/* up Facebook

Oct 23, 2014

'ஷிரஸ் ஹாங்அவுட் காஃபே' - -என்.மல்லிகார்ஜுனா

ஆக்ரா என்றதும் உடன் நினைவுக்கு வருவது தாஜ்மஹால். இப்போது அங்கு இன்னொரு இடம் அங்கு வருபவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது அது 'ஷிரஸ் ஹாங் அவுட் காஃபே'. இது தாஜ்மஹால் கேட்வே எதிரில் இருக்கும் ஃபதேஹாபாத் சாலையில் அமைந்திருக்கிறது. 

இந்த காபி ஷாப் சமீபத்தில் அங்கு திறக்கப்பட்டுள்ளது. என்ன சிறப்பு என்றால் ஆசிட் வீச்சினால் பாதித்த இளம் பெண்களுக்கான 'ஸ்டாப் ஆசிட் அட்டாக்' எனும் அமைப்பும் சான்வ்  (Chaanv) எனும் உள்ளூர் தொண்டு நிறுவனமும் இணைந்து இந்த காபி ஷாப்பை தொடங்கி உள்ளன.

ஆசிட் வீச்சுக்கு முன் வண்ணமயமாக இருந்த அவர்களது வாழ்க்கை திடீரென ஒரு நொடியில் இருண்டு விடுகிறது. அதில் இருந்து அவர்கள் மீள்வது என்பது மிகவும் கடினம். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அவர்கள் அதிலிருந்து மீண்டு வந்தாலும் அவர்களது முகம் பார்ப்பதற்கு மிகவும் கொடுரமாக இருக்கும். மற்றவர்களின் பார்வையை இவர்களும் எதிர்கொள்வது மிகவும் துயரமான நிகழ்வுதான்

ஆசிட் வீச்சுக்கு பின் அப்படியே வீட்டில் முடங்கி விடாமல், இனி ஒரு முறைகூட இப்படி ஒரு கொடுரச் செயல் நிகழக்கூடாது என்றும் அதை வலியுறுத்தவும்தான் இது போன்று ஆரம்பித்து இருக்கிறார்கள்.

ரிது (Ritu) என்ற ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வெப் சைட் மூலம் நிதியை சேகரித்தது சான்வ் தொண்டு அமைப்பு. ரிது மீது ஆசிட் தாக்குதல் நடந்ததும் அவரது குடும்பம் தெருவிற்கு வந்துவிட்டது. குடும்ப பாரம் முழுவதும் ரிது மீது வீழ்ந்தது. இந்த காஃபே ஆரம்பித்ததின் மூலம் ரிது போன்ற ஆசிட் வீச்சினால் பாதித்த இளம் பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வருகிறது. இப்போது இவர்கள் யாருடைய உதவியின்றி வாழ்கிறார்கள்.  

இதுபோன்ற காஃபே ரெஸ்டாரண்டுகளை அதிக அளவில் திறக்கவேண்டும் என்று சான்வ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த காபி ஷாப்பில் படிப்பதற்கு என தனி அறை இருக்கும். இங்கு பெண்களின் சாதனைகள் பற்றிய புத்தகங்கள் இருக்கும். ஆசிட் வீச்சினால் பாதிப்படைந்த ரூபா என்ற பெண் வடிவமைத்த ஆடைகளைக் கொண்டு இங்கு ஃபோட்டோ ஷூட் நடந்தப்பட்டுள்ளது. புகைப் படக் கலைஞனர் ராஹுல் ஷர்மா (Rahul Saharan) ஆசிட் வீச்சினால் பாதித்தப் பெண்களைப் பற்றி ஒரு டாக்குமன்டரி படம் எடுக்கிறார்.

விரைவில் டெல்லி, கான்பூர், லூதியானா நகரங்களிலும் இதுபோன்ற காஃபி ஷாப் திறக்க திட்டமிட்டுள்ளது சான்வ் தொண்டு அமைப்பு. இங்கே வரும் வாடிக்கையாளர்களிடம் ஆசிட் வீச்சினைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்கிறது சான்வ். இது ஆசிட் வீச்சினால் பாதிப்படைந்த இளம் பெண்கள் தங்களது  கனவை நனவாக்க ஒரு நல்ல தளம்.

நன்றி - விகடன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்