/* up Facebook

May 16, 2010

நான் ஆண் மதவிஷம் பாரிக்கப்பட்ட ஆண்


அவர் வாரத்தில் ஒரு முறை வங்கிக்கு வருவார்.வருகிற நேரம் கிட்டத்தட்ட காஷ் கவுண்டர் மூடுகிற நேரமாக இருக்கும். வந்து ஒரு ஓரமாகக் காத்திருப்பார்.என்ன என்று கேட்டால் மொதலாளி வரணும் என்ரு சொல்வார்.
நாங்கள் எதோ முதல்லாளியிடம் இனாம் வாங்க காத்திருக்கிறார் என்று எங்கள் பேரேடுகளுக்குள்ளே கிடந்து தப்பாய் கணக்குப் போடுவோம்.அவர் அதான் மொதலாளி வருவார்.நேராகப்போய் மேலாளர் இருக்கைக்கு எதிரே உட்கார்ந்து காசோலையைக் கொடுத்து.காத்துக் கொண்டிருக்கிற அந்த அம்மாவிடம் கையெழுத்து வாங்கிவிட்டு "நீ போத்தா" என்று அனுப்பி விடுவார். இப்படியே ஒரு இரண்டு வருட காலம் நடந்தது ஒரு நாள் அவசர அவசரமாக வந்த முதலாளி காசோலையைக் கொடுத்துப் பணம் கேட்டார். மேலாளர் மறுத்தார்.நயந்து கேட்டார்.மீண்டும் மேலாளர் மறுத்தார். வார்த்தை வலுத்து இருவருக்கும் சண்டையானது. காசோலையைக் கொடுத்தால் பணம் கொடுக்கவேண்டியது தானே இந்த டேமேஜர் தொல்லை தாங்கவில்லையே, என்று எழுந்து மத்யஸ்தம் பண்ணப்போனோம்.

"செக்குல கையெழுத்தில்லாமப் பணங்கொடுத்துட்டு நா வீட்டுக்குப்போகவா " மேலாளரின் கேள்வி ஞாயமானது. அதன் பிறகு விசரித்ததில்.வந்த முதலாளி பஞ்சாயத்து எழுத்தர் (க்ளார்க்).தினம் காத்துக்கொண்டு நிற்கிற அந்தபெண்மனி தான் பஞ்சாயத்துத் தலைவர் என்கிற விபரம் தெரிந்தது.கொஞ்சம் கொஞ்சமாக லவட்டிக் கொண்டிருந்த முதலாளி மொத்தமாக லவட்ட, தணிக்கையில் பிடிபட்டு, பஞ்சாயத்துத் தலைவரை எச்சரித்து விட்டார்கள். ஆனால் பஞ்சாயத்து தலைவரோ க்ளார்க் முதலாளி பிஞ்சையில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி. அவரிடம் கணக்குச்சொல்லி கையெழுத்து வாங்க அல்லது அவர் வீட்டுக்கோ பஞ்சாயத்து ஆபிச்சுக்கோ போய் கையெழுத்து வாங்க வழிவழியாய் வந்த தர்மம் இடம் கொடுக்கவில்லை.சதுரங்க ஆட்டத்தில் ஒரே ஆளாய் தனக்காகவும் எதிரிக்காகவும் காய் நகர்த்துகிறதோடல்லாமல் அதைப் பார்வையாளனாகவும் மாறிச்சிலாகிக்கிற மனோபாவம் மலிந்து கிடக்கிறது.

இந்த உண்மைச் சம்பவம் எதோ துரோத காலத்தில் நடந்ததல்ல. கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி நடந்தது.இன்னும் கிராமங்களில் மிக இயல்பாக நடந்து கொண்டிருப்பது. பெண்,ஒதுக்கப்பட்டபெண் என்கிற இரண்டு ஒடுக்கு முறை இங்கே ஒருசேர அரங்கேறுகிறது.பஞ்சாயத்துராஜ் சட்டம் கொண்டுவரும் போது பல பகடிகள் நடந்தது.ஜனகராஜ் கூட ஒரு தமிழ்ச் சினிமாவில் ஆனந்தராஜ்,சத்தியராஜ் போலில்லை இது பஞ்சாயத்துராஜ் என்று நம்ம விவேக் மாதிரி கேலிசெய்து சம்பாதித்து விட்டுப்போனார்.உண்மையில் அந்தச் சட்டத்தின் நீள அகலம்,அதன்மூலம் விடுபட்ட ஜனங்களுக்கு கிடைக்கிற அதிகாரப்பகிர்வு, எல்லாம் அளப்பறியது. இந்த சனாதன கெடுபிடி
களுக்கு உள்ளிருந்து கூட பலப்பல முன்னேற்றங்கள் நடந்தவண்ணம் இருக்கிறது.

ஆடுமடுகளோடு கண்மாய்த் தண்ணீர் குடித்த ஜனங்களுக்கு குடிநீர்க்குழாய்.காலைக்கடனுக்கு இரவு வரை காத்திருந்து அவஸ்தைப்படும் பெண்களுக்கு பொதுக் கழிப்பறை.சிமெண்ட் சாலை.இரவில் திருமணம் தெருவில் பந்திவைத்த ஜனங்களுக்கு கல்யாண மண்டபம். இப்படியாக கிராம சமூகத்தை சகதியிலிருந்து தூக்கிவிடும் சின்னச் சின்ன முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது.பெப்சி கோக் நிறுவணங்களுக்கு அணுமதி மறுக்க இப்போதைய சூழலில் ஒரு இந்திய பிரசிடெண்டுக்கு அதிகாரம் இல்லாமல் போகலாம். ஒரு பஞ்சாயத்துப்பிரசிடெண்ட் நினைத்தால் அணுமதி மறுக்கலாம் என்பது அந்த பதவியின் மாண்பைச்சொல்லும் மிக வீர்யமான விஷயம். சமீப காலங்களில் முன் மாதிரிப் பஞ்சாயத்தாகத் தேர்ந் தெடுக் கப்பட்ட மூன்றில் இரண்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.அந்த மற்றொன்று தலித்துக்கு ஒதுக்கப்பட்டது. என்பது இங்கே ஆழமாகப்பதிவு செய்யப்பட வேண்டியது. மதியூக மந்திரிகள் தெனாலிக்கும்,பீர்பலுக்கும் பின்னாலிருந்து பாட்டெழுதித் தந்தவர்கள் அவர்களின் துணைவியார். இந்தியா முழுவதுக்கும் இருந்த அரசர்கள் ஆள் அம்பு படை சேனைப் பரிவாரம் வைத்து வசூல் பண்ணி பரங்கியனுக்கு கப்பம் கட்டிக்கொண்டிருந்த போது கைப் பிள்ளையோடு வாளைச் சுழற்றியவள் ராணி லட்சுமிபாய்.

அவர்கள் தங்களுக்கும் ஆடவர்போல அணைத்து உரிமைகளும் வேண்டு மென்கிற கோஷம் உன்னதமானது. அது இன்னொரு சுதந்திரப்போர்.என்ன கேவலம் என்றால் கேட்பது என்தாய்,என் சகோதரி, என்மனைவி.மறுக்கிற நான் மட்டும் எதையும் விட்டுக்கொடுக்காத ஆண், மத விஷம் பாரிக்கப்பட்ட ஆண்.

தோழர்களே நேற்று நமது மதிப்பு மிக்க மக்கள் சபை 33 சதவீதம் கொடுக்கலாமா வேண்டாமா என்கிற பிரச்சினையில் மீண்டும் வேஷ்டியை கிழித்துக் கொண்டிருக்கிறது. அன்னிய முதலீட்டுக்கு கேள்வியில்லாமல் ரேகை பிறட்டியவர்கள், அனு ஆயுதப் பரவல் சட்டத்துக்கு எதிராக மூச்சுவிடாதவர்கள். மைக்கைப் பிடுங்கிக்கொண்டு ஆண்மையைக்காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

மெலிஞ்ச மாட்டுல தா ஈ ஒட்டும்,
நலிந்த கூரையைத்தான் காற்று கிழிக்கும்,
ஒத்த வீட்டுக்காரனத் தான் சண்டியர் அடிப்பான்.
இதெல்லாம் ஈனர்களின் கதை.

எதிர்காற்றில் சிறகடிக்கும்,
ஆற்றின் ஓட்டத்தை எதிர்நீந்திக் கடக்கும்,
பெரும் கூட்டத்திலும் அதிரும்
நேர்மையின் ஒற்றைக்குரல்.
இது போராளிகளின் வரலாறு.

நன்றி - காமராஜ்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்