/* up Facebook

Nov 24, 2014

உலக முஸ்லிம் அழகுராணி போட்டி

உலக முஸ்லிம் அழகுராணி போட்டி இந்தோனேசிய யொக்யகர்த்தா நகரில் இடம்பெற்ற போது அழகுராணியாக தியூனிஸிய அழகுராணி பத்மா பென் முடி சூட்டிக்கொண்டார். அவருக்கான அழகுராணி கிரீடத்தை கடந்த ஆண்டின் முஸ்லிம் அழகு ராணியான ஒபபியி அயிஷாஹ் அஜிபோலா அணிவித்தார்.
இந்த அழகு ராணிப் போட்டியானது முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக நடத்தப்படும் போட்டியாகும்.

மேற்படி போட்டியின் இறுதிச்சுற்றில் மருத்துவ கணினி விஞ்ஞானிகள் உள்ளடங்கலான 18 பெண் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் கணினி விஞ்ஞானி (25 வயது) இந்தப் போட்டியில் வெற்றி பெற்றார். அவருக்கு தங்க கடிகாரம், தங்க நாணயம் மக்காவுக்கான சுற்றுலா என பரிசாக வழங்கப்பட்டன. 

இஸ்லாமிய பாரம்பரிய முக்காடு அணிந்து இறுதிச் சுற்றில் கலந்து கொண்ட மேற்படி போட்டியாளர்களில் வெற்றியாளர்கள் வெறும் தோற்ற அழகை மட்டும் அடிப்படையாக கொண்டு அல்லாமல் அவர் எவ்வாறு குர்ஆன் வசனங்களை மனனம் செய்து கூறுகிறார். நவீன உலகில் இஸ்லாம் தொடர்பில் அவர்களது கண்ணோட்டம் என்பனவற்றை கவனத்திற்கொண்டு தெரிவு செய்யப்படுகிறார்.

 நன்றி - வீரகேசரி இணையம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்