/* up Facebook

Sep 11, 2014

3 ஆண்டுகளாக கழிவறையில் அடைத்து சித்ரவதை! வரதட்சணை கொடுமை

பாட்னாவில் வரதட்சணைக்காக 25 வயது பெண் ஒருவரை 3 ஆண்டுகளாக கழிவறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தது தெரியவந்துள்ளது. பாட்னா என்ற இடத்தில் இருந்து 140 கிமீ தூரம் தொலைவில் உள்ள ராமபக் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை அறிந்த பொலிஸார் அவரை கடந்த ஞாயிற்றுகிழமை மீட்டுள்ளனர்.

அந்த பெண்ணின் தலைமுடி காய்ந்த நிலையிலும், நகங்கள் பெரிதாகவும் ஆடை கிழிந்தும் இருந்துள்ளது. 3 வருடமாக குழந்தையை கூட பார்க்க விடாமல் உள்ளே அடைத்து வைத்ததால், சூரிய ஒளியை கூட அந்த பெண்ணால் பார்க்கமுடியவில்லை. அதிகாரிகள் கூறுகையில், அந்த பெண்ணுக்கு வீட்டில் மீந்து போகும் உணவை கொடுத்துள்ளனர்.

2010ல் திருமணம் நடந்த பின்பு மாப்பிளையின் பெற்றோர்கள் வரதட்சனைக்காகவும் பெண் குழந்தை பெற்றதற்கும் சேர்த்து இந்த சித்திரவதத்தை தந்துள்ளனர். பெண்ணின் உறவினர்கள் வந்தாலும் அவர்களிடம் எரிச்சலுடன் பேசி திருப்பி அனுப்பிவைத்துள்ளனர். இதுபற்றி பொலிசாரிடம் புகார் தெரிவித்ததையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிஸார், மாப்பிள்ளை, மாப்பிளையின் பெற்றோர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

நன்றி - இணையம் 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்