/* up Facebook

Feb 7, 2015

தீபா ஒரு தங்க மங்கை!


திருவனந்தபுரம் :காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தேசிய விளையாட்டுப் போட்டியில் 5 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.


திரிபுராவை சேர்ந்த  தீபா கர்மாகர், கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார்.இதற்கு முன் காமன்வெல்த் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் வேறு எந்த இந்திய வீராங்கனையும் பதக்கம் வென்றதில்லை.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் 35-வது தேசியப் போட்டியிலும் தீபா கர்மாகரின் ஆதிக்கம் தொடர்கிறது. தேசியப்  போட்டியில் டேபிள் வால்ட் உள்ளிட்ட 5 பிரிவுகளில் தீபா கர்மாகர்  5 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளார். இதற்கிடையே தேசிய விளையாட்டுப் போட்டியில் கேரள நீச்சல் வீரர்  ஷாஜன் பிரகாஷ் 6 வது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்