/* up Facebook

May 7, 2015

அடிப்படைவாதமும், பெண்களும் அவர்களது சுதந்திரமும்"- ஸர்மிளா ஸெயித்தின் பேச்சு

பெர்லினில் கடந்த மே 2ஆம் திகதி நடந்து முடிந்த பெண்கள் சந்திப்பில்
"அடிப்படைவாதமும், பெண்களும் அவர்களது சுதந்திரமும்" என்கிற தலைப்பில் ஸர்மிளா ஸெயித் skype மூலம் ஆற்றிய உரை


பாலியற் தொழிலை சட்டமாக்குவது பற்றி பி.பி.சி தமிழ் வானொலியால் கேட்கப்பட்ட கேள்விக்கு, தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து கொலை மிரட்டல்களிற்கும், அச்சுறுத்தல்களிற்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் சமூகவிடுதலைப் போராளியான ஸர்மிளா ஸெயித்தினன் சுதந்திரக் குரலை உலகெங்கும் உரக்கச் செய்து ,அவரது சுதந்திரத்திற்காக, சமூகவிடுதலையில் அக்கறை கொண்ட அனைத்து பெண்களினதும் சார்பிலும் 32வது பெண்கள் சந்திப்பு தனது ஆதரவைத் தெரிவித்தது. மதம் மற்றும் சமூகங்களின் அடிப்படையில் பெண்களின் சுதந்திரத்தையும், இருப்பையும் அச்சுறுத்தி வரும் அனைத்து ஆதிக்கசக்திகளையும் நாம் எதிப்பதோடு இந்த ஒடுக்குமுறைகளிற்கெதிராக போராடும் ஸர்மிளா ஸெயித் போன்ற அனைத்து பெண்களுடனும் நாம் கைகோர்த்து நிற்கின்றோம்..

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்