/* up Facebook

Feb 19, 2010

சாந்தி...நான் மற்றும் விலங்கு உடைக்கும் பிற அடிமைகளுக்கும்... - கவிதா சொர்ணவல்லி


ஐந்து ஆறு மாதங்கள் இருக்கும் இது நிகழ்ந்து...
அலுவலக பாத்ரூமில் முகம் கழுவி கொண்டிருந்தேன். கழுத்துக்கு கீழ் தண்ணீர் வழிந்து விட கூடாத அதி கவனத்துடன். தண்ணீரின் சலசலப்புக்கு நடுவே அருகிலிருந்து யாரோ அழும் குரல். மிகவும் மெல்லிசான குரலில். திடுக்கிடல் நேரவில்லை. ஒருவேளை தினமுமே இதை நான் எதிர்பார்த்திருக்கலாம். வீடோ அலுவலகமோ அழுவதற்கு வேறு எங்கு இடம் அனுமதிக்க பட்டுள்ளது பெண்களுக்கு? பாத்ரூமை தவிர. திரும்பிய நொடியில் ஹவுஸ் கீபிங் சாந்தி அக்கா அவசர அவசரமாக கண்களை துடைப்பதை பார்த்துவிட்டேன்.

கேட்கவா வேண்டாமா என்ற தயக்கம். ஒருவேளை பண பிரச்சனையாக இருந்தால் கொடுத்து உதவலாமே என்ற தவிப்புடன் , ஆனால் பதறாமல், இயல்பாக கேட்டேன் "என்னக்கா " என்று.
சிறிது நேர மவுனத்திற்கு பின்னால் சொன்னார்.

" அவன வச்சுகிட்டு என்ன பண்றதுன்னே தெரியலம்மா , கட்டிகிட்ட பாவத்துக்கு அவன கவனிக்றதா இல்ல பெத்துகிட்ட பாவத்துக்கு புள்ளைங்கள கவனிக்ரதாணு? "என்றார்.
"என்ன செருப்பால அடிக்கணும்.

வயசு கோளாறுல முன்ன பின்ன தெரியாதவன நம்பி 15 வயசுல ஓடி வந்து 16 ல புள்ளைங்கள பெத்துகிட்டு இப்ப 30 வயசுல சீரளியிரேன். குடிகார நாய்..எப்ப பார்த்தாலும் குடிச்சுட்டு வந்து தொந்தரவு பண்ணி சாவடிக்கிறான். குடிச்சா கூட பரவாலியே, வேலைக்கு போய் அஞ்சு காசு சம்பாதிக்க துப்பு கெட்டவன். ஒரு வாய் சோறு கூட துண்ணாம காலையிலே வேக வேக ஓடி வந்து இங்க கக்கூஸ் கழுவி துடச்சி பெருக்கி முதுகு ஓடிய வேல பாத்து கிடைக்கிற நாலாயிரம் ரூபாயவும் அந்த நாய் வாங்கின கடனுக்கு வட்டி கட்டவே சரியாய் போகுதும்மா. 2 பொட்ட புள்ளைகள பெத்து வச்சுருக்கேன். அதுகளுக்கு சாப்பாடு போடவே நான் தனி வேல பாக்றேன். லீவு நாளில எல்லாம் பீச்சுக்கு பொய் ஊத்து தோண்டி தண்ணி எடுத்து வித்துட்டு வரேன்மா. உடம்புதான !!! இல்ல வேற எதுவுமா ????

இந்த கண்றாவி பத்தாதுன்னு ஒண்ட கூட எடம் பத்தாத குடிசையில , வயசுக்கு வந்த புள்ள இருக்கும்போது,ராத்திரி முழுக்க படுக்க வானு தொல்லை. வராட்டி எவன் கூட படுக்க போனேன்னு கேட்டு ஒரே அடி மிதி. வீட்ட விட்டு ஓடி போயிருன்னு அந்த நாய எத்தனையோ தடவ விரட்டியும் விட்டுடேன். ஆனா திரும்பியும் வீட்டுக்கு வந்துருது. கொஞ்சம் கூட மானம் ரோஷம் எதுவும் கிடையாது..." பேசி கொண்டிருக்கும் போதே ஆட்கள் வந்துவிட அத்துடன் அந்த பேச்சு துண்டித்து விட்டது. அதன் பின் சாந்தி அக்காவுடன் தனிமையான நேரங்கள் எதுவும் வைக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்... சாந்தி அக்காவுடன் சில நிமிட தனிமை கிடைத்தது...

" என்னக்கா எப்டி இருக்கீங்க??? அந்தாள் திருந்திட்டாரா? (சினிமாத்தனமான டயலாக்தான்..கர்டசி)
அக்கா நிதானமாக சொன்னார்.

" அது எங்க திருந்தும். விளக்கமாத்த எடுத்து ஔ நாள் மாத்து மாத்துன்னு மாத்துனேன். வீட்ட விட்டு ஓடிபோயிருச்சு. ஒரு மாசம் ஆச்சு வீடு பக்கம் வந்து. "
இப்ப என்னக்கா பண்றீங்க ?

" சொன்ன தப்ப எடுத்துக்காத. பொருக்கி நாயிங்க தொல்ல தாங்க முடியல. ஒத்த பொம்பள நான். பொட்ட புள்ளங்கள வச்சுக்கிட்டு தனியா இருக்க முடியல.
ம்ம்ம்ம்ம்

ரொம்ப நாளா ஒருத்தன் என்னயும் என் புள்ளங்களையும் வச்சு காப்பாத்துரேன் சொல்லிகிட்டே இருந்தான். ஏற்கனவே கல்யாணம் ஆனவன். ஆனா என்ன???. குடிக்க மாட்டான், கடன் வாங்கிட்டு வட்டி கட்ட முடியம் பொண்டாட்டிய போக சொல்லி அடிக்க மாட்டான், புள்ளங்கள ஒழுங்கா படிக்க வைக்கிறேன் சொல்லி இருக்கான். பிறகு என்ன ??? சரி ன்னு சொல்லிட்டேன்.

நல்ல வூட்ல குடி வச்சுருகான் எங்கள. இவ்ளோ செயிரவனுக்கு நான் என்ன செய்ய போறேன்?? வைப்பாட்டியா இருக்க போறேன். செஞ்சுட்டு போறேன் . தப்பில்ல " என்றார் .

சடாரெண்டு இருந்தது. 25 வருடங்களாக சொல்லி கொடுத்து வளர்க்கப்பட்ட தத்துவங்களுக்கு மாறான ஒன்றை எதிர்கொள்ள நேரிடும் போது ஏற்படுகின்ற அதிர்வு. அக்காவை பிரமிப்புடன் பார்க்க ஒரு மனமும், அசிங்கமாக பார்க்கும் ஒரு மனமுமாக கலவையான மனநிலையில்.

ஒரு மாதிரி ஏற்கவும் முடியாமல் , தவிர்க்கவும் முடியாமல் இருந்தது அக்காவின் முடிவு???? ஒரு மையமான புன்னகையை சிந்தி விட்டு நகன்றேன். ஆச்சர்யமாக இருந்தது ஒரு எளிய அக்காவால் எத்தனை எளிமையாக ஒரு சமூக ஏற்பாடையே ஜஸ்ட் லைக் தட் தாண்டி செல்ல முடிகிறது ? என்று . குமாரிடம் இதை பற்றி பேசிகொண்டிருந்த போது திடீரென கேட்டான் நீ அந்த எடத்துல இருந்தா என்ன செய்வாய் என்று???

யோசித்து பார்த்து சொன்னேன்
i வான்ட் to be alone

எந்த விலங்குகளும் சூழாத, எந்த கட்டளைகளும் அற்ற, கேள்விகள் இல்லாத, எதிர்பார்ப்புகள் வருத்தாத தனிமையில் , எனக்கு மட்டும் பிடித்த நான் மட்டும் பிடித்த ஒரு சுதந்திர உலகத்தில் வாழ்வேன் என்றேன்

சிரித்த குமார் சொன்னது... நீதான்... உன்னை போன்றவர்கள்தான் சமூக ஏற்பாடை கடந்து செல்கிறீர்கள். . சாந்தி மறுபடியும் ஒரு குழிக்குள்தான் தானே போய் விழுந்திருக்கிறார். இந்த உலகில் போராளி என்ற பேருக்கு உண்மையான சொந்தகாரர்கள் யார் தெரியுமா ?
நீங்கள்தான்...இன்றைய பெண்கள். யு ஆர் தி true ரெபெல். ஆனால் உங்களுக்கு நாங்கள் கொடுத்திருக்கும் பட்டம் என்ன தெரியுமா ??/

மன பிறழ்வு உடையவர்கள்...ஆமாம்...திருமணத்தில் உனக்கு சம்மதமா ?
இல்லை ! அந்த மாதிரி ஒரு உடன்பாட்டுக்குள் வருவதற்கு எனக்கு விருப்பமில்லை.

நீ மட்டுமில்லை ! இன்றைய பெண்களின் மொத்த மனநிலையும் அதுவாகத்தான் இருக்கிறது. எந்தவிதமான ஏற்பாடுக்குள் வருவதற்கும் உங்களுக்கு விருப்பமில்லை. திருமணம் இல்லை, லிவிங் டுகெதர் கூட ஆர்வமில்லை என்பது தெரிகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்திருக்கும் சுதந்திரத்தை நீங்கள் முழுதாக சுவாசிக்க விரும்புகிறீர்கள். என்னுடைய தோழி ஒருத்தருக்கு , ஆண்களுடன் எந்த உறவுக்குள்ளும் புகுந்து விடாத one நைட் stand பிடித்திருக்கிறது. one நைட் நீடித்தால் one month ஆக விரிவாக்கி கொள்ளலாம். ஆனால் வருடக்கணக்கில் என்பது சாத்தியமில்லை என்று உறுதியாக இருக்கிறார் அவர். விலங்கு உடைத்திருப்பவர்களின் பாதை இதுவாகத்தான் இருக்க முடியும் என்றான் .

குழந்த பெதுக்கனும்னோ இல்ல இத்தன காலமா பெண்கள் மேல சுமத்தப்பட்டு வர தாய்மை அப்பிடிங்கற மாதிரி எதாவது என்னைக்காவது பீல் பண்ணிருக்கியா ??? என்று கேள்வி எழுப்பினான்

இல்லடா ..குழந்த பெத்துக்கணும் அப்பிடிங்கற மாதிரி எப்பவுமே பீல் பண்ணதில்ல ... ஆனா தாய்மை...அது இயல்பாவே எனக்குள்ள இருக்குடா. எல்லார் மேலவும் வரும்டா அது. அதுக்காக குழந்த பெதுக்கனும்ன்னு அவசியம் இல்லையே...

இதெல்லாம்தாண்டா இப்ப உள்ள பொண்ணுங்க. நீங்க எந்த arrangement
இல்ல commitment எதுக்குள்ளவும் வரமாடீங்கடா என்றான்.

எரிச்சலாக இருந்தது. இதெல்லாம் நல்லதுன்னு சொல்றியா இல்ல கெட்டதுன்னு சொல்றியா ?
இது இப்படித்தான் சொல்றதுக்கு ஆண்களுக்கு இங்க வேல ஒன்னுமே இல்ல. இனி வரும் பேனலின் உலகம் இப்படியாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்....

இதனால் ஆண்களின் உலகம் எரிந்து சுக்கு நூறாகும் - ஒன்று

ஆண்கள் MENTALLY IMPOTENT ஆக பீல் செய்ய போகிறார்கள் - இரண்டு

இல்லை என்றால்
ஆண்கள் வன்முறையாளர்களாக மாறுவார்கள் - மூன்று
இதை தவிர வேறு எதுவும் நிகழப் போவதில்லை இனி வரும் உலகத்தில் என்றான்.
-----------------------------

கவிதா சொர்ணவல்லி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்