறியவையும் செய்ய மறுத்தவையும் வெளிபட்டன.

குறிப்பிட்ட வர்க்கசாதிகளின் பிரதிநிதியாக, காப்பாளனாக, விளங்கும் இந்திய அரசின் உள்ளார்ந்த தன்மைக்கும் குறிப்பிட்ட வரலாற்று சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப மாறியமையும் அதன் செயல்பாடுகளுக்கும் இடையிலான இடைவெளியும் முரண்பாடுகளும் தான் எதிர்வினைகளுக்கும் போராட்டங் களுக்கும் தளம் அமைத்து தருகின்றன. இத்தகைய போராட்டங்கள் அரசின் உள்ளார்ந்த தன்மையை மாற்ற முனையலாம். அல்லது உள்ளதைப் பங்குப் போட்டுக் கொள்வதற்கான போராட்டமாக இருக்கலாம். முதலாம் வகைப்போராட்டத்துக்குக்கு இரண்டு முக்கிய கருத்தியல் மரபுகள் ஆதாரமாக அமையலாம்: இந்து-இந்தி-இந்தியாவை எதிர்த்து குறிப்பிட்ட தேசிய இன அடையாளத்தை முன்நிறுத்திய மரபு, அரசின் வர்க்க பண்பை எதிர்த்து அதற்கு எதிராக ஆயுதங்தாங்க துணிந்த இடதுசாரி மரபு.

முதலாம் மரபு தமிழகத்தில் உயிர்ப்புடன் செயல்பட்ட காலகட்டத்தில், இந்தியா என்பதற்கு எதிராக தமிழ், திராவிட அடையாளங்களை முன்நிறுத்திய அதே வேளையில்,இந்தியாவின் சாதி வர்க்கப் பண்புகளை விமர்சித்தும் கண்டித் தும், பார்ப்பனீயத்தை எதிர்த்தும் செயல்பட்டது. இன்று இம்மரபுக்கு எதிர்வினையாற்ற வல்ல ஆற்றல் இருக்கிறதா என்று தெரியவில்லை. திராவிட இயக்கம் கண்ட கட்சிகள் யாவும் இந்திய அரசின் பங்காளிகளாக உள்ளதுடன், அவ்வரசுக்கு ஆதாரமாக உள்ள வர்க்கப் பிரிவுகளுடனும் சாதிகளுடனும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளன. தொடர்ந்து ‘தமிழ் தேசிய நலம்’ குறித்து பேசுவோரில் பலர் தமிழ் அடையாளத்தை முன்நிறுத்தி போராடுகிறார்களேயன்றி, இந்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் வர்க்க சாதியினரையோ அவர்கள் போற்றும் ‘இந்து’ தேசியத்தையோ போதுமான அளவுக்கு எதிர்ப்பதில்லை. அவ்வாறு எதிர்ப்பதன் தேவையை வலியுறுத்து வதில்லை. தமிழுக்குள் அனைத்து முரண்பாடுகளையும் முடக்கிவிட முடியும் என்ற நினைப்பில் இவர்களில் பலர் செயல்படுகின்றனர்.

ஆயுதங்களை கையிலெடுத்து களம் இறங்கியுள்ள இடது சாரிகள் அரசுக்கு எதிராகவும்,ஆளும் வர்க்க சாதியினருக்கு எதிராகவும் வர்க்கப் போரை முன்னெடுத்துச் செல்ல மேற்கொண்டுள்ள செயல்பாடுகள் அரசால் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்குபவர்கள் அரசின் வன்மத்தை அதிகரிக்கச் செய்கிறார்கள் என்பது கண்கூடு, இவ்வன்மத்துக்கு ஆளாகும் எளிய மக்களின் கதிக்கும் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள அமைதியான புரட்சி செயல்பாடுகளுக்கும் யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?

இந்திய அரசை உள்ளவாறே சனநாயகப்படுத்த முடியுமா? உண்மையான இறையாண்மையை வரையறுத்து பாதுகாப்ப தென்பது சாத்தியமா? தாராளவாத சனநாயகத்தின் வரம்புகளை குலைக்காமல் இந்திய அரசினை எதிர்கொள்ள இயலுமா?அவ்வாறு அவ்வரம்புகளை மீற முனைபவர்கள், தாராளவாத சனநாயகம் சாதித்தளிக்கக்கூடிய சிற்சில வெற்றிகளை இழக்கவும் கைவிடவும் தயாராக உள்ளனரா?

இந்திய அரசு குறித்த விமர்சனங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

மாற்றுவெளி - ஆகஸ்ட்09
...மேலும்

Feb 18, 2011

பறவைகளும் விழிக்காத அதிகாலையில்.... - தி.பரமேசுவரி


நிறை சூலியாய் மலை மீது ஏறிக் கொண்டிருக்கிறாள் ஒரு பெண். தான் வளர்க்கும் ஆடுகளுக்குப் புல் வெட்டுவதற்காக அவள் ஏறுகிறாள். துணைக்காகவும், தன் குழந்தைகளுக்குக்காகவும் அவள் உழைத்தே ஆகவேண்டும். மலை மீது வலி எடுத்துக் கதறும் அவள், தன்னைச் சமாளித்தபடி தன்னுடன் வந்த பெண்களின் துணையுடன் குழந்தை பெற்று, தான் சேகரித்த புல்லுக்கட்டின் மீதே குழந்தையைப் போட்டு இரட்டைச் சுமையுடன் மலையிலிருந்து இறங்குகிறாள். பன்னிரண்டு குழந்தைகளைப் பெற்று அதில் ஐந்து குழந்தைகளை இழந்தவள். குடிகாரக் கணவனிடம் அடி, உதை பட்டு கசந்த வாழ்வோடு முப்பத்திரண்டு வயதிலேயே கைம்பெண் ஆனாலும் மனந்தளராமல் குடும்பத்தை நடத்தினாள். அவள்தான் நாகம்மாள்.

இன்று மாற்று நோபல் பரிசு பெற்று, இந்தியாவைப் பெருமையுடன் நெஞ்சு நிமிரச் செய்திருக்கும் கிருஷ்ணம்மாளின் தாய் தமிழ் நாட்டின் தென் கோடிக் கிராமமான அய்யங்கோட்டையில் 1926இல் தலித் சமூகத்தில் பிறந்தவர். தாயிடமிருந்து தான் பெற்ற துணிவையே சொத்தாகக் கொண்டு, தன் முயற்சியால் கல்லூரிக் கல்வியை முடித்தார். தன் தாயைப் போலவே துன்பப்படும் தலித் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட வேண்டும், சமூக அக்கிரமத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்பவற்றைத் தன் இலக்குகளாகக் கொண்டார். காந்தியடிகளின் சர்வோதயா இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு வினோபா பாவேவுடன் களப்பணி புரிந்தார். அங்குதான் அவர் தன் வருங்காலக் கணவர் ஜெகந்நாதனைச் சந்தித்தார். பெரும் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த ஜெகந்நாதன், காந்தியடிகளின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தம் கல்லூரிக் கல்வியை இடையிலேயே துறந்தார். சட்ட மறுப்பு இயக்கம் , வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றிலும் பங்கு கொண்டார். இந்தியா விடுதலை பெற்ற பிறகே தம் திருமணம் என்று ஒரு மனதாய்த் தீர்மானித்திருந்த இருவரும் 1950 இல் தம்பதிகளாயினர்.

காந்தியடிகளுடன் ஒரே மேடையில் பேசவும், 1954 இல் மார்ட்டின் லூதர் கிங்கைச் சந்திக்கவுமான அரிய வாய்ப்புகளைப் பெற்ற கிருஷ்ணம்மாள், இந்திய விடுதலைக்குப் பிறகு தம் கடமை முடிந்ததென ஒதுங்கி இராமல், சுதந்திர இந்தியாவின் சீரான கட்டமைப்பிற்கும் தன்னாலியன்றதைச் செய்ய வேண்டும் என்ற உந்துதலுடன் செயலாற்றத் தொடங்கினார். சென்னையில் அவர் ஆசிரியர் பயிற்சிப் படிப்பைப் முடித்து வந்த சமயத்தில் ஜெகநாதன், 1950 முதல் 1952 வரை வினோபாவுடன் பூமிதான இயக்கத்துக்காக வட நாடு முழுதும பயணித்தார். நிலமற்றவர்களுக்கு நிலங்களைப் பங்கிட்டு அளித்து அவர்களையும் உயர்த்துவதன் மூலமே சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதே அவர்தம் நம்பிக்கை. சென்னை திரும்பிய ஜெகநாதனுடன் கரங் கோர்த்து 1953 முதல் 1967 வரை தமிழ்நாடு முழுதும் பயணித்து பூமிதானத் திட்டத்திற்கும் கிருஷ்ணம்மாள் அயராது பாடுபட்டார். உச்ச வரம்புச் சட்டத்தற்குப் புறம்பாக, தன் உறவினர் மீதும் பினாமிகள் பேரிலும் பதியப்பட்டிருந்த நிலங்களை, பெருநில உடைமையாளர்களிடம் இருந்து சுமார் நான்கு மில்லியன் ஏக்கர்களைச் சத்தியாக்கிரக முறையில் போராடிப் பெற்ற இவ்விருவரும் அதனை நிலமற்ற விவசாயிகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தனர். இதற்காகச் சுதந்திர இந்தியாவிலும் இவர்கள் சிறை செல்ல நேர்ந்தது.

தமிழகம் முழுவதும் சுற்றி வந்த இத்தம்பதியினர் ஓரிடத்தில் நிலை கொள்ளக் காணமாயிருந்தது, 1968 இல் நடைபெற்ற கீழ் வெண்மணிப் படுகொலை. கூலியை உயர்த்திக் கேட்டதற்காக நாற்பத்து நான்கு தலித் மக்கள், பெண்கள், குழந்தை உட்பட தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தை அறிந்த கிருஷ்ணம்மாள் தான் உடனடியாகக் கீழ்வெண் மணிக்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்த போது சற்றும் தயங்காமல், 'நீ போய்ப் பணியாற்று. நான் உடன் சேர்ந்து கொள்கிறேன்' என்று ஊக்குவித்தார்.

கீழ்வெண்மணிக்குச் சென்றவரின் முதல் பணி, அப்படுகொலைக்குக் காரணமான தீண்டாமைக் கொடுமையின் அடிவேரை அசைப்பதாக இருந்தது. 1970 களில் - தீண்டாமை மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்ட நேரம் அது – தலித் மக்கள் செருப்பணியவும், பொதுக் கிணறுகளில் நீரெடுக்கவும் தடை இருந்தது. கோயிலினுள் சென்று வழிபடும் உரிமைய (தலித் மக்கள்) கனவிலும் நினைக்க முடியாது. இதற்கெல்லாம் எதிராக அவர்களின் சிறு முனகலையும் கூட உயர்சாதியினரால் தாங்க முடியாத நிலையில், எதிர்த்தவர்களை மரத்தில் கட்டி வைத்து மாட்டுச் சாணம் கரைத்த நீரைக் கட்டாயப் படுத்தி புகட்டினர். இருபதாம் நூற்றாண்டில் கூட இறுக்கமாய் இருந்த சாதிய வன்கட்டமைப்புகளுக்கு எதிராகவும் நிலமற்ற ஏழைகளுக்கு நிலத்தைச் சொந்தமாக்கவும் 'உழுபவர்களுக்கே நிலம் சொந்தம்' என்ற இயக்கத்தை 1981 இல் தொடங்கினர் (Land for tiller’s freedom – Lafti). வங்கிகளில் கடன் பெற்று அதன் மூலம் நிலமற்றோர்க்கு நிலங்களை வாங்கித் தருதல், அவர்கள் மூலமாகவே கடனை அடைத்தல், சுற்றுச் சூழலைப் பாதிக்காத வீடுகளைக் கட்டித் தருதல், உழவுப் பணி நடைபெறாத காலங்களில் விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு, அவரவர் ஆர்வத்திற்கேற்ப தையல், தச்சு, நெசவு, கொத்து வேலை, கணிணிப் பயிற்சி, இயந்திரங்களைப் பழுது பார்த்தல் போன்ற தொழில்களைப் பயிற்றுவிப்பதே இவ்வியக்கத்தின் பணிகள். ஓரிரு வரிகளில் நம்மால் எழுதப்படும் இப்பணிகளைச் செய்து முடிக்க இவர்கள் பட்ட பாடு மிக அதிகம். தலித்கள், நில உடைமையாளர்களாக மாற்றம் பெறுவதை விரும்பாத பெருநில உடைமையாளர்கள் மற்றும் உயர்சாதியினர், இவர்களால் கடனைத் திரும்பக் கட்ட முடியமா என்று சந்தேகப்பட்ட வங்கி அதிகாரிகள், தங்கள் நிலை குறித்து உணர்வற்ற தலித் மக்கள் ஆகியோருடன் மிகக் கடுமையாகப் போராட வேண்டி இருந்தது. 1975 இல் ஜெயப் பிரகாச நாராயணன் அழைப்பின் பேரில் புத்தர் ஞானமடைந்த பெருமை உடைய புனித கயாவுக்குச் சென்றனர். அங்கு ஒரு கோயில் பூசாரி பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலத்தை வளைத்து வைத்திருந்ததுடன் தலித் பெண்களிடம் பாலியல் அத்துமீறல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவ்வூர் மக்களைத் திரட்டி எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தியதன் மூலம் இப்பிரச்சனையை முக்கியமானவர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்த கிருஷ்ணம்மாள், சுமார் 20,000 ஏக்கர் வரை அப்பூசாரியிடமிருந்து மீட்டு முப்பது கிராமங்களில் இருந்த நிலமற்றவர்களுக்குப் பகிர்ந்தளித்தார். வட நாட்டுக்குச் சென்று அவர்கள் மொழியறியாமலே அவர்களுக்காகப் போராடிய அனுபவம் பற்றி 'அந்த மக்களுடன் பேசுவதற்கு அவர்களுடைய மொழியைக் கற்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நாங்கள் எங்கள் இதயத்தின் வழியே பேசினோம்' என்று பதிவு செய்துள்ளார்.

எந்த விதமான ஆரவாரமுமின்றிச் செயல்பட்டு வரும் இவர்கள், தங்கள் இயக்கத்தின் மூலமாகத் தமிழ் நாட்டில் மட்டும் 13,000 ஏக்கர் நிலத்தை 13,000 குடும்பங்களுக்குப் பங்கிட்டுள்ளனர். நிலமற்ற விவசாயிகளுக்குப் பாடுபட்டு வந்த தருணத்தில் இவர்களது கவனம் பெற்ற மற்றொரு விஷயம், சாகுபடி செய்யப் கூடிய நல்ல நிலங்களைப் பாழாக்கிய இறால் வளர்ப்புப் பண்ணைகள். 1992 இல் இப்பண்ணைகளுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர் . இம்முறை இவர்கள் போராடியது, சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத் போன்ற நகர முதலாளிகளிடமும் தொழில் முதலைகளுடனும். இறால் பண்ணைகள் கூலி விவசாயிகளின் வேலை வாய்ப்புகளைப் பறித்ததோடு நிலங்களையும் பாலையாக்கியது . குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்தது போல் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி எதற்கும் பயனற்றதாக்கியது. கடல் நீர் நிலத்தில் நுழைந்த பிறகு எதற்கும் பயனற்றதாகும் நிலத்தை வேறு வழியின்றி இந்த முதலாளிகளுக்கே குறைந்த விலைக்கு விற்கும் அவலமும் நிகழ்ந்தது. இந்த அராஜகத்தை எதிர்த்த கிருஷ்ணம்மாள், தம் இயக்கம் மூலம் மக்கள் சக்தியை ஒருங்கே திரட்டி உண்ணாநிலை ஊர்வலம் போன்ற அற வழிகளில் தம் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். காந்தீய வழியில் போராடிய அவருக்கும் அவர்தம் இயக்கத்தாருக்கும் குண்டர்களிடம் அடிபட்டதே பரிசானது. அவரை உயிரோடு கொளுத்தவும் முயற்சிகள் நடந்தன. வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன. திருட்டு போன்ற பொய்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனாலெல்லாம் மனம் தளராமல், பொது நல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் பதிவித்தனர். நீதி மன்றம், இந்திய தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் நிறுவனத்திடம் (National Environmental Engineering Institute of India – NEERI) இது பற்றி ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டது. இந்நிறுவனததின் ஆய்வறிக்கை, இறால் பண்ணைகள் நன்னிலங்களை நஞ்சாக்கும் கொடுமையை அம்பலப்படுத்தியது . இந்த அறிக்கையின் அடிப்படையில் 1996 இல் உச்ச நீதி மன்றம் நன்னிலங்களை இறால் வளர்ப்புக்காக ஆக்கிரமிப்பதைக் கண்டித்தும் கடலோரப் பகுதிகளில் 500 மீட்டருக்கு உள்ளிட்டே பண்ணைகள் அமைக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. ஆனால் அரசியல் ஆதரவோடு இன்றும் கூடப் பல இடங்களில் நீதிமன்ற ஆணை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் தம்பதியரின் போராட்டமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இடைவிடாது செயல்பட்டபடி இருக்கும் கிருஷ்ணம்மாள் , காந்திகிராம அறக்கட்டளையிலும் மதுரைப் பல்கலைக்கழகத்திலும் செனட் உறுப்பினராக இருந்துள்ளார். கல்வி, நிலச்சீர்திருத்தம் ஆகியவற்றின் தேசிய அளவிலான குழுக்களிலும் திட்டக் குழுவிலும் (National Planning Committee) பங்கு பெற்றுள்ளார். சீரிய இத்தகு செயல்பாடுகள் காரணமாக இவர்களுக்கு விருது கொடுத்துத் தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டவர்கள் பலர். அமைத்திக்கான சுவாமி பிரணவானந்தா விருது (1987), ஜம்னாலால் பஜாஜ் விருது (1996), சம்மிட் பவுண்டேஷன் விருது (1999, சுவிட்சர்லாந்து), சிறந்த பெண்மணி விருது (2004), இந்திரா ரத்னா விருது (2005), சியாட்டில் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் ஓபஸ் பரிசு (opus Prize – 2008), மாற்று நோபல் பரிசு (Right Livelihood -2008) போன்றவை குறிப்பிடத் தகுந்தவை. 82 வயதாகும் கிருஷ்ணம்மாளிடம மாற்று நோபல் பரிசுப் பணத்தை எப்படிச் செலவிடப் போகிறார் என்று வினவிய போது அவர் அளித்த பதில் நெஞ்சை நெகிழச் செய்யும், 'அது கோயில் உண்டியலில் இருக்கும் பணம் போன்றது. நாங்கள் அதைத் தொட மாட்டோம். அது ஏழைகளின் நலனுக்கே செலவிடப்படும்' என்று குறிப்பிட்டார். இவ்விருது அவரது கணவர் உட்பட நான்கு பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1930 இல் இராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகம் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அதனைப் போற்றும் வகையிலும் இன்றைய தலைமுறையினருக்கு நினைவூட்டும் வகையிலும் அதே நாளில் மீண்டும் உப்புச் சத்தியாக்கிரகம் நடத்தப்பட்டது. அவ்வூர்வலத்தில் வந்தே மாதரம், ரகுபதி ராகவ ராஜா ராம் போன்ற பாடல்களை மாணவர்கள் பாட, வேதாரண்யத்தின் முக்கியமான அன்பர்கள் உடன்வர தன் தலைமையில் ஊர்வலமாகச் சென்று அகஸ்தியம்பள்ளியில் நிறுவப் பெற்றுள்ள உப்புச் சத்தியாக்கிரக நினைவுத்தூண் அருகில் மீண்டும் உப்பெடுத்ததை மிகுந்த நெகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் அவர் நினைவு கடர்ந்தார். தன் குழந்தைகள் பூமி, சத்யா இருவருக்கும் பெரும் சொத்து எதையும் சேர்க்கவில்லை எனினும் உலகம் முழுவதும் விரிந்திருக்கும் தம் இயக்க உறுப்பினர்கள் அடங்கிய பெரும் குடும்பத்தையே சொத்தாக்கியிருப்பதாகக் கூறும் இவரை இயக்க உறுப்பினர்களும் அப்பகுதி மக்களும் உள்ளன்புடன் 'அம்மா ' என்றே அழைக்கின்றனர். இராமலிங்க அடிகளாரைத் தம் வழிகாட்டியாகவம் குருவாகவும் கருதும் இவர் அதிகாலை நான்கு மணிக்குத் துயிலெழுந்து தம் கடமைகளைச் செய்யத் தொடங்குகிறார். பறவைகளும் விழிக்காத அதிகாலை நேரத்தில் ஒவ்வொரு நாளும் தான் காணும் விடிவெள்ளியே, அன்றைய பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்கத் தேவையான சக்தியை அளிப்பதாகக் கூறுகிறார். உண்மையொளி பொழியும் முகத்துடனும் மென்புன்னகையுடனும் இராமலிங்கர் பாடல்களை மென்மையாய்ப் பாடுகிறார்.

'அருட்பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை'
'எல்லாம் கை கூடும் என் ஆணை அம்பலத்தே'.......

நன்றி : தடாகம்.காம்
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்