/* up Facebook

May 16, 2015

புதுடில்லியும் புங்குடுதீவும் - பாரதி ராஜநாயகம்


புதுடில்லிக்கும் புங்குடுதீவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கக்கூடும் என நீங்கள் நினைக்கலாம்.

2012 டிசெம்பர் 16 ஆம் திகதி இரவு பஸ் ஒன்றில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது 23 வயதான மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டு பஸ்ஸிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
உயிருக்குப் போராடிய அந்த மாணவியை இந்திய அரசாங்கம் விஷேட விமானத்தில் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பிவைத்தது. சிங்கப்பூரில் வழங்கப்பட்ட உயர் சிகிச்சையினாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரது மரணம் இந்தியாவில், குறிப்பாக டில்லியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும் என்ற போராட்டங்களால் டில்லியே ஸ்தம்பிதமடைந்தது. போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் சமூக ஊடகங்களின் பங்கு முக்கியமானதாகவிருந்தது.
குற்றம் செய்தவர்களை விரைந்து தண்டனைக்குள்ளாக்குவதற்கான சட்டத் திருத்தங்களை அவசரமாகச் செய்வதற்கும் இந்தப் போராட்டங்களே காரணமாக இருந்தன.

ஆனால், இதில் நாம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான விடயம் உள்ளது:

அண்மைக் காலம் வரை அந்த மாணவியின் பெயரை இந்திய ஊடகங்கள் எதுவும் வெளியிடவில்லை. படத்தை எந்த ஊடகங்களும் பிரசுரிக்கவில்லை. இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஊடகங்கள், சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் இருந்தும் அந்த மாணவியின் படம் எங்குமே வெளிவந்ததில்லை.
இந்திய சட்டத்தின்படி பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் பெயரையோ, படத்தையோ வெளியிட முடியாது. இந்தியாவில் அது சட்டம்.

எமது நாட்டில் அப்படி ஒரு சட்டம் இல்லைத்தான். அதற்காக...


தினக்குரல் ஆசிரியர் பாரதி ராஜநாயகம் அவர்களின் முகநூல் குறிப்பிலிருந்து நன்றியுடன் பிரசுரிக்கப்படிகிறது

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்