/* up Facebook

Jan 8, 2010

ஊடக பெண்களின் வாழ்க்கை. பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை! - கவிதா சொர்ணவல்லி

சுகிதா அவர்கள் பெண்ணியத்திற்கு அனுப்பிய பெண் பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரம் எங்கே ? - அன்பு தோழிகளுக்கு சுகிதா கட்டுரையின் மீதான எதிர்வினையை கவிதா சொர்ணவல்லி பெண்ணியத்திற்கு அனுப்பியதை இங்கு அப்படியே வாசகர்களுக்கு தருகிறோம்.
-பெண்ணியம்எதேச்சையாகத்தான் பார்க்க நேர்ந்தது அந்த கட்டுரையை ...
படித்தவுடன் சிரிப்பாகவும் வந்தது. என்னை சிரிக்க வைத்த அந்த கட்டுரையின் பெயர்
மன்னித்து கொள்ளுங்கள் , யாரையும் தனிப்பட்ட முறையில் புண்படுத்தும் நோக்கில் நான் இந்த கட்டுரையை எழுதவில்லை. 5 வருடத்திற்கும் மேலாக ஒரு ஜர்ணலிஸ்டாக பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத்தில் குப்பை கொட்டுவதன் மற்றும் இணைய பத்திரிகை ஒன்றின் ஆசிரியராகவும் பொறுப்பு வகிக்கும் காரணமாக மேற்கூறிய கட்டுரைக்கு பதிலளிப்பதற்கு என்னால் முடியும் என்பதாலேயே இந்த மறுமொழி.


ஊடகங்கள் எப்போதும் பச்சோந்தி தனமாய் தான் செயல்படுகின்றன .... இன்னும் பெண்களுடைய கருத்துக்களை ஏற்க இங்குள்ள ஆண்களுக்கு மனம் ,குணம் இரண்டும் இல்லை... ·பேஷன் டிப்ஸ் எழுதவும்... சமையல் குறிப்பு எழுதுவதற்காக மட்டுமே சில பத்திரிகைகள் பெண் பத்திரிகையாளர்களை தேர்வு செய்கிறது. ( மேற்க்கூறிய கட்டுரையின் முதல் பாரா)


ஆணோ, பெண்ணோ, ஒரு தொழிலில் சிறப்பாக வருவதற்கு உழைப்பு முக்கியம் அல்லவா? . அதிலும் அறிவுடன் கூடிய உழைப்பு மிகவும் அவசியம். குறிப்பாக பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத்துறை என்பது அறிவிற்கும் மனசாட்சிக்கும் இடையிலான ஒரு வேலை. ( பெரும்பாலும் மனசாட்சியை அடகு வைக்க வேண்டியது இருக்கிறது என்பது வேறு விஷயம்). அது போன்ற நேரங்களில் அறிவையாவது வேலை செய்ய வைக்க வேண்டும். அப்போதுதான் ஜெயிக்க முடியும்.
இந்த துறையில் மட்டும்... நீங்கள் சிறப்பான செய்தி சேகரிப்பாலரா இல்லையா ? என்பது முதல் நாளிலேயே தெரிந்துவிடும். அது போல்தான் உங்களுடைய எழுத்து திறமையையும். சிறப்பாக எழுதுவீர்களா என்பது உங்களின், நீங்கள் எழுதிய ஒரு செய்தி முடிவில் சந்திக்கு வந்துவிடும்.
புத்தகங்களில் கவர் ஸ்டோரி எழுதியவர்களும், செய்தி எழுத தடுமாறி, தவறி, தவழ்ந்து கொண்டிருப்பவர்களையும் பார்த்திருகிறேன். உடன் பணிபுரிந்தும் இருந்திருக்கிறேன். சிறந்த இலக்கிய
கட்டுரை எழுதும் தோழி ஒருத்தி கூட, செய்தி துறையில் சேர்ந்த முதல் சில மாதங்களுக்கு செய்தி எழுத திணறியதை, சிறு பரிதாபத்துடன் பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் பின் வந்த நாட்களில் அவள் கற்று கொண்டது வேறு விஷயம்.
கற்று கொள்ளும் திறனும் இல்லாமல், சுட்டி காட்டும் தவறையும் திருத்தி கொள்ள மனமில்லாமல் எதற்கும் உபயோகமில்லாமல் இருக்கும் சில செய்தியாளர்களை மட்டுமேபேஷன் டிப்ஸ் எழுதவும்... சமையல் குறிப்பு எழுதுவதற்காக மட்டும பயன்படுத்தி கொள்கிறார்கள் பத்திரிகை ஆசிரியர்கள். பேஷன் டிப்ஸ் எழுதவும்... சமையல் குறிப்பு எழுதுவதும் தவறில்லை. ஆனால் கட்டுரையாளர் கூற்றுப்படியே பதிலழிக்க முயர்ச்சித்திருக்கிறேன்.


பத்திரிக்கை துறை என்பது ... அறிவுக்கும் ,திறன் பட வேலை செய்வதற்கும் உள்ள ஒரு இடம் ...ஆனால் காட்சி ஊடகங்களில் முன்னணியில் உள்ள செய்தி பிரிவின் முதன்மை ஆசிரியர் ஒருவர் ஏதோ மனிதாபமான அடிப்படையில் பெண்களுக்கு வேலை தருவதாக சொல்லிக் கொண்டு இருக்கிறார். (மேற்க்கூறிய கட்டுரையின் மற்றொரு பாரா)


கண்டிப்பாக அந்த ஆசிரியர் கூறுவதில், கூறியதில் தவறேதும் இல்லை. ஆசிரியரின் அறியாமையை பயன்படுத்தி, மருத்துவமனையின் வரவேற்பு பிரிவில் வேலை பார்த்த ஒரு பெண், முன்னணி பத்திரிகை ஒன்றில் வேலை பார்ப்பதாக கூறி வேலை கேட்டு வந்திருந்தார். (அப்போது அந்த முன்னணி செய்தி பிரிவில் நானும் நல்ல பதவியில் பணியாற்றி கொண்டிருந்தேன்.) அப்பாவி ஆசிரியரும் அந்த பெண்ணிற்கு இருபது ஆயிரத்துக்கும் மேலாக ஊதியம் வழங்கி வேலைக்கு எடுத்து கொண்டார். இது போலவே நிறைய... அடுத்த சில நாட்களிலேயே அந்த பெண்ணின் திறமை ஊருக்கு தெரிந்து விட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியருக்கு கடுப்பாகி விட்டது. அதன் பின் அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டுரை ஆசிரியர் எதிர்பார்க்கிறார் என்பது புரியவில்லை.


பெண்கள் மேற்கத்திய உடை அணிவதாலும் சடங்குகள் சம்பிரதாயங்கள் தாண்டின முற்போக்குதனமான அவரவர் விரும்பிய வாழ்க்கையை வாழ்வதாலும் தான் கலாச்சாரம் சீரழிகிறது என்று கூறும் சிலர்...தன்னுடன் வேலை செய்யும் சக பெண்களை தனது காம இச்சைக்கு இரையாக்கும் போது இந்த கலாச்சார காவலர்களின் ... கலாச்சாரம் எங்கே போகிறது..இப்படி பெண்களை தனது அடிமை தனத்திலயே வைத்திருக்கிறது இந்த ஆணாதிக்க வர்க்கம்.


இது கட்டுரை ஆசிரியர் தன்னுடைய வாதத்திற்கு அளித்திருக்கும் இறுதி விளக்கம். இதை படித்ததும் ஆதங்கத்துடன் கூடிய சிரிப்பு பொத்து கொண்டு வந்தது என்னக்கு. ஊடகத்தில் பெண்களை அவமானப்படுத்துவதிலோ, குறை கூறுவதிலோ, அவர்களை பற்றிய ஆபாச செய்திகளை பரவ விடுவதிலோ அந்த துறையின் பெண்களுக்கே முக்கிய பங்கு உண்டு. தான் முர்ப்போக்குவாத பெண் என்று கூறிக்கொண்டு அலையும் எத்தனையோ பெமின்னிஸ்ட் பெண்களின் காசிப்களால் வேலையை விட்டு ஓடிய அப்பாவி பெண்கள் எத்தனையோ பேர்.


மேற்க்கத்திய ஆடை, முற்போக்குச் சிந்தனை (உள்ளதாக கூறிக்கொண்டு வாழ முயற்சிக்கும் ) ஒரு தோழி...(அவர் என்னை தோழியாக நினைக்கவில்லை என்பது பின்னால் தெரிந்தது). முன்னணி பத்திரிகை ஒன்றில், பத்து வருடங்களுக்கு மேல் வேலை பார்த்தவர். அங்கு அவர் மீது கூறப்பட்ட ஆபாச புகார் காரணமாக வேலையை தூக்கி எறிந்து விட்டு வந்தவர். பின் என்னுடைய அலுவகத்தில் ( கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கும் முன்னணி காட்சி ஊடகம்) உடன் பணிபுரிய வந்தார். வந்த சில நாட்களிலையே அவருடைய உண்மையான முகத்தை காண்பித்து விட்டார்.


அவருக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்திருந்த என் வாழ்க்கை பற்றிய சில...மிகவும் நுண்ணிய நுட்பமான விஷயங்களை அலுவலகம் முழுவதும் பரப்பியதோடு, எனக்கென்று அலுவகத்தில் இருந்த மதிப்பை முற்றிலுமாக குலைக்கும் வேலையிலும் ஈடுப்பட்டார். மிகத் தீவிரமாக.
(பெரும்பாலான பெண்களுக்கு இது போன்ற அனுபவம் இருந்திருக்கிறது என்பதை பல்வேறு கட்டுரைகளின் வாயிலாக தெரிந்து கொண்டேன் பின் வந்த நாட்களில்). இதை எப்படி கண்டுப்பிடித்தேன் என்றால், முன்பு நண்பனாக இருந்து பின்னாட்களில் எதிரியாக மாறிய ஒருவனின் வாயிலாக.
நடுத்தெருவில் நிற்க வைத்து கேட்டான்.
உன்ன பத்தி அவ அப்படி சொன்னாளே என்று. அதிர்ந்து போய் நின்றேன். அந்த நாளில். அந்த தோழியின் செய்கையை நினைத்து.
நிறைய நாட்கள் யோசித்திருக்கிறேன். ஏன் அவர் அப்படி செய்தார் என்று. பின்பு ஒரு நாள் தோன்றியது. என் மீதான பயம் காரணமாகவே அவர் முந்திக்கொண்டு என்னை கேரக்டர் அசாசிநசன் செய்தார் என்று. என்ன பயம் என்று கேட்டால் ?. (திருமணத்திற்கு பின்னும் அவருக்கிருந்த பல்வேறு தொடர்புகளும், மேலும் பல விஷயங்களும் என்னக்கு தெரியும்). ஆனாலும் இதை பற்றி நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவோ, பழி வாங்கும் நடவடிக்கைகளிலோ நான் ஈடுபடவில்லை. என்னை பற்றி அவர் பரப்பிய அத்தனை அசிங்கங்களின் விளைவும் என்னை மட்டுமே பாதித்தது. அவரை பற்றிய என்னுடைய உண்மைகள் ஒரு குடும்பத்தையே குலைத்து விடும் என்பதால் மவுநியாகவே இருந்து கொண்டேன்.
இதற்க்கு மேல் அதை பற்றி விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால் விட்டுவிடுகிறேன்.
இது போலவே இன்னும் இரண்டு மூன்று பெண்கள். அவர்களை பற்றி பேசுவதற்கு எனக்கு அவமானமாக இருக்கிறது. அவர்களுடைய செய்கை அத்தனை மட்டம். குறிப்பாக அதில் ஒரு இளம் பெண். அதிகாரத்திற்காக குறிப்பிட்ட அந்த ஆசிரியரிடம் வழிய போய் சிநேகம் வைத்து கொண்டாள். இதர்க்கெல்லாம் கட்டுரை ஆசிரியர் என்ன பதில் வைத்திருக்கிறார் என்று புரியவில்லை.
அதற்காக எல்லா பெண்களும் இப்படி என்று நான் சொல்லவில்லை. அனால் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான். எதெர்க்கெடுத்தாலும் ஆண்களை குறை சொல்வதும், அவர்கள் மேல் பழி போடுவதினாலும் தங்கள் கட்டுரை புத்தகங்களில் பிரசுரமாகிவிடும் என்று கனவு காண்கிறார்கள். இந்த வழியை கடைப்பிடித்தால் எளிதில் பிரபலமாகிவிடலாம் என்றும் அவர்கள் கனவு காண்கிறார்கள்.


சிறப்பாக செயல்படாத சில பெண் பத்திரிகையாளர்கள் ஆண் ஆசிரியர்களை அல்லது, ஆண்களை குறை சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒரு பர்கா தத்தோ, ஜெயஸ்ரீயோ, அருந்ததி ராயோ, தங்களின் மேலதிகாரிகளிடம் படுத்துதான் அந்த இடத்தை பிடித்திருந்தார்கள் என்றால் அவர்களின் திறமை மூன்றே நாட்களில் வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.
திறமைக்கு எங்கும் மதிப்புண்டு என்பது கண்கூடான உண்மை.
அடுத்தவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு நம்முடைய திறமையை நாம் வளர்த்து கொண்டாலே போதும்.

4 comments:

Anonymous said...

This mention articles says about the leading media is SUN TV. Is it correct?. Media is the pillar of the nation. But the war between the lady's explores the dignity of the media. Really it is very shame.

sornavalli said...

nce comment
thanks

thats the fucking media

ragothaman said...

what is fucking media ? i dont expect this word from kavitha sornavalli

mp mani said...

நடுத்தெருவில் நிற்க வைத்து கேட்டான்.
உன்ன பத்தி அவ அப்படி சொன்னாளே என்று. அதிர்ந்து போய் நின்றேன். உங்களுடைய ஒப்புதல் வாக்கு மூலம், தவறு செயிததை வெளிபடுதியத்தை தவறு என்கிறிர்கள்.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்