/* up Facebook

Dec 8, 2015

பட்டினி கிடந்த பாலியல் தொழிலாளர்கள் : ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி


தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, மகாராஷ்டிரா மாநில பாலியல் தொழிலாளர்கள், பட்டினியிருந்து சேமித்து ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி அளித்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் அகமத் நகர பாலியல் தொழிலாளர்கள், சென்னை உட்பட தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அறிந்து மிகவும் வருத்தப்பட்டதாகவும்,

இதனால் தாங்கள் கஷ்டப்பட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, தங்கள் சேமிப்பு தொகை மற்றும் 3 நாட்களாக ஒரு வேளை மட்டும் உணவு உண்டு, அதன் மூலம் மிச்சமாகும் பணத்தை தமிழக வெள்ள நிவாரணத்துக்கு அனுப்புவது என்று முடிவு செய்தனர்.

இதன்படி, ஒரு இலட்சம் ரூபா சேர்த்து, அதற்கான காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் அனில் கவாடேயிடம் நேற்று வழங்கினர்.

இதுகுறித்து சிநேஹாலயா தன்னார் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கிரிஷ் குல்கர்னி கூறுகையில்,

‘‘பாலியல் தொழிலாளிகளின் தன்னலமற்ற சேவை மனதை உருக்குவதாக அமைந்து இருந்தது. இதற்காக கடந்த 3 நாட்களாக அவர்கள் ஒருவேளை உணவை மட்டுமே சாப்பிட்டனர்’’ என்றார்.
நன்றி - http://thinasari.lk/

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்