எனது உணர்வுகளை
அடியற்ற ஆழத்திலிருந்து
விறைக்கப் பண்ணிற்று
ஏப்பமிட்ட இரவுகளின்
அளந்தறிய முடியாத எல்லையை
திறந்து விரியும் எனது யோனி சொல்லிற்று,
பொருத்தமற்ற முகங்களையெல்லாம்
தூக்கியெறிந்து விட்டு புது முகமொன்றை
அணிந்து வைக்கத் தூண்டிற்று,
அடங்காத உனது உதடுகளை அளைந்த
இரத்த நினைவுகளை
தொலைத்து எழப் பண்ணிற்று
பெருங்கடலாக விரியும்
எனது உணர்வுகளுடன்
இனிவரும் இரவுகளை
எதிர் கொள்ளச் சொல்லிற்று,
அணைப்பு நெஞ்சின்
மேனியைச் சுவாசிக்க
மலர்களால் நிறைந்த
காடுகளை மிதித்து
வீசும் காற்றை
தழுவி அணைக்கத் தூண்டிற்று,
தழுவி அணைக்கத் தூண்டிற்று,
ஒழுக்கத்தைப் பெண்களின்
பெயரால் வரையும் கலாசாரத்தை
ஏறி மிதிக்கச் சொல்லிற்று.
0 comments:
Post a Comment