/* up Facebook

Jun 18, 2010

மறுஉற்பத்தி தொடர்பான அறிவைப் பெற தடை என்ன? -எம்.எஸ்.ரி.கௌரி


பாலியல்பு மறுஉற்பத்தி தொடர்பான அறிவை ஒவ்வொரு தனிநபரும் பெற்றுக்கொள்ள உரித்துடையவர்கள்.அத்துடன் ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் வாழ உரித்துடையவர்கள். இது ஒரு அடிப்படை மனித உரிமை. ஆனால், இலங்கை போன்ற கிழைத்தேய நாடுகளில் காணப்படுகின்ற சமூக கலாசார பெறுமானங்கள் இதை எந்தளவில் அனுமதித்துள்ளன?மறு உற்பத்தி ஆரோக்கியம் பற்றிய அறிதல் எந்தளவில் உள்ளது? ஏன்பன கேள்விகேட்கப்படவேண்டிய விடயங்களாகி விட்டன.

ஆனாலும், ஒரு சில அரசு சார், அரசு சாரா நிறுவனங்களினூடாக இந்த உரிமையை நிலைநாட்டுவதற்கு முயற்சியெடுக்கப்படுகிறது. இந்த முயற்சிகள், பரந்தளவில் மக்களை சென்றடைவதில்லை. தேவைப்படுவோர் கேட்டு பெற்றுக்கொள்ளும் முகமாக வரையறுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இலங்கை குடும்பத் திட்டச் சங்கம்(SPA)இது தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

ஆனாலும், மாளிகாவத்தையில் வசிக்கும் சுமன் லதா(வயது 30)குழந்தைபேறு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது தாயார் தனது அனுபவத்தினூடாக சிலவற்றை சொல்தித்தருகிறார். குழுந்தை உருவானபின் எங்கள் பகுதி மருத்துவத்தாதிகள் அதுபற்றி மேலும் சில விடயங்களை சொல்லித்தருகின்றனர். என்கிறார்.

இதேபோல் 23வயது பவானியும் தான் தன் நண்பிகள் மூலமே இது பற்றி தெரிந்து கொண்டதாக கூறுகிறார்.தற்போது இவர் குழந்தை ஒன்றுக்கு தாயாகியுள்ளார்.

இதே நேரம் திருமணம் முடித்த கார்த்திக் (34 வயது) தான் இந்த விடயங்களை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டதாகவும்.திருமணத்தின் பின் மனைவி கார்ப்பமடைந்த பின் இணையத்தளங்களினூடாக தகவல்களைப்பெற்று மனைவிக்கும் சொல்லிக் கொடுத்ததாகவும் கூறுகிறார்.ஆனால் பாடசாலைக்காலங்களிலும் திருமணத்தின் முன்னும் பாலியல் தொடர்பான விடயங்களை வெறும் உணர்வுக்காகவும் என்னதான்; அது என்று பார்ப்பதற்காகவும் மட்டுமே அணுகியதாக கூறுகிறார்.

பெரும்பாலான் இளைஞர்களின் நிலை இதுவாகத்தான் இருக்கிறது.சரியான அறிதலையும் புரிதலையும் பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லாமலே இருக்கின்றன.

நகர்புறங்களில்கூட அதிகமான பெண்கள் மறுஉற்பத்தி தொடர்பான எந்தவித அறிவுமற்றவர்களாகவே இருக்கிறார்கள். அனுபவக்கல்விதான் இவர்களுக்கு பாடமாகவிருக்கிறது. குறித்த வயதில் ஆண், பெண் இருவருக்கும் தெரிந்திருக்கவேண்டிய பால்நிலை மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான அறிவு போதியதாக இல்லை. ஏனெனில், இந்த அறிவ+ட்டல் தொடர்பாக எந்தவித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. பாடசாலை பாடப்புத்தகங்களில் விஞ்ஞான பாடத்திட்டதில் மறுஉற்பத்தி தொடர்பான ஆரம்ப விளக்கங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அதுவும் 11ஆம் ஆண்டுடிற்கு மேற்பட்ட வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கே இந்த ஆரம்ப விளக்கம் கிடைக்கிறது.

;;எனது தனியார் வைத்தியசாலைக்கு வரும் 80 வீதமானர்களுக்கு பாலியல்பு மறுஉற்பத்தி தொடர்பான அறிவு காணப்பட்டபோதிலும் 20 வீதமானவர்கள் அந்த அறிவு அற்றவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், அரசு வைத்தியசாலைக்கு வருகின்றவர்களில் 80 வீதமானவர்களுகு;கு பாலியல்பு மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான அறிவு இல்லாத நிலையும் 20 வீதமானவர்கள் அந்த அறிவு கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.PP என்கிறார் டொக்டர் அஜித் ராஜபக்ஷ

இங்கே, தனியார் வைத்தியசாலையை நாடுபவர்கள் அதிகளவில் பொருளாதார வசதிகொண்டவர்களாகவும், உயர்மட்ட கல்வியறிவு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அப்போது, அடிப்படை மனித உரிமை பொருளாதார வசதி கொண்டவர்களுக்கும் உயர்மட்ட கல்வியறிவு கொhண்டவர்களுக்கும் மட்டுமே உரித்துடையதாக இருக்கிறா என்ற கேள்வி எழுகிறது. ஆனாலும், இது பற்றி டொக்டர் அஜித் ராஜபக்ஷ கூறுகையில் ;; இவர்கள் கூட பாலியல்பு மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான அறிவை அனுபவ வாயிலாகம், இணையத் தகவல்கள் மூலமாகவும், சஞ்சிகைகள் மூலமாகவுமே பெற்றுக் கொள்கின்றனர். மேலதிக தகவல்களுக்கு எம்மிடம் கேள்விகளை கேட்கின்றனர்.PP என்றார்.

இதன்மூலம் எமக்கு தெரியவருவது எமது நாடு பாலியல்பு மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான அறிவை சகலரும் பெற்றுக்கொள்ள உரித்துடையவர்கள் என்ற மனித உரிமையை பெற்றுக்கொடுப்பதில் போதியளவு கவனம் செலுத்தாத நிலை காணப்படுகிறது. இதற்கு காரணமாக எமது மத, கலாசார விழுமியங்கள் தடையாக முன்நிற்கின்றன. வயது வந்த ஆண்பெண் இருவரும், தத்தமது பாலியல்பு, மறுஉற்பத்தி தொடர்பாக சரியானதோர் அறிவை பாடசாலை கல்வியினூடாக பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கவேண்டும். ஆனால், மத கலாசார விழுமியங்களின் தடையால் அச்சிடப்பட்ட புத்தகங்கள் களஞ்சிய அறைகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றன. இது பற்றி அதிபர் ஒருவரிடம் வினவியபோது. ;;எமது மதம் இந்த மாதிரியான விடயங்களை பாடசாலைகளில் போதிப்பதற்கு தடையாகவுள்ளது. அதேநேரம் பாலியல்பு மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான கல்வியை போதிப்பதற்கு முறையாக பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இல்லை.PP என்கிறார்.

கோபி என்ற கல்லூரி மாணவன் (20 வயது)கூறுகையில் ‘ நான் 9ஆம் ஆண்டு கற்கும்போது எமது பாடசாலையில் ‘யௌவனம்’ என்ற நூல் தரப்பட்து.எங்களையே வாசித்து அறியும்படி கூறப்பட்டது.நூலகத்திலும் அந்த புத்தகத்தை வைத்திருந்தனர். ஏன்றார்.இதே நேரம் கண்ணன் என்ற மாணவன் தெரிவிக்கையில் ‘சுகாதாரப்பாடப்புத்தகத்தில் இருந்த மறுஉற்பத்தி சம்பந்தமான பாடத்தைக்கூட எமது ஆசிரியர்கள் தவிர்த்து விட்டு அப்பால் சென்றார்கள்”என்றார்.

ஆனால், டாக்டர் அஜித் ராஜபக்ஷ தெரிவிக்கையில் ;; 10ஆம் ஆண்டுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த கல்வியை கொடுத்தே ஆகவேண்டும் ஏனெனில், இளவயது கர்ப்பம், கருக்கலைப்பு என்பன பெண்களை பெரிதும் பாதிக்கிறது.PP என்கிறார்.

யு.என்.டி.பி.சமூக அபிவிருத்தி சேவையின் ஆய்வறிக்கையில் (2006) இலங்கை சனத்தொகையில் 28 வீதமானோர் 10-24 ற்கும் உட்பட்ட இளைஞர்களாகவிருப்பதுடன் அதில் 19 வீதமானோர் 10-19 வயதுக்குற்பட்டோராகவும் காணப்படுகின்றனர். இவர்களிடையே போதியளவு பாலியல்பு, மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான கல்வியறிவு இல்லாததன் காரணமாக வேண்டாத கர்பம், கருக்கலைப்பு, எச்.ஐ.வி தொற்று போன்ற பாரிய பல சவால்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏன குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூக விழுமியங்களையும் பாதிப்பதால் இந்த இளைஞர்கள் வாழ்வதற்கே அஞ்சுகின்றனர். இதனால், தற்கொலையை நாடுகின்றனர். ஏனெனில், தமது உடல் சார்ந்த பிரச்சனைகளை வெளிப்படையாக கதைத்து தீர்வு காண்பதற்கு சமூகத்தில் எந்த மார்க்கமும் இல்லை. என்பதனால் ஆகும். இதையும் யு.என்.டி.பி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையே, ஆண்பெண் இருவருக்கும் கிடைக்கவேண்டிய பாலியல்பு மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான அறிவு குறித்த வயதில் ஆண்களைவிட பெண்களுக்கு மிக சொற்பமாகவே இருக்கிறது. அதேநேரம், திருமணத்தின் பின்னர் மறுஉற்பத்தி சம்பந்தமான அறிவு பெண்களை விட ஆண்களுக்கு மிக சொற்பமாகவே இருக்கிறது. இதற்கு காரணம் எமது சமூகத்தில் நிலவுகின்ற ஆண்பெண் அசமத்துவ நிலைமையே ஆகும். இந்த ஆண்பெண் அசமத்துவ நிலைமையால் ஆண்கள் மிக இளவயதிலேயே பாலியல்பு பற்றி அல்லது பாலியல் அறிவு பற்றி ஏதோ ஒரு வகையில் தெரிந்துகொள்ள முயற்சிக்கின்றனர், தெரிந்தும் கொள்கின்றனர். (இது முறையானது என்று சொல்லிவிட முடியாது). ஆனால், பெண்களுக்கு இந்த வாய்ப்பு மிக மிகக்குறைவாகவே காணப்படுகிறது. ஏனெனில், பெண் தன் உடல் சார்ந்து கூட கதைக்கமுடியாத சமூக கட்டமைப்பு காணப்படுகிறது. இதனால் தான் கடந்த காலங்களில் பெண்மொழி சார்ந்த சர்ச்சைகள் பல உருவாகின. ஆதாவது, பெண் தன் உடல்சார்ந்து கவிதைகளை வெளியிட்டபோது அவை ஆபாசமென பெரும் எதிர்ப்புக்கள் கிளம்பின. பெண்மொழி ஆபாசமொழியாக வர்ணிக்கப்பட்டது.இதன் போது பெண்ணுக்கான பாலியல்பு மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான அடிப்படை மனித உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.

இது இவ்வாறு இருக்க திருமணத்தின் பின் மறுஉற்பத்தி தொடர்பாக ஒரு பெண்ணுக்கு தாய் மூலமும், அவளது மூத்தோர் மூலமும் சில வரையறைகளுக்குற்பட்ட அளவில் தகவல்கள் வழங்கப்படுகிறன. அநேகமாக மகப்பேற்கு காலத்தில் பொருளாதார வசதி குறைந்தவர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்திலுள்ள பெண்கள் தமது தாய் மற்றும் சகோதரிகளுடனேயே வைத்திய சாலைகளுக்கு போய் வருகின்றனர். இக்காலங்களில் அவர்களது கணவனின் பங்கு சிறிதளவாகவே காணப்படுகிறது. இதனூடாக இங்கும் ஆண்களுக்கான பாலியல்பு மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான அடிப்படை மனித உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. இங்கே சமூக கலாசார பழக்கவழக்கங்களாலேயே இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.என்று கூறலாம்.

மறுபக்கம் மத கலாசாரங்களால் வழிநாடாத்தப்படும் பெரும்பாலான ஆசிய நாடுகளில் போதியளவு பாலியல் அறிவு இன்மையினால் பாலியல் வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் தொழில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம(UNFPA)

இலங்கையில் பாலியல்பு மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான அறிவ+ட்டல்களை பாடசாலையில் இருக்கும் பருவ வயதினர்களுக்கும், பாடசாலையை விட்டு விலகிய இளைஞர்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கான நட்புரீதியான சேவைகள் மூலமும் மேற்கொண்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.ஆனாலும் இவை போதியதாக இல்லை.பரந்தளவில் மக்களை சென்றடையவில்லை.

(14.03.2010 இல் தினக்குரலில் வெளியானது.)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்