/* up Facebook

Nov 12, 2015

உண்மைகள் - புனைவுகள்- எஸ்.வி. ஷாலினி


பெண்கள்மீது இணையம்வழி நிகழ்த்தப்படும் துன்புறுத்தல்கள் குறித்த ஐநா அறிக்கை ஒன்று கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகியுள்ளது. இவ்வறிக்கை, சமூக ஊடகங்களில் பயனாளராக இருக்கும் பெரும்பாலான பெண்கள் பாலியல்

ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதைப் பதிவுசெய்துள்ளது. இணையவெளியில் பெண்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் இன்றைய சூழலில் இந்த அறிக்கை முக்கியமான விவாதத்தைத் தொடங்கிவைத்துள்ளது. மாதிரி ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறிக்கை முடிவின் மூலம், யதார்த்தம் இதைவிடக் கோரமான முகத்தைக் கொண்டிருக்கும் என ஊகிக்கலாம்.

இந்தியப் பெண்களில் 46.7 சதவீதத்தினர் தங்கள்மீது இணையம் வழியாக நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகப் புகாரளிக்க முன்வருவதில்லை எனக் குறிப்பிடும் இந்த அறிக்கை, 18.3 சதவீதப் பெண்கள் தங்கள்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறித்த பிரக்ஞையின்றி இருக்கிறார்கள் என்ற அச்சுறுத்தும் உண்மையை உரைக்கிறது.

இந்த இணையத் துன்புறுத்தல்கள்தான் இன்றைய சமூகத்தின் பெண்களின் நிலைக்கான ஆதாரங்கள். அரசு, ‘பெண் முன்னேற்றம்’ என்பதை வாக்குரிமை, கல்வி கற்கும் உரிமை அனைத்துப் பெண்களுக்கும் கிட்டிவிட்டது எனச் சுருக்கப் பார்க்கிறது. இது கவர்ச்சிகரமான விளம்பரம் மட்டுமே.

ஒருபுறம் பெண் முன்னேற்றம் எனச் சொல்லிக்கொண்டே இன்றைய சூழலில் பெண்கள் மீண்டும் இருண்ட பெருமைகளுக்குள் பூட்டப்படும் அபாயம்தான் நம்முன் இருக்கிறது. இந்தப் பின்னணியில் நான்காம் அலை பெண்ணியப் போராட்டம் வலியுறுத்தும் பாலினச் சமத்துவத்துவத்தை முன்னெடுக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

நவீன உலகம், நவீன மதிப்பீடுகள், விழுமியங்கள் இவற்றிடையே பெண், பெண்மை, பெண்ணுடல் குறித்த பார்வையில் நிகழ்ந்துள்ள, நிகழவேண்டிய மாற்றங்கள் எவையெவை?

பொது, தீவிர அறிவுத்தளங்கள் பெண்ணின் பார்வையிலான உலகைப் பெண்ணுக்கென்றே தனித்துவைத்திருக்கின்றன. பெண்களுக்கான பிரச்சினைகளுடன் பொதுப் பிரச்சினைகளையும் விவாதத்துக்குட்படுத்தும் பகுதிகளின் தொகுப்பே இச்சிறப்புப் பகுதி.

பல்வேறு தளங்களைச் சேர்ந்த, பெண் என்ற அடையாளத்தால் ஒன்றிணைக்கப்படும் இக்குரல்களுக்குச் செவிசாய்ப்பது மாற்றத்தை நோக்கிய பயணத்தின் எளிய நகர்வு.

நன்றி - காலச்சுவடு - 191

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்