/* up Facebook

Aug 6, 2015

2015 தேர்தலில் 556 (9.2%) பெண்வேட்பாளர்கள் - பெண்கள் தொடர்பூடக கூட்டின் விளம்பரம் (காணொளி)


இம்முறை 2015 பாராளுமன்றத் தேர்தலில் 225 பேரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக 6,151 பேர் போட்டியிடுகின்றனர். அதில் 556 பெண்வேட்பாளர்கள் அதாவது மொத்த வேட்பாளர்களில் 9.2%. அதிக பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கும் மாவட்டம் கொழும்பு. கொழும்பில் 147 பெண்கள் போட்டியிடுகின்றனர். அதேவேளை குறைந்தளவு பெண்களை போட்டியிட செய்துள்ள மாவட்டம் பதுளை . அங்கு 3 பெண்கள் மாத்திரமே போட்டியிடுகின்றனர்.

இலங்கையின் சனத்தொகையில் வீதத்தினரைக் கொண்ட பெண்கள் தமது அரசியல் பிரதிநிதிநித்துவத்தை உயர்த்துவதற்கு குறைந்தது 25 வீதத்தினரையாவது தமது வேட்பாளர் பட்டியலில் சேர்க்கும்படி தொடர்ச்சியாக போராடியும் இம்முறையும் அதனை எந்த கட்சியும் மேற்கொள்ளவில்லை. இத்தனைக்கும் பிரதான கட்சிகள் உட்பட பல கட்சிகள் கொள்கையளவில் இணங்கியிருந்தபோதும் நடைமுறையில் அதனை செய்யவில்லை. பிரஜைகள் முன்னணி போன்ற கட்சி தமது நுவரெலியா மாவட்டத்தில் பெண்களை மட்டுமே வேட்பாளர்களாக இறக்கியிருப்பதாக தெரிவித்துக்கொண்ட போதும் அது பிரக்ஞையுடன் செய்யப்படவில்லை. கூடவே பாமர தோட்டப் பெண்களை மோசமாக வழிநடத்தும் கும்பலிடம் அந்த பெண்கள் அகப்பட்டிருக்கிறார்கள்.

 - பெண்கள் தொடர்பூடக கூட்டின் விளம்பரம் (காணொளி)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்