/* up Facebook

Sep 12, 2014

விபசார வழக்கில் பெண் மட்டும்தான் குற்றவாளியா? சல்யூட் குஷ்பூ !




சல்யூட் குஷ்பூ !

பதிவு 1: பாலியல் தொழில் வழக்கில் ஒரு பெண் கைது செய்யப்படும்போது அவரது முகம், அடையாளம் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. ஆனால், அந்த பெண்ணுடன் இருந்த ஆணின் அடையாளம் ஏன் மறைக்கப்படுகிறது? அந்த ஆணுக்கும் இந்த குற்றத்தில் சமபங்கு இருக்கிறதுதானே?
பதிவு 2: பாலியல் தொழில் தண்டனைக்குரிய குற்றம் என்றால், அந்தக் குற்றத்தில் சம்பந்தப்படும் ஆண்களையும் அதே சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள். ஒரு பாலியல் தொழிலாளியின் சேவை பெற்றதற்காக அந்த ஆண்மகனுக்கும் அதே இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.சி) கீழ் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
பதிவு 3: ஒருவகையில் அந்த ஆணுக்கு கூடுதல் தண்டனைகூட வழங்கலாம். ஏனெனில், ஒரு பெண்ணின் பொருளாதார இயலாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிலிருந்து பாலின்பம் பெறுகிறார் அந்த ஆண்.

(கன்னட நடிகை பாலியல் தொழில் வழக்கில் கைது செய்யப்பட்டது தொடர்பாக குஷ்பூ தனது ட்வீட்டர் தளத்தில் இட்ட பதிவுகள் )

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்