/* up Facebook

Oct 4, 2014

ரோசா பார்க் - அல்பியாஸ் முஹம்மத்


'மார்டின் லூதர் கிங்' என்கின்ற பெயருக்கு இணையாக உலக வரலாற்றில் கருப்பின மனிதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிரான போரில் உச்சரிக்கப்பட வேண்டிய இன்னுமொரு பெயர் 'ரோஸா பார்க்'.

பிறப்பால் ஆபிரிக்க அமெரிக்கர் அவர். கணவர் முடி திருத்தும் வேலை செய்து கொண்டிருந்தார். அன்றைய ஐக்கிய அமெரிக்காவில் கருப்பினத்தவர்களுக்கென சில விதி முறைகள் இருந்தன. கருப்பின மக்கள் பேரூந்துகளில் தனி இருக்கைகளில் அமர வேண்டும், அதுவும் முன்புறமாக ஏறக் கூடாது. வெள்ளையின மக்கள் வந்தால் இடம் கொடுத்து எழந்து நிற்க வேண்டும். டிக்கெட் எடுத்திருக்கின்றேன் என்கின்ற விதியெல்லாம் பேசக் கூடாது.

அப்படித்தான் ஒரு முறை ஐக்கிய அமெரிக்காவில் பேரூந்து ஒன்றில் கையில் டிக்கெட்டோடு இருக்கையில் அமர்ந்து போய்க் கொண்டிருந்தார் ரோஸா பார்க். அப்போது வெள்ளையர் ஒருவர் உள்ளே வந்ததால் பின்னால் போய் இருக்கச் சொன்னார் ஓட்டுனர். மறுத்த ரோஸாவோ எழந்து முன்னால் போனார். கொட்டும் மழையில் அவரைப் பேரூந்திலிருந்து இறக்கினார் ஓட்டுனர்.

அடுத்த முறை அதே பேரூந்து, அதே சூழல், அதே ஓட்டுனர். இடம் மாறச் சொன்னார் ஓட்டுனர். "எழ மாட்டேன் நான்" என்று அமர்ந்திருந்தார் ரோஸா. மூன்று ஆபிரிக்க அமெரிக்கர்கள் எழுந்தார்கள். அப்பொழுதும் ரோஸா எழ மறுத்தார். "கைது செய்யப்படுவாய்" என ஓட்டுனர் எச்சரிக்க "கைது செய்து கொள்ளுங்கள்" என கம்பீரமாகச் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார் ரோஸா. கைது செய்யப்பட்டார் ரோஸா.

"எனக்கு நாற்பத்திரண்டு வயதுதான். நான் களைப்பாக இல்லை. முதுமை என்னை அழுத்தவில்லை. ஆனால் எழுந்து எழுந்து அடக்கு முறைக்கு பயந்து பயந்து களைப்படைந்துவிட்டோம் நாங்கள். அதனால் எழ மறுத்தேன்." என்றார் ரோஸா.

கருப்பின மக்கள் கொதித்தெழுந்தார்கள். லூதர் கிங் பின் அணி திரண்டார்கள். பேரூந்தை புறக்கனித்தார்கள். நடந்தே போனார்கள். டாக்ஸியில் போனார்கள். ரோஸாவுக்கு நீதி கிடைக்கின்ற வரை பேரூந்தில் ஏற மாட்டோம் என ஒரு மாகாணமே ஒரு வருட காலம் உறுதியாக நின்றது வரலாறு. கருப்பின டாக்ஸி டிரைவர்கள் கருப்பின மக்களை இலவசமாக தங்கள் வண்டிகளில் அழைத்துப் போனார்கள். பல இடங்களில் மக்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் யாரும் அசைந்து கொடுக்கவில்லை.

கீழ் நிலை கோட் ஒன்று ரோஸா கைது செய்யப்பட்டது செல்லும் என்றது. கருப்பின மக்கள் தொடர்ச்சியாக 385 நாட்கள் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். அசைந்து போன அமெரிக்க நீதித் துறை "சமமான இருக்கை கருப்பின மக்களுக்கும் உண்டு" என தீர்ப்பளித்தது.

கணவர், பிள்ளை, சகோதரர், தாய் என அனைவரையும் கேன்சருக்கு இழந்து தனிமையில் வாடி வதங்கிய போதும் கருப்பின மக்களின் உரிமைகளை நிலை நாட்ட தன்னாலான முயற்சிகளை எடுக்காமல் இருந்ததில்லை அவர்.
'கருப்பின மக்களது போராட்டத்தின் தாய்' என அழைக்கப்படுகின்ற ரோஸாவைப் பற்றி அவர் இறந்த போது இப்படிச் சொன்னார்கள் கருப்பின மக்கள்.

"அன்று அவர் எழந்து நிற்க மறுத்ததால்தான் இன்று நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றோம்."
புரட்சி ரோஸாதான் 'ரோஸா பார்க்'.

(ஒரு தேதி, ஒரு சேதி என்கின்ற நிகழ்ச்சியின் துணையோடு...)

அல்பியாஸ் முஹம்மத் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து நன்றியுடன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்