/* up Facebook

Feb 14, 2010

"என் உடல் என் ஆயுதம்" - போராளி ஐரோம் ஷர்மிளா

நம் எல்லாருக்கும் நூறு படம் நடித்த ரஜினி விஜயகாந்த் போன்றவர்கள் தெரியும். நூறு ரன் அடிக்கும் சச்சின் என்றால் தெரியும்.பத்து வருடம் சாப்பிடாமல் கொள்கைக்காக உண்ணாவிரதம் இருந்தவரை தெரியுமா. நமக்கு தெரிந்தது பத்தரை முதல் பன்னிரெண்டரை மணி வரை உண்ணாவிரதம் கண்ட தமிழினத் தலைவரை தெரியும்.

எனக்கு நேற்று ஒரு தோழர் மூலமாய் அவரை பற்றி தெரிந்தது. வெட்கமாய் இருந்தது நமக்கு அவரை பற்றி தெரியவில்லை .பதிவு போடும் நாம் செயலிலே என்ன செய்துவிட்டோம். நூறு பதிவுகளும் அந்த பெண் தோழருக்கு தூசுக்கு சமம்.

ஐரோம் சர்மிளா ஆம் அந்த தோழரின் பெயர். அவர்கள் பத்து வருடமாய் சாப்பிடமால் இருக்கிறாள். வெறும் திரவ உணவை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள். சர்மிளா ஒரு கவிஞர் மற்றும் செயல் வீரர். அப்படி எந்த கொள்கைக்காக அவர் இவ்வளவு நாள் சாபிடாமல் இருக்கிறாள். 1958 ஆம் ஆண்டு அரசு ஒரு சட்டம் போட்டது இச்ச்சட்டதின்படி வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்கெதிராக சட்டப்பூர்வமாக கூட இராணுவத்தை தண்டிக்க முடியாது. இந்த சட்டத்தின் பெயர் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம்.

இந்த சட்டத்தினால் அப்பாவி மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். பெண்கள் பாலியல் வல்லுறவுகள் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கபடுகின்றனர். ஆம் ஆண்டு பெண்கள் ARMY RAPE US என்று படத்துடன் ராணுவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தினர் பெண்கள் இதை நன்றாக பயன்படுத்தி மக்களை துன்பத்தில் ஆழ்த்துகின்றது ராணுவம். பல கொலைகள் செய்யப்பட்டன. நவம்பர் 2 2000 மணிப்பூர் மாலோம் என்னும் இடத்தில் பத்து குடிமக்களை இந்திய ராணுவம் கொலை செய்ததை கண்டித்து ஐரோம் சர்மிளா அவர்கள் உண்ணா விரதம் இருக்க ஆரம்பித்தார் இன்னும் அவர் சாப்பிடவில்லை திரவ உணவையே அருந்துகிறார்.

அவர் மீது தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தண்ணீர் கூட உண்ணாமல் இருந்தார் . அவர் உடல் மோசமடையவே அன்றில் இருந்து மூக்கு வழியாக பிளாஸ்டிக் குழாய் கொண்டு திரவ உணவு செலுத்த படுகிறது. அரசாங்கம் அமைத்த ஜீவன் ரெட்டி கமிசன் கூட இந்த சட்டத்தை எதிர்த்துள்ளது.

சரி ஏன் இந்த சட்டம் போட்டது இந்தியா உண்மையிலேயே சுதந்திர நாடா. வட கிழக்கில் உள்ளவர்கள் ஏன் ஒதுக்க படுகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள் கூட ஏன் பறிக்க படவேண்டும். ஏன் நம்முடைய ஆதிக்கத்தை காட்ட வேண்டும்.இப்படி கட்டி காத்து தான் வல்லரசு என்று காட்ட வேண்டுமா .அந்த மக்களுக்கு உண்மையிலேயே இந்தியாவில் இருக்க பிடித்து இருக்கிறதா. நாம் எல்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் அது உருவாக்க படுவது யாரால்????நம் அரசால்??? அந்த அரசை ஆதரித்து காசு வாங்கி வாக்கு செலுத்துகிறோம்?? அப்பொழுது நமக்கும் தீவிரவாதிக்கும் தொடர்பு இருக்கிறது தானே....???


நாம் தீவிரவாதத்தை பற்றி பேசுகிறோம் ஆனால் அதன் ஆணி வேர் அரசிடம் உள்ளது . ஏன் வடகிழக்கு மக்கள் கண்டுகொள்ள படவில்லை . நாம் தீவிரவாதத்தை பற்றி பேசுவது உண்மையிலேயே மணிரத்தனம் ரோஜா படம் போல அரை வேக்காட்டு தனம். நமக்கு உண்மையிலேயே தெரியுமா அந்த மக்களுக்கு இங்கே வாழத்தான் பிடிக்கிறது என்று????

ஐரோம் சர்மிளா உனக்கு தலை வணங்குகிறேன். என்ன சொல்ல இளமையை அடக்கி பெண்டீருக்கு உள்ளான ஆசையை அடக்கி, நாவை அடக்கி, ஒரு சமூகத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறாய். நாமெல்லாம் பதிவுகள் போட்டுக்கொண்டு என்ன செய்துகொண்டிருக்கிறோம், ஏன் சிறு பிரச்சனை என்றால் கூட திரும்பி பார்க்காமல் வருகிறோம். ஐரோம் சர்மிளாவும் கவிஞர் நானும் கவிஞரே ஆனால் அதற்கு வித்யாசம் உண்டு. இலக்கிலாமல் இருப்பது இலக்கியாமா என்ன. நோபல் பரிசு கொடுக்க வேண்டாம்
அவரை தெரிந்தாவது வைத்திருக்கலாமே. ஐரோம் சர்மிளா உங்களால் என் நூறாவது பதிவு அர்த்தப்படுகிறது.

பின்குறிப்பு
நாம் நல்லது மட்டுமே செய்வோம் ஏன் கெட்டதை கண்டுகொள்ளாமல் இருப்பது கூட ஒருவித கெடுதலே. ஏன் நல்லது மட்டுமே செய்கிறோம் சுயநலம். ஏன் தவறுகளை தட்டி கேட்பதில்லை கேட்டால் நமக்கு ஏன் வம்பு ....."நல்லதை மட்டும் பாருங்கள்" என்கிறார்கள் நாம் அப்படி சொல்லித்தான் வளர்க்கபட்டுள்ளோம். " ஏன் சரியாக பாருங்கள்

என்று யாரும் சொல்வதில்லை" . "பாசிடிவாக பாருங்கள்" "கனவு காணுங்கள்" என்பதெல்லாம் "தவறை தட்டிக்கேட்கதே என்பதன் உள் அர்த்தமே". கண் முன்னே ஒரு கொலை நடக்கிறது "பாசிடிவாக பாருங்கள் " என்பது "உனக்கு எதற்கு வம்பு ஒதுங்கி போ என்பது " போல இல்லையா .

நம் இலக்கியங்களில் கூட நல்லவன் என்றால் நல்லது மட்டுமே தெரியும் என்று ஊட்டப்பட்டிருக்கிறது. ஏன் மகாபாரதத்தில் தர்மன் நல்லதையே பார்ப்பான் நாரதன் சொல்லும்போது எல்லாரும் நல்லவர்களாம்....துரியோதனன் எல்லாரும் கெட்டவர்கள் என்று சொல்வான், உடனே அவன் கெட்டவனாம். உண்மையான கோபம் இருப்பவனால் மட்டுமே கேட்க முடியும். அன்று ஐரோம் ஷர்மிளா கெட்டதை பார்க்காமல் இருந்திருந்தால் இன்று ஒரு பிரபல எழுத்தாளரோ நோபல் பரிசு கூட வாங்கி இருப்பார். ஐரோம் ஷர்மிளா ஏன் பாசிடிவாக பார்க்கவில்லை அவள் நம்மைப்போல சாக்கு சொல்லும் பெருச்சாளி அல்ல களப் போராளி.

நன்றி - வெண்ணிற இரவுகள்

மேலதிக வாசிப்புக்காக
10th Year of Hungerstrike: Call for Action in Support of Irom sharmila


My Body My Weapon


1 comments:

era.edwin said...

அருமயான பதிவு. ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன். "சுகனில் ' எழுதப் போகிறேன்.
இரா.எட்வின்

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்