/* up Facebook

Jan 15, 2011

இலங்கைப் பணிப்பெண் சவுதி அரேபியாவில் கைது


குழந்தை ஒன்றின் மரணம் தொடர்பாக இன்னொரு இலங்கைப் பணிப்பெண் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

குழந்தை ஒன்றின் மரணம் தொடர்பாக இன்னொரு இலங்கைப் பணிப்பெண் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த நாகராஜா விஜயகுமாரி என்ற பெண்ணே கைது செய்யப்பட்டவராவார். குறைப் பிரவசமாக ஏழு மாதங்களிலேயே அவருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. தான் தண்டிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே அவர் குழந்தையைக் கொன்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது தொடர்பாக சவுதி அரேபியாவின் இலங்கைத் தூதரிடம் வினவிய போது அவர் இதனை மறுக்கவோ எற்றுக் கொள்ளவோ இல்லை.

இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் எல்.கெ ரணசிங்கவிடம் இது பற்றிக் கேட்ட போது தான் இது பற்றி விசாரித்து விட்டு தகவல் தருவதாகத் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை இன்னொரு இலங்கைப் பணிப்பெண்ணான லீலா சவுதி அரேபியாவில் விபத்தில் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மகரகமவைச் சேர்ந்த நந்தாவதி (59) என்கிற இன்னொரு பணிப்பெண் இருதய நோயால் நவம்பர் 24ஆம் திகதி சவுதியில் மரணமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நந்தாவதியின் மகளான நிர்மலாவுடன் தொடர்பு கொண்ட போது தமது தாயார் சவுதி அரேபியாவில் ஐந்து வருடங்களாகப் பணி புரிந்து வருவதாகவும் அவர் விரைவில் இலங்கை வருவார் என தாம் எதிர்பார்த்திருந்ததாகவும் ஆனால் இவ்வாறான ஒரு செய்தி வருமென தாம் எதிர்பார்த்தருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

டிசம்பர் 6ஆம் திகதி ஜீவனி (26) சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த 45 வயதேயான தனது தாயாரின் (ஸ்வினீதா) மரணச் செய்தியைக் கேள்வியுற்றார். ஸ்வினீத்தாவும் அவருடைய இரு மகள்களும் களனி ரெயில்வே அவெனியூவில்; வசித்து வருகிறார்கள்.

எனக்கும் எனது தங்கை சானிகாவுக்கும்(21) இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் இருவரும் தனியாகவே வசித் வருகிறோம். எமது தந்தையார் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். எமது தாயார் நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொண்டவர் கடுமையான உழைப்பாளி. அவர் சவுதி அரேபியாவுக்குச் சென்றது எங்களுக்கு ஒரு இருப்பிடத்தைத் தேடிக் கொள்ளவும் நாம் நன்றாகச் சாப்பிடுவதற்குமான வழிவகைகைளத் தேடியே. அவர் எப்போதும் எங்களைப் பற்றி கவலைப்பட்டபடியே இருப்பார்.

அவர் கடந்த செவ்வாய்க்கிழமையும் எம்முடன் பேசினார். அடுத்து வந்த திங்களன்று தாயார் விபத்து ஒன்றில் இறந்து போனதாக எங்களுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. சவுதியில் இருக்கும் எமது நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு வினவிய போது எமது தாயார் ஞாயிற்றுக்கிழமையே இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இப்போது நாம் அவருடைய சடலத்தை எடுப்பதற்கான படிவங்களை நிரப்பி விட்டுக் காத்திருக்கிறோம். மூன்று வாரங்கள் செல்லும் என்று சொல்லி இருக்கிறார்கள் என்று அழுதபடி கூறுகிறார் அவர்.

இதேவேளை சொக்லேட் பெட்டிகளுடன் வருவதாகக் கூறி;ச சென்ற தாய் பெட்டியில் வரும் அவலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் சிவரூபன் (13), தேவிகா(10) தினேஷ் (8) டிலக்ஷன்(5) என்று நான்கு பிள்ளைகள்.

செல்லத்துரை புஷ்பவல்லி (36) வயது பணிப்பெண் சவுதி அரேபியாவில் மரணமாகி விட்டதாக அறிவிக்கப்ட்டிருக்கிறது. அவருடைய சடலத்தை டிச.27ஆம் திகதி அளவில் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைப்பதாக இவர்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. தந்தையற்ற இந்த நான்கு சிறுவர்களும் மணமுடிக்காத புஷ்பவல்லியின் இரு சகோதரிகளும் தற்போது புஷ்பவல்லியின் சடலத்தின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.
வளமான வாழ்வு தேடிப் போனவர்களை மரணம் துரத்துகிற கதையாக இது இருக்கிறது.

அரசாங்கமோ பொறுப்பு வாய்ந்தவர்களோ இந்த மரணங்கள் பற்றி அக்கறை ஏதுமற்றவர்களாகவே இருக்கிறார்கள். வெளிநாட்டுச் செலாவணி ஒன்று தான் அவர்களுடைய குறியே தவிர இந்த மனிதர்களல்ல.

எத்தகைய மரணங்களைக் கண்டும் அஞ்சாதவர்கள். இந்த மரணங்களுக்கா இரங்கப் போகிறார்கள்?

மேலதிக செய்திகள் 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்