/* up Facebook

Aug 8, 2014

சிறுமிகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த இராணுவச் சிப்பாய்க்கு பாலியல் நோய்

சிறுமிகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த இராணுவச் சிப்பாய்க்கு பாலியல் நோய் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. களுத்துறை பிரதேசத்தில் அண்மையில் 14 வயதான பாடசாலை மாணவிகள் இருவர்,  ஐந்து பேரினால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர்.

இந்த ஐந்து சந்தேக நபர்களில் ஒருவரான இராணுவச் சிப்பாய்க்கு பாலியல் நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகளை, பாலியல் நோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர் ஒருவரிடம் காண்பித்து சிகிச்சை வழங்கப்பட வேண்டுமென பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கையை பரிசீலனை செய்த நீதவான் மாசிங்க, சிறுமிகளை மருத்துவர் ஒருவரிடம் காண்பிக்குமாறு நேற்று உத்தரவிட்டுள்ளார். கடற்படை மற்றும் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்துள்ளனர். சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் என பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதவான் ஏற்றுக்கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்