/* up Facebook

Dec 18, 2009

பெண் பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரம் எங்கே ? - அன்பு தோழிகளுக்கு சுகிதா
ஊடகங்கள் எப்போதும் பச்சோந்தி தனமாய் தான் செயல்படுகின்றன .... இன்னும் பெண்களுடைய கருத்துக்களை ஏற்க இங்குள்ள ஆண்களுக்கு மனம் ,குணம் இரண்டும் இல்லை... ·பேஷன் டிப்ஸ் எழுதவும்... சமையல் குறிப்பு எழுதுவதற்காக மட்டுமே சில பத்திரிகைகள் பெண் பத்திரிகையாளர்களை தேர்வு செய்கிறது.


இது ஒரு சாம்பில் என்றால் அதன் பிறகு பெண்கள் தன் திறமையை வெளிப்படுத்த இன்னும் போராட வேண்டி இருக்கிறது. தனக்கு பிடித்தவர்களாக இருந்தால் அவர்கள் தரும் படைப்பு எவ்வளவு மட்டமாக இருந்தாலும் அதனை தூக்கி வைத்து கொண்டாடுவதும் ...தனக்கு பிடிக்கவில்லை என்றால் .... தகுதியான படைப்புகளை கூட நிராகரிப்பதும் ஊடகங்களில் சகஜமாகி போன ஒன்று .... இதையும் மீறி ஒருவர் தனது படைப்பை நிலை நிறுத்த பயங்கர போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.


பத்திரிகையாளர்கள் மக்களின் பாதுகாவலர்களாய் சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை உரிமையுடன் தட்டி கேட்க வேண்டிய இடத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் . ஆனால் இன்றைக்கோ பெண் பத்திரிக்கையாளர்கள் அவர்களது பிரச்சனைகளை தட்டி கேட்க கூடிய நிலையில் இல்லை.


பெண்களை இன்னும் போதை பொருளாக,தனது காம இச்சைக்கு பலியாக்கும் நிலையில் தான் அனைத்து துறையில் உள்ள மேல் அதிகாரிகளின் போக்கும் இருக்கிறது.
பத்திரிக்கை துறை என்பது ... அறிவுக்கும் ,திறன் பட வேலை செய்வதற்கும் உள்ள ஒரு இடம் ...ஆனால் காட்சி ஊடகங்களில் முன்னணியில் உள்ள செய்தி பிரிவின் முதன்மை ஆசிரியர் ஒருவர் ஏதோ மனிதாபமான அடிப்படையில் பெண்களுக்கு வேலை தருவதாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்.


மனிதாபிமான அடிப்படையில் வேலை என்பது உடல் ஊனமுற்றவர்களுக்கும் ... கணவன் அல்லது பெற்றோர் இறந்த பிறகு அந்த வேலையை அவர்களை சார்ந்துள்ளவர்களுக்கு பரிந்துரை செய்து அவர்களுக்கு பணி வழங்குவது என்ற அடிப்படை விஷயங்கள் கூட தெரியாமல் பத்திரிக்கை துறையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிகிறார்.


வேலைக்கு ஆள் வேண்டும் என்னும் போது... தானே வலிய கூப்பிட்டு வேலை கொடுப்பதும் வேலையில் சேர்ந்த பிறகு அதிகபட்ச மன உளைச்சளுக்கு ஆளாக்கி அதன் உச்சகட்டமாக எல்லோர் முன்னிலையிலும் அவமான படுத்துவதும் தான் அவரது தொழிலாக உள்ளது. நல்ல திறமையாக வேலை செயபவர்களை கூட இங்கிருந்து போனால் டீ கிளாஸ் கழுவ கூட உன்னால் முடியாது என்று வேண்டும் என்றே எல்லோர் முன்னிலையிலும் அசிங்கப்படுத்துவார்.
அலுவலகத்தில் தனக்கு கீழே வேலை செய்பவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியாத ... பண்ணையார் தனம் செய்கின்றவர் தான் அந்த மிஸ்டர் சீனியர்.


எழுத்து மற்றும் காட்சி ஊடகங்களில் பணி புரிபவர்கள் அனைவரும் நண்பர்களாகவும் ஒவ்வொருவரும் தனது அலுவலகங்களில் நடக்கும் விஷயங்களை பகிர்ந்து கொள்வதால் இவர் பேசும் விஷயங்கள் அனைத்து ஊடக நண்பர்களுக்கு எளிதில் விஷயம் போய் விடும் இதனால் சம்பந்தப்பட்டவர்களின் எதிர்காலம் பாதிக்கும் நிலை உள்ளது.


பெண்கள் மேற்கத்திய உடை அணிவதாலும் சடங்குகள் சம்பிரதாயங்கள் தாண்டின முற்போக்குதனமான அவரவர் விரும்பிய வாழ்க்கையை வாழ்வதாலும் தான் கலாச்சாரம் சீரழிகிறது என்று கூறும் சிலர்...தன்னுடன் வேலை செய்யும் சக பெண்களை தனது காம இச்சைக்கு இரையாக்கும் போது இந்த கலாச்சார காவலர்களின் ... கலாச்சாரம் எங்கே போகிறது..
இப்படி பெண்களை தனது அடிமை தனத்திலயே வைத்திருக்கிறது இந்த ஆணாதிக்க வர்க்கம்.

1 comments:

KULIR NILA said...

nalla therinjuttu eluthunga. Entha aanum pengalai valia padukkaikku koopiduvathilla.

Pengalakukku avargal velai nadakka padhavi kedaikka, panam kedaikka endru etho oruvagail thevai karuthi than aangalidam valia sendru avargalai mayakki thangalai padukkail koduthu vendiathai perukirargal enbathe unmai. manasa kettu paarunga ungalukke puriyum

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்