/* up Facebook

Jun 9, 2015

உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் மரணம் டாக்டர்கள் மீது நடவடிக்கை ஆர்த்தி அகர்வால் பெற்றோர் முடிவு


‘பம்பரக்கண்ணாலே’ படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்தவர் ஆர்த்தி அகர்வால். 2000-ம் ஆண்டில் அவர் தனது 16-வது வயதில் ‘பாகல்பன்’ என்ற இந்தி படத்தில் முதலாவதாக நடித்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 2001-ம் ஆண்டில் ‘நூவு நாகு நச்சாவ்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஆர்த்தி அகர்வால் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ‘வசந்தம்’, ‘அந்தால ராமுடு’, ‘அடவி ராமுடு’, ‘இந்திரா’, உள்பட 25 தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். அவரது படங்கள் அனைத்தும் அங்கு தொடர்ந்து வெற்றிபெற்றன. சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர்., மகேஷ்பாபு, ரவிதேஜா, தருண், ராஜசேகர் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். ‘ரணம்-2’ என்ற தெலுங்கு படத்தில் 2005-ம் ஆண்டு கடைசியாக நடித்தார்.

2005-ம் ஆண்டு நடிகர் தருணுடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் இவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் கோமா நிலைக்கு சென்று சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தார். பின்னர் அவர், திரையுலகை விட்டு விலகி அமெரிக்காவில் குடியேறினார்.  2007-ம் ஆண்டில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் உஜ்வால் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. ஆனால் அவர் உடல் எடை அதிகமாகி பருமனாகிவிட்டார்.

இதனால் உடல் எடையை குறைத்தால் நடிக்க வாய்ப்பு தருவதாக தெலுங்கு பட உலகில் கூறினர். இதனைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவின் அட்லாண்டிக் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் உடல் எடை குறைப்பு ஆபரேஷன் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக அவர் அடிக்கடி மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அதே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தபோதே அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜூன் 6-ம் தேதி காலை அவர் மரணமடைந்தார். இச்சம்பவம் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வாலின் மேனேஜர் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திற்கு அளித்தபேட்டியில், “ஆர்த்தி அகர்வால் உடல் பருமன் மற்றும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்கு சிகிச்சைபெற்று கொண்டு இருந்தபோது சில சிக்கல்கள் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்,” என்று கூறிஉள்ளார்.

ஆர்த்தி அகர்வால் கடந்த 6 மாத்ததிற்கு முன் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை (liposuction surgery) செய்து கொண்டார் இந்த சிகிச்சை தோல்வி அடைந்ததால் தான் அவர் மரணமடைந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் முழுமையான விவரம் அவரது  உடல் பரிசோதனை அறிக்கை வந்த பிறதான் தெரியவரும் அமெரிக்காவில் சனி மற்றும் ஞாயிறு டாக்டர்கள் விடுமுறை எனபதால் பிரேதபரிசோதனை இன்று நடைபெறும் என  தெரிகிறது. அதன் பின் ஆர்த்தி அகர்வாலின் இறுதி சடங்கு இன்று நியூசெர்சியில் நடக்கிறது.

ஆர்த்தி அகர்வாலின் தந்தை ஷாசாங் அமெரிக்காவில் நன்கு அறிமுகமானவர் நியூசெர்சியில் ஓட்டல் தொழில் நடத்தி வருகிறார். ஆர்த்தியின் தயார் வீமா . ஆர்த்திக்கு சகோதரர் மற்றும் சகோதரிகள் உள்ளனர்.சகோதரி அதிதி நடிகையாக உள்ளார். சகோதரர் ஆகாஷ் தொழில் அதிபராக உள்ளார்.

ஆர்த்தி அகர்வால் கடந்த 6 மாத்ததிற்கு முன் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த அட்லாண்டிக் நகரில்  மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் நடவடிக்கை எடுப்பது குறித்து அவரது குடுமபத்தினர் ஆலோசித்து வருகிறார்கள். இது குறித்து தெலுங்கு டிவி சேனல் கூறும் போது ஆர்த்தி அகரவாலின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக அவரது குடும்பம் காத்து இருப்பதாகவும் அது கிடைத்தவுடன் மருத்துவமனை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கபோவதாகவும் தெரிவித்து உள்ளது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்