/* up Facebook

Nov 26, 2009

பெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான வாரம்


இது பெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான வாரம். நவம்பர் 25ஆம் திகதி "பெண்களின் மீதான வன்முறைகளை எதிர்க்கும் சர்வதேச தினமாகும்.


ஐ.நா.வின் 54வது பொதுச்சபை 1999 நவம்பர் 17 கூடிய போது டொமினிக்கன் குடியரசின் சிபாரிசின் அடிப்படையில் 79 நாடுகள் கூட்டாக கைச்சாத்திட்டு பிரகடனப்படுத்தியது தான் இந்த நாள். அதே ஆண்டு 25ஆம் திகதியிலிருந்து இந்த சர்வதேச தினம் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.


இந்த வாரத்தினை "பெண்ணியம்" பெண்களின் மீதான வன்முறைகள் சார்ந்த படைப்புகளை தொகுக்கிறது. உங்கள் படைப்புகளையும், உங்கள் கருத்துக்களையும் வரவேற்கிறோம்.


ஆணாதிக்க சமூக அமைப்பில் பெண்களின் மீதான வன்முறைகளுக்கு நியாயங்கள் கற்பிக்கப்பட்டே வந்துள்ளன. வளர்ந்த நாடுகள் கூட இதற்கு விதிவிலக்கில்லை. மதம், காலாசாரம், பண்பாடு, குடும்ப நிறுவனம் என்பனவற்றின் பேரால் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகள் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான புனையப்பட்ட ஐதீகங்களும், மாயைகளும் நிறையவே. எனவே அனைத்து வித புனிதங்களையும் கேள்விக்குட்படுத்துவதும். அவற்றிக்கு எதிராக நமது எதிர்ப்புகளையும் உறுதியாகவே வைக்கவேண்டியுள்ளது.


சமீபத்தில் வெளியான உலக சுகாதார நிறுவனத்தின் ஆவணமொன்றிலுள்ள தகவல்களை இங்கே காணலாம்.

உலகில்
 • உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி உலகில் 70 வீதமான பெண்கள் அவர்களின் வாழ்நாளில் உடல் ரீதியாகவோ பாலியல் ரீதியாகவோ வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
 • அமெரிக்காவில் வருடாந்தம் கொல்லப்படும் பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சொந்த பாட்னரால் கொல்லப்படுகின்றனர்.
 • வீட்டு வன்முறை, பாடசாலை மாணவிகளின் மீதான துஷ்பிரயோகம், தொழில் செய்யும் இடங்களில் இடம்பெறும் பாலியல் சேஷ்டைகள், கணவராலோ ஏனையோராலோ இடம்பெறும் பாலியல் வன்முறைகள், அகதி முகாம்களிலும், போரிலும் ஒரு கருவியாக பாலியல் கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றன.
 • ஆப்பிரிக்காவில் 6 மணித்தியாலங்களுக்கு ஒரு பெண் கொல்லப்படுகிறார்.
 • இந்தியாவில் நாளாந்தம் 22 பெண்கள் சீதனத்துடன் தொடர்புடைய காரணங்களுக்காக கொல்லப்படுகிறார்.
 • கெளத்தமாலாவில் நாளாந்தம் 2 பெண்கள் வீதம் கொல்லப்படுகின்றனர்.
 • வருடந்தோறும் 8 லட்சம் பெண்கள் கடத்தப்படுகின்றனர். இவர்களில் 79 சதவீதத்தினர் பாலியல் தேவைக்காக கடத்தப்படுன்றனர்.
 • உலகில் 100 - 140 மில்லியன் பெண்களும், சிறுமிகளும் பாலுறுப்பின் உணர்ச்சிப்பகுதி வெட்டுதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆப்பிரிக்காவில் 3 மில்லியன் பெண்கள் வருடந்தோறும் இந்தக் கொடுமையை அனுபவிக்கின்றனர்.
 • உலகில் பருவமெய்துவதற்கு முன்னர் திருமணமான சிறுவர்களின் எண்ணிக்கை 60 மில்லியன் பெண்களுக்கும் மேல்.
 • 150 மில்லியன் 18 வயதுக்கும் குறைவான பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
 • நான்கில் ஒரு பகுதி கர்ப்பிணிப் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர். இவர்களில் 53 வீதமானோர் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்.
 • பிரேசில் நாட்டிலுள்ள São Paulo பகுதியில் உள்ள பெண்கள் 15 செக்கண்டகளுக்குள் ஒரு பெண் தாக்குதலுக்கு உள்ளாகிறார்.
 • ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளின் போது 250,000 - 500,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகினர்.


இலங்கையில்
 • இலங்கையின் பிரதான தேசிய வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளான பெருந்தோட்டத்துறை, வெளிநாட்டுப் பணித்துறை, ஆடைத்தொழில் மற்றும் சுதந்திர வர்த்தக வலயம் ஆகியனவற்றில் பெண்களே தொழிற்படையினராவர்.
 • உலகின் முதற் பெண் அரச தலைவரை உருவாக்கிய நாடாக இலங்கை இருந்த போதும், இன்றும் 5வீதப் பெண்களே பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளனர்.
 • இலங்கையின் சனத்தொகையில் 51விதத்தினர் பெண்கள் இவர்களில் 60 வீதமான பெண்கள் வீட்டு வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர்.
 • தேசிய அளவில் மாதாந்தம் 8,000-10,000 வரையான பொலிஸ் முறைப்பாடுகள் பெண்களின் மீதான வன்முறைகள் சம்பந்தமாக உள்ளது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்