/* up Facebook

Jun 12, 2015

ஹைத்தியில் பண்டமாற்றுப் பாலுறவு ஐ.நா. அமைதிப்படை அட்டூழியம்


உணவுப் பொருட்கள் வேண்டும் என்றால், பெண்கள் பண்டமாற்றுப் பாலுறவு செயல்களில் ஈடுபட்ட வேண்டும் என்ற கொடூரச்சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. 

வடஅமெரிக்க நாடான ஹைத்தியில் ஏழைமக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தேவையை பூர்த்திசெய்ய, ஐ.நா. அமைதிப்படை பண்டமாற்றாக பெண்களை பாலுறவுக்கு ஈடுபடுத்தியது என்ற தகவல்கள் அம்பலமாகி உள்ளது. ஹைத்தியில் ஐ.நா.வின் அமைதிப்படை வீரர்கள் கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து உதவி பணிகளை செய்துவருகின்றனர். உணவுப் பொருட்களுக்கு பண்டமாற்றாக வீரர்கள் பாலுறவில் ஈடுபட்டதை ஐ.நா. குழு கண்டுபிடித்து உள்ளது என்றும் அதுதொடர்பான விபரமும் தெரியவந்தது என்றும் 'தி அசோசியேடட் பிரஸ்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

ஹைத்தி கிராமப்புறங்களில் உணவு, உடை, தண்ணீர், குழந்தைகளுக்கான வசதிகள் என அத்தியாவசிய தேவைகளை ஐ.நா. அமைதிப்படை அளித்து வருகிறது. அவர்களது பணியை கண்காணிக்கும் பொறுப்பில் ஐ.நா. மேற்பார்வை குழு செயல்பட்டு வருகிறது. பணியாற்றி வரும் அமைதிக் குழு பணியாற்றியபோது அங்கிருக்கும் பெண்களுக்கு உணவு, உடை, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய  பொருட்களை பெறுவதற்கு கைமாறாக தங்களுடன் பாலுறவு கொள்ள வலியுறுத்தி உள்ளனர் என்பதை கண்காணிப்பு குழு கண்டுபிடித்து உள்ளது. 

பெண்களுக்கு செல்போன், லேப்டாப், பணம், நகை உள்ளிட்ட பொருட்களையும் குழுவினர் அளித்தனர் என கண்காணிப்பு குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2008-13ம் ஆண்டுகளில் மட்டும் 480 பண்டமாற்றுப் பாலுறவு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெண்களிடம் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது இச்சம்பவம் வெளியாகிஉள்ளது. ஆனால் குறிப்பிட்ட குழுவினர்கள் தொடர்பான தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இருப்பினும் அதிர்ச்சி தகவல் தொடர்பாக அறிக்கையை ஒரு சில மாதங்களில் ஐ.நா. வெளியிடும் என்று எதிர்பார்ப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

உலகம் முழுவதும், மோசமான சூழல்களில் வசிக்கும் மக்களுக்கு உதவிசெய்து வரும் ஐ.நா. அமைதிப் படைக் குழுவில் சுமார் 125,000 பேர் பணியாற்றுகின்றனர் இதுபோன்று அமைதிப்படையினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டானது கடந்த 2014ம் ஆண்டில் 51 ஆக குறைந்து உள்ளது. இதுவே அதற்கு முந்தைய ஆண்டில் 66 ஆக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளும் இதில் அடங்கும் என்றும் கூறப்படுகிறது. “பொருட்கள் வழங்கப்படாத போது, சில பெண்கள் அமைதிப்படையை தடுத்து நிறுத்துகின்றனர், அடையாளங்களை சமூக வலைதளங்கள் மூலம் வெளியிடுவோம் என்று மிரட்டிஉள்ளனர்.” என்று ஏ.பி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்