/* up Facebook

Aug 8, 2014

மாணவியை கடத்திச் சென்ற இராணுவ வீரர் கைது

பாடசாலையில் நடந்த பகுதி நேர வகுப்பு முடிந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த மாணவியை கடத்திச் சென்ற இராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக மாதம்பை பொலிசார் தெரிவித்துள்ளனர். புத்தளம் மாவட்டம் மாதம்பை - மெதகம பிரதேசத்தில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிங்கிரிய -வெள்ளவாவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டார்.
மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறியுள்ளனர்.
 
சந்தேக நபர் மாணவியை மோட்டார் சைக்களில் ஒன்றில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தார். மாதம்பை பனிரெந்தாவ தேவாலவத்தை பகுதியை 23 வயதான சந்தேக நபரை தான் இரண்டு வருடமாக காதலித்து வந்ததாகவும் சந்தேக நபர் அழைத்ததால் அவருடன் சென்றதாகவும் மாணவி பொலிசாரிடம் கூறியுள்ளார். எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட இராணுவ வீரருக்கு எதிரான திருமணம் செய்யும் வயதை பூர்த்தி செய்யாத இளம் பெண்ணை கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்