/* up Facebook

Mar 7, 2017

பெண்ணிலைவாதமும் ஆணாதிக்க சிந்தனைகளும் - செல்வி வினுசியா கமலேஸ்வரன்

2017 சர்வதேச பெண்கள் தின சிறப்புக் கட்டுரை


பெண்ணிலைவாதம் அல்லது பெண்ணிலைவாதி என்றதும் பெரும்பாலானோர் இருக்கமான, துணிச்சலான, உரத்த தொனியுடைய பெண்களாக அவர்கள் இருப்பர் என கணக்கிட்டுவிடுகின்றனர். சில பெண்களும் தாம் பெண்ணிலைவாதிகள் என தம்மை அடையாளப்படுத்த அவ்வாறே நடந்தகொள்கின்றனர். அதே வேளை சில பெண்கள் தம்மை பெண்ணிலைவாதிகள் என அடையாளப்படுத்த விரும்புவதில்லை ஏனெனில் சமூகம் தங்களை வேறு முத்திரையுடன் நோக்கிவிடும் என்ற அச்சம் அவர்களிடம் இருப்பதாகும். குறிப்பாக ஆண்கள் மத்தியில் காணப்படும் பெண்ணிலைவாதிகள் என்றாலே ஆண்களை விமர்சிப்பவர்கள் எதிராக பேசுபவர்கள் என்ற கருத்துக்களும் அதற்கு காரணமாகும்.

நாம் இவை தொடர்பாக ஆழமான கருத்தாடலுக்கு செல்லும் போது அவற்றின் எதார்த்த நிலையை விளங்கிக்கொள்ள முடியும் பெண்ணின் நிலையிலிருந்து சிந்தித்தலே பெண்ணிலைவாதம் எனவும் ஆணை மையமாக கொண்ட சிந்தனையே ஆணாதிக்கம் ஏனவும் சுருக்கமாக கூறலாம்.

பெண்ணிலைவாதம் தொடர்பான ஆழமான கலந்துரையாடல் பல விமர்சனங்களுக்கு முகம்கொடுக்கின்றன. ஆனால் விமர்சனமற்ற எந்த செயலும் இருக்கப்போவதில்லை.

உண்மையில் பெண்கள் யாவரும் பெண்ணிலைவாதிகள் அல்ல. அது போல ஆண்கள் யாவரும் ஆணதிக்க வாதிகள் அல்ல. இங்கு பெண்ணிலைவாதிகளாக சித்திக்கும் ஆண்களும் உண்டு. ஆணாதிக்க தொணியுடன் வாழ்கின்ற பெண்களும் உண்டு. அவற்றில் வேறுபாடுகள் காண்பதில் நாம் தவறிழைக்கின்றோம் என்பதே உண்மை 

உதாரணமாக: - தாயொருவர் தனது ஆண் பிள்ளைக்கு சுதந்திரங்களை அளித்து பெண் பிள்ளையிடம் நியாயமான கல்வி போன்ற விடயங்களில் கூட கடுமையாக நடந்துகொள்வாராயின் அவரை பெண்ணிலைவாதி என கூறிவிட முடியாது. பல சந்தர்ப்பங்களில் ஆண்களை விட பெண்களே பெண்களை பின்தள்ளும் செயல்களில் ஈடுபடுவர் அவர்களையும் பெண்ணிலைவாதிகள் என கூறிவிட முடியாது ஆணாதிக்க சிந்தனையுடன் வளர்ந்த வாழும் பெண்களே அவர்கள் எனலாம்.

பெண்ணிலைவாதம் என்ற கருத்தாடலின் தொடக்கமே மத சிந்தனைகள், கலாச்சார சிந்தனைகள் , பாரம்பரிய சிந்தனைகள் என்பவற்றுடன் முரன்பாடான நிலையை எடுத்துவிடுகின்றது. ஏனெனில் அவை ஆணாதிக்க சிந்தனையின் மிகுதியாக காணப்படுகின்றமையாகும். இருப்பினும் அவற்றினை மாற்றியமைக்கும் துணிவோ அல்லது ஆற்றலோ பல பெண்களுக்கு இன்னும் தோற்றவில்லை என்பதே உண்மை குறிப்பாக அவை இறைநம்பிக்கையுடன் இணைத்து காட்டப்பட்டுள்ளன. எனவே சில பெண்ணிலைவாதிகள் தம்மை இரண்டாம் பட்சமாக மாற்றும் அச் சிந்தனைகளை விட்டு வெளியேறிவிடுகின்றனர். ஆகவே பெண்ணிலைவாதிகள் சமூகத்திற்கு எதிரானவர்கள் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எதுவாயினும் உண்மையில் பெண்ணிலைவாதம் என்பது நியாயமான எவருக்கும் எதிரானதாக இருக்க முடியாது. பெண்ணிலைவாதிகளால் எப்போதும் யுத்தங்கள் இடம்பெறப்போவதில்லை கொடுமைகள் மேற்கொள்ளப்படப்போவதில்லை ஏனெனில் பெண்ணிலைவாதம் எல்லோர் நலன்களையும் கருத்திற்கொள்வதாய் அமையும்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்