/* up Facebook

Nov 1, 2010

பெண்ணியம்.கொம் முதல் வருட நிறைவில்...


பெண்ணியம் இணையத்தளம் தொடங்கி ஒரு வருட பூர்த்தியை எட்டியிருக்கிறது தோழியர்களே...

பெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றை விரிவாக்கும் நோக்குடனேயே பெண்ணியம்.கொம் உருவாக்கப்பட்டது.

பெண்ணியம்.கொம் தொடங்கப்பட்டு இந்த ஒரு வருடத்தில் நாம் எதிர்பார்த்ததை வட எமக்கு வாசகர்களிடமிருந்து கிடைத்த உற்சாகமும் கடிதங்களும், படைப்புகளும் எமக்கு மிகுந்த வலிமையைத் தந்தது. தொடர்ந்தும் சளைக்காமல் அடுத்த கட்டத்திற்கு புறப்பட வலுவையும் தந்தது.

ஏறத்தாழ 430 படைப்புகளை தொகுத்திருக்கிறோம்.இவற்றில் பெரும்பாலானவை ஏனைய இணையத்தளங்களில் ஏலவே வந்தவற்றை மீள தொகுக்கப்பட்டவை. பெண்ணியத்திற்கு நேரடியாக எழுதும் படைப்பாளர்களை இயலுமானவரை ஊக்குவித்தே வந்தோம். இருந்தாலும் எம்மால் இனங்காணப்பட்ட சிறந்த படைப்புகளை வெளியிட்ட தளங்களில் இருந்து அவற்றை மீள வெளியிட்டு வந்தோம். அந்த இணையத்தளங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை இந்த நாளில் தெரிவித்துக்கொள்கிறோம். ஏத்தாழ ஒரு லட்சத்தது 25 ஆயிரம் தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளதாக அறிகிறோம். சில நாட்களில் 900க்கும் மேற்பட்டவர்களை அது தாண்டியிருக்கிறது. சில நாட்களில் 200க்கும் கீழே இறங்கியிருக்கிறது.

இதுவரை நாங்கள் கோராமலேயே பெண்ணியத்திற்கு தங்கள் தளங்களில் இணைப்பு கொடுத்த 100க்கும் மேற்பட்ட இணையப் பதிவாளர்களுக்கும் எமது தோழமைபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இது வரை எந்தவித நிதி உதவிகளிலோ, அல்லது விளம்பங்களிலோ தங்கியிருக்காது, சக தோழிகளின் ஒத்துழைப்புகளுடன் தொடர்ந்து வருகிறோம்.

பெண்ணியம்.கொம் தளத்தினை வெறுமனே ஒரு பெண்கள் குறி்த்த படைப்புகளை தொகுக்கும் பணியோடு மட்டுபடுத்தாமல் எமது சேவையை மேலும் விரிவாக்கிக்கொண்ட செல்வதே எமது நோக்கம். அவ்வாறான சக்திகளுடன் சேர்ந்து ஓரளவு பணியாற்றவும் தொடங்கியிருக்கிறோம். செப்டம்பர் மாதத்திலிருந்து கொழும்பில் உள்ள விளிம்புநிலையினர் வாழும் சேரிகளில் ஒன்றான "ஊறுகொடவத்தை" பகுதியில் இளம் மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கக்கூடியவகையில் இலவச கணிணி பயிற்சி நிலையமொன்றினை ஏற்படுத்தியிருக்கிறோம். ஏனைய தோழமை சக்திகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் எம்மால் இதனை மேலும் விரிவுபடுத்த இயலும்.

இலங்கையில் வெளியான பல நூல்களை தொகுத்து டிஜிட்டல் நூலகமாக நடத்தி வரும் நூலகம் நிறுவனம் நிதிவள சிரமங்களின் மத்தியிலும் அதனை நடத்தி வரும் நிலையில், நாமும் அவர்களின் சுமையில் பங்கெடுத்துக்கொண்டோம். இந்த வருடம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மார்ச் மாத செலவினை பெண்ணியம்.கொம் பொறுப்பெடுத்துக்கொண்டது. இயலுமானவரை வருடாந்தம் அந்த பங்களிப்பை தொடர்வதற்கு நாங்கள் விரும்புகிறோம்.

பெண்ணியம் தளத்தில் வெளிவரும் படைப்புகளை ஏனையோருக்கும் அறிவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட முகநூல் (Facebook) தினசரி பல ஆர்வலர்களை இணைத்தப்படி நகர்ர்ந்துகொண்டிருக்கிறது.

பெண்கள் சார்ந்த வீடியோக்களை தொகுக்கும் நோக்கில் You Tube மற்றும் Vimeo ஆகிய இடங்களில் பெண்ணியத்திற்கான பக்கங்களை அமைத்து அதனை வாகர்களுடன் பகிர்ந்து வருகிறோம். அதன் பிரயோசனம் குறித்து எமக்கு வாழ்த்தும், உற்சாகமும் தந்த தோழியருக்கு எமது நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Add caption


இந்த ஒரு வருட பூர்த்தியையிட்டு பெண்கள் சார்ந்த பிரயோசனமிக்க தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை தொகுக்கின்ற டிஜிட்டல் நூலகமொன்றினை வாசகர்களுக்காக வழங்குகிறோம். தொடர்ந்தும் பல நூல்களை இதில் இணைத்துவருகிறோம். இவற்றில் கணிசமானவை நூலகம் நிறுவனம் தொகுத்தவற்றிலிருந்து பெறப்பட்டு நன்றிகளுடன் தொகுத்திருக்கிறோம். ஏனைய பார்வையாளர்கள் மற்றும் தோழமை சக்திகளின் ஒத்தாசைகளையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்.


பெண்ணியம்.கொம் தளத்தில் பெண்களின் ஆக்கங்களுக்கே முன்னுரிமை வழங்கிவந்தாலும், பெண்களின் பிரச்சினைகள் குறித்து ஆண்கள் எழுதிய படை்பபுகளையும் அதன் தேவை கருதி வெளியிட்டு வருகிறோம். பெண்ணியத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் மற்றும் தகவல்கள் என்பனவற்றுக்கு படைப்பாளர்களே அதன் தார்மீகப் பொறுப்பாளர்கள். எமது கருத்துக்களுக்கு முழுமையாக அவை ஒத்துக்போக வேண்டும் என்கிற எந்த எதிர்பார்ப்பையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை. ஆனால் அடிப்படை அறநெறி மீறல், தனிநபர் தாக்குதல், அடிப்படை அரசியல் சிக்கல்கள் உள்ள படைப்புகளை தவிர்த்தே வருகிறோம். அப்படியிருந்தும் நாம் வெளியிட்ட ஒரு சில கட்டுரைகளில் இருந்த சில பெரிய தவறுகளை சுட்டிக்காட்டி அவற்றை நீக்கச் செய்த பொறுப்புமிக்க வாசகர்களுக்கு எமது நன்றிகள். எமக்கு இது விடயத்தில் எந்தபிடிவாதமும் இல்லை. வாசகர்கள் எமது தவறுகளை சுட்டிக்காட்டி எம்மை சரிசெய்வதை வரவேற்கிறோம்.

எமது பணியினை விரிவுபடுத்தும் நோக்கில் ஏனைய தோழியர்களையும் பெண்ணியம்.கொம் குழுவில் இணைந்து கொண்டு தமது பங்களிப்பை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த மாத இறுதியில் வெவ்வேறு நாடுகளிலிருந்து எம்மோடு இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் தோழியர்களின் பெயர்களை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளோம்.

உங்கள் படைப்புகளை எமக்கு அனுப்பி வையுங்கள், உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எமக்கு எழுதிஅனுப்புங்கள். ஆலோசனைகள் வழங்குங்கள். தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். ஏனையோருக்கும் பெண்ணியம்.கொம்ஐ அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்தும் உற்சாகம் தாருங்கள்.

இந்த ஒருவருட பயணத்தில் உங்களோடு நாங்களும் கரங்கோர்த்து மகிழ்கின்றோம்.

நன்றிகள்...
பெண்ணியம் 

5 comments:

கொற்றவை said...

வாழ்த்துக்கள்

குட்டி ரேவதி said...

தொடர்ந்து இயங்கவும் வழங்கவும் வாழ்த்துகள்!

இணைய வெளிப் பெண்ணிய ஆக்கங்களை இன்னும் இன்னும் கூர்மைப்படுத்தட்டும் உங்கள் பயணம்!

உயிர்மெய் said...

பணிகள் சிறப்புறவும், தொடர்ந்து முனப்போடு முன்னேறவும் வாழ்த்துக்கள்!

தோழமையுடன் -பானுபாரதி, தமயந்தி-

பெண்ணியம் said...

தோழமையுடன் கொற்றவை, குட்டி ரேவதி, பானுபாரதி, தமயந்தி...! உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

Kavin Malar said...

ஓராண்டு நிறைவு!

பல்லாண்டாக மாறட்டும்.

எப்போது பெண்ணியம் தளத்திற்கு ஆதரவும் வாழ்த்தும் நன்றியும் உண்டு.

மிக்க அன்புடனும் தோழமையுடனும்
கவின் மலர்

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்