/* up Facebook

Dec 6, 2014

ஹிட்லரை எதிர்த்த சோபி ஸ்கால்


உலகம் முழுவதுமே மிக மோசமான பின் விளைவு களை ஏற்படுத்திய இரண்டாம் உலகப் போர் காலகட்டம்... ஹிட்லர் தலைமையில் ஜெர்மனிதான் இந்தப் போருக்குத் தலைமை தாங்கியது. ஆனாலும், எல்லா ஜெர்மனியர்களும் போருக்கு ஆதரவாக இல்லை. அப்படி, சொந்த நாடாக இருந்தாலும், சொந்த நாட்டு அதிபராக இருந்தாலும் ஹிட்லரை எதிர்த்தவர்களில் ஒருவர் சோபி ஸ்கால்!

1921 மே 9 அன்று பிறந்தார் சோபி. சோபி நிறையப் படிப்பார்... ஓவியங்கள் தீட்டுவார்... இசையிலும் ஆர்வம் இருந்தது. பள்ளியில் படிக்கும்போது மாணவர் தலைவராக இருந்து, திறமையாகச் செயல்பட்டார். நாஜி  இளைஞர் படை, பெண்கள் படை போன்றவற்றில் இணைந்து பணி புரிந்தார். பள்ளி இறுதி முடித்தவர்கள் கட்டாயம் தேசச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று சட்டம் இருந்தது.

அதற்காக பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, ஆசிரியராக சிறிது காலம் வேலை செய்துகொண்டிருந்தார் சோபி. பிறகு, முனிச் பல்கலைக் கழகத்தில் படிக்கச் சென்றார். அங்கேதான் சோபியின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.

யூதர்களுக்குத் தனிப் பள்ளி, தனிக் கடைகள், உடையில் சின்னம் அணிந்திருக்க வேண்டும், குறிப்பிட்ட நேரங் களில்தான் வெளியில் வரவேண்டும்,  மற்றவர்களுடன் பேசக்கூடாது என்றெல்லாம் நாஜிகள் மிக மோசமான சட்டங்களைக் கொண்டு வந்தனர். இவற்றைக் கண்டு அதிர்ந்து போனார் சோபி.

இன்னொரு பக்கம் ஹிட்லரை எதிர்த்தவர் களுக்குக் கிடைத்த தண்டனைகளும் அவரை நிலைகுலையச் செய்தன. சோபியின் அப்பா ஹிட்லரின் நடவடிக்கைகளை எதிர்த்த காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு தனிநபரின் கைகளில் முழு அதிகாரமும் இருந்தால், அவர் எந்த அளவுக்கு சர்வாதிகாரியாக நடந்துகொள்வார் என்பதை அப்போது புரிந்துகொள்ள முடிந்தது.   அண்ணன் ஹான்ஸ் மற்றும் அவர் தோழர்களுடன் சேர்ந்து ஹிட்லரை எதிர்க்கும் போராட்டங்களில் பங்கேற்றார் சோபி.

ஒயிட் ரோஸ் என்ற  அமைப்பு உருவானது. 1942 ஜூன் முதல் 1943 பிப்ரவரி வரை இந்த அமைப்பு மிகவும் தீவிரமாகச் செயல்பட்டது.  ஹிட்லருக்கு எதிரான செயல்களில் ஈடுபட் டதாக குற்றம் பதிவு செய்யப்பட்டது. வெகு விரைவில் விசாரணை முடிந்தது.  சோபி, ஹான்ஸ் மற்றும் தோழர்களுக்கு கெல்லட்டின் கொண்டு தலை வெட்டும் தண்டனை வழங்கப் பட்டது.

1943 பிப்ரவரி 22... ஹான்ஸ், நண்பர் கிறிஸ்டோப் ப்ராப்ஸ்ட், சோபி மூவரையும் தண்டனை அளிப்பதற்காக அழைத்துச் சென்றனர், வேண்டும் சுதந்திரம் என்றபடி ஹான்ஸ் கொலை மேடைக்குச் சென்றார். அவர் தலை துண்டிக்கப்பட்டது. 21 வயதே நிரம்பிய சோபி, துணிச்சலுடன் கண்களை இமைக்காமல் மரணத்தை எதிர்கொண்டார்.



.


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்