/* up Facebook

May 18, 2015

தலித் பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமை: உ.பி.யில் நடந்த அவலம்!


லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலத்தில் தலித் பெண்கள் 5 பேர் நிர்வாணப்படுத்தப்பட்டு  ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட கொடுமை நடந்துள்ளது.  இதுதொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷகாஜாகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாரிவா கிராமத்தில், தலித் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், வேறு சமூகத்தைச்  சேர்ந்த பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து  அந்த இளைஞரும் இளம்பெண்ணும் தங்கள் ஊரைவிட்டு  தலைமறைவாகியுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து பெண்ணின் உறவுக்காரர்கள் தலித் வாலிபரின் உறவுக்கார பெண்கள் 5 பேரின் ஆடைகளை களைந்து, ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. இச்சம்பவம் தொடபாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவத்தில் தொடர்பு உடைய 5 பேரை கைது செய்து உள்ளனர். 

இச்சம்பவத்தை அடுத்து கிராமத்தில் பெரும் பதற்றம்   ஏற்பட்டு உள்ளது. போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டு உள்ளனர்.

நன்றி - விகடன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்