/* up Facebook

Aug 3, 2014

வரலாற்று சாதனை படைத்தார் தீபா!



காமன்வெல்த் விளையாட்டில் ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் தீபா

ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான ‘வால்ட்’ பிரிவின் இறுதி சுற்றுக்கு 8 பேரில் இந்தியாவின் தீபா கர்மாகர் தகுதி பெற்றிருந்தார். இதில் தீபா 14.366 புள்ளிகளுடன் 3வது இடத்தை உறுதி செய்து வெண்கலப்பதக்கத்தையும் தட்டிச் சென்றார். இங்கிலாந்தின் கிளாடியோ பிராக்பேன் தங்கமும், கனடாவின்எலிசபெத் பிளாக் வெள்ளியும் பெற்றனர்.

திரிபுராவைச் சேர்ந்த 20 வயதான தீபா, காமன்வெல்த் விளையாட்டில் ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற புதிய சரித்திர சாதனையை படைத்திருக்கிறார். 

சாதனை படைத்த தீபாக்கு வாழ்த்துகளை பகிர்வோம்.


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்