/* up Facebook

Dec 27, 2014

ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அம்மையாரின் புரட்சிகர மரண சாசனம்


தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று திராவிடர் கழகத்தில் தன் குடும்பத்தோடு இணைந்து, இயக்கம் நடத்திய எல்லா போராட்டங்களிலும் பங்கேற்று தன்னை சமூகத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட மரியாதைக்குரிய ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அம்மையார் மறைந்தார்.

அம்மையாரின் உடல் சென்னை பெரியார் திடலில் மக்கள் பார்வைக்கு நாளை (21.12.2014, ஞாயிறு) காலை 10 மணிக்கு வைக்கப்பட்டு 11.30 மணிக்கு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படவிருக்கிறது.

2009ல் அம்மையார் எழுதிய மரண சாசனத்தில் நம் மனதை நெகிழ்த்தி வழி நடத்தக் கூடிய வரிகள் இவை:

“என் இயக்கக் குடும்பத்தவருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:
நான் இறந்தபின் என் உடலுக்கு யாரும் மாலை போட வேண்டாம். 100 ரூபாய்க்குக் குறைந்தது இன்று மாலை இல்லை. மலர்கள் உதிர்ந்து நாராக குப்பையில் போடுவதில் யாருக்கும் பயனில்லை. அதனால் (அந்த மாலைக்குண்டான காசை) என் உடல் அருகில் ஓர் உண்டியல் வைத்து அதில் சேரும் தொகையை அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தருவதற்கு ஏற்பாடு செய்வதற்கு உதவியாக இருக்க வேண்டும்.
என் உடலை மருத்துவமனைக்குத் தர நம் இயக்கத் தலைவர் ஏற்பாடு செய்து தர வேண்டும். ஒரு உடலை 100 மாணவர்கள் அறுவை செய்து பாடம் கற்றால் ஆயிரமாயிரம் நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் வாய்ப்பு கிடைத்திடும் அல்லவா? இந்த வகைப் பணியும் சமுதாயப் பணிதானே...
சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் வைத்துத்தான் என் உடல் இறுதியாக மருத்துவமனைக்கு அனுப்பிடல் வேண்டும். இது என் அன்பான வேண்டுகோள்...
உடல் எடுக்கப்படும் வரை யாரும் பசியோடோ பட்டினியோடோ இருக்கக் கூடாது என்பதால் ரூபாய் பத்தாயிரம் திரவிடன் நல் நிதியில் வைத்துள்ளேன். அதை உணவுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும்”.

[விடுதலை 20-12-2014]
- ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்