/* up Facebook

Aug 13, 2015

சூடாமணியின் பெண்ணியம்


கிட்டத்தட்ட 60 ஆண்டுகாலமாக ஆர். சூடாமணி எழுதிவந்திருக்கிறார். நாவல்களும் சிறுகதைகளும் குறுநாவல்களும் ஆகத் தமிழில் தொடர்ந்து இயங்கியவர்களில் சூடாமணி முக்கியமானவர். ஓர் ஒப்பீடாக இல்லாவிட்டாலும், ஜெயகாந்தனைப் போலவே வாழ்வின் பலவேறு விதமான கதாபாத்திரங்களையும் படைப்புகளில் உலவ விட்டவர். அவருடன் இணைவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, சூடாமணியின் கதாபாத்திரங்களும் தொடர்ந்து விவா தங்கள், மோதல்கள் மூலம் தம் தரப்புகளை நியாயப்படுத்தி வெற்றியைப் பெற யத்தனிப்பவர்கள். மேல்மட்டக் கதாபாத்திரங்கள் என்றபோதும் சமூகத்தின் நியாயத் தேடல்களிலேயே மனம் செலுத்துவதை சூடாமணியின் கதைகளில் பார்க்க முடிகிறது.

பெண்ணியம் பேசுவதில் வலிந்து நில்லாமல் அதனை அவரவர் வாழ்வின் தேவையாக உணரச் செய்திருக்கிறார் சூடாமணி. இக் கதைகள் பெண்களால் நிரம்பிப் பெண்களின் இருப்பை அலசியவை. பெண்ணுக்குப் பெண்ணே எதிரி எனும் கருத்தைக் கொண்டிருப்போருக்கு மாற்றான ஒரு சமூகத்தின் மனப்போக்கை இற்றுவிழச் செய்வதில் அவர் கவனமாக இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அவருடைய கதாமாந்தர்களில் பலரும் மாற்றுத் திறனாளிகளாக வருவது பொருத்தம் சார்ந்ததாகும். அந்த அடிப்படையிலும் அனுதாபம் கோராது உடலாலும் மூளையாலும் உழைத்து வாழ்ந்தவர்கள். இயலாமையின் பொருட்டாக வாழ்க்கை ஓட்டத்திலிருந்து நகர விரும்பாத அக்கதாபாத்திரங்களின் போராட்டங்கள் எவரையும் எழுச்சிபெற வைக்கக் கூடியனவாக இருக்கின்றன. எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் தேக்கமுறுவது, தேங்கிக் கிடப்பது என்று எவரும் ஸ்தம்பித்து விடுவதில்லை. சூடாமணி ஒரு காலத்திய பெண்களுக்குப் பிரச்னைகளை எதிர்கொள்ளும் வலிமையான தோள்களை அளித்திருக்கிறார்.

சூடாமணியின் கதையுலகைக் கொண்டாடி கே. பாரதி எழுதியுள்ள இந்த ஆய்வு சூடா மணியை வாசிக்கும் தேவையை நமக்கு உணர்த்துகின்றது. அவரது முக்கியமான பல கதைகளின் சாராம்சத்தை நமக்கு முன்னே படைத்தளித்துவிட்டு, பின் தன்னுடைய கருத்துக்களைக் கூறி அவர் ஒதுங்குகிறார். இதன்மூலம் நமக்கான தேடல்களை இந்நூல் உருவாக்கித் தந்துள்ளது. சூடாமணிக்கு இலக்கியச் சிந்தனை செலுத்திய அஞ்சலி ‘சொல்லுக்குள் ஈரம்’.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்