/* up Facebook

Jan 2, 2015

பெண்களைக் காக்கும் சட்டங்கள்


ஒரு பெண் பிறக்கும் தருணத்திலிருந்து மரணம் சம் பவிக்கும் தருணம் வரை, அவளை பாதுகாப்ப தற்கான சட்டங்கள் ஏராளம்.     The Preconception and Prenatal Diagnostic Techniques (Prohibition of Sex Selection) Act, 1994, Medical Termination of Pregnancy Act 1971போன்ற சட்டங்கள் கருவிலிருக்கும் ஒரு பெண் சிசுவை பாதுகாக்க பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தச் சட்டங்கள் நடைமுறையில் இருந்தும் பல பெண் சிசுக்களின் கருக்கலைப்பும் பெண்சிசு கொலையும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. என்னதான் சட்டங்கள் மூலம் (குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் 2006) குழந்தைத் திருமணங்களை தடுக்க முயற்சி செய்தாலும், குழந்தைத் திருமணங்கள் சட்டத்தை மீறி நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. 2012இல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.

எனினும் சமீபத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் - குறிப்பாக பெங்களூரு பள்ளியில் பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் கல் மனதையும் கரைய வைக்கும்.

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை ஒழிப்பு சட்டம், கேலிவதை தடுப்புச் சட்டம், பெண்களை இழிவாக சித்தரிப்பதை தடுக்கும்  சட்டம், இணைய வெளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கும் சட்டம், ஆட்கடத்தல் வியாபாரத் தடுப்புச் சட்டம், பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் என பெண்களை பாதுகாக்க இயற்றப்பட்டிருக்கும் சட்டங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

பெண்களை பாதுகாக்க தேசிய மகளிர் ஆணையத்தின் அமைப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மகளிர் நீதிமன்றங்கள், குடும்ப சிக்கல்களை தீர்க்க குடும்ப நல நீதிமன்றங்கள் என்று இவ்வளவு சட்ட அமைப்புகள் இருந்தும், பெண்களுக்கு போதிய நீதி கிடைக்கவில்லை என்பதே வருந்தத்தக்க நிதர்சனம்.

பெண்களுக்கான சட்டங்கள் இயற்றப்படும் நேரங்களிலெல்லாம் ஏதாவது ஒரு பெண் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது உயிர் பலி ஆகியிருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியதியாக உள்ளது.

சரிகா ஷா என்ற மாணவியின் மரணம் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (கேலிவதை தடுப்புச் சட்டம்) இயற்றப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. 2012 டிசம்பர் 16 அன்று இந்தியாவே வெட்கி தலைகுனிந்த ஒரு தருணம்... தலைநகராம் டில்லியில் அப்பாவி மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன் புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, நடுவீதியிலே சருகாக வீழ்ந்த தினம்.

நிர்பயா என்று ஊடகங்களால் பெயரிடப் பட்ட இந்தச் சகோதரியின் துயர் கண்டு நாடே பொங்கி எழுந்து நடுவீதிக்கு வந்து போராடியது நம் நினைவலை களை விட்டு என்றும் அகலாத ஒரு நினைவு. இந்த நிர்பயாவின் மரணமே வெகுநாளாக கிடப்பில் போடப் பட்டிருந்த சட்ட திருத்தங்களுக்கு வழிவகை செய்தது.




0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்