/* up Facebook

Jul 17, 2014

பஸ்ஸில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த இராணுவ வீரர் கைது

பஸ்ஸில் பயணம் செய்த பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்னேரிய இராணுவ முகாமில் பணியாற்றும் இந்த சந்தேக நபர் ஹபரணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மாணவி கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இருந்து தியசேன் புர வரை பஸ்ஸில் பயணம் செய்துள்ளார்.
 
அந்த பஸ்லிம் பயணித்த இராணுவ வீரர் பஸ்ஸூக்குள் வைத்து மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார். மாணவி இது குறித்து தனது தொலைபேசி மூலம் ஹபரணை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை தொடரந்து, பஸ்ஸை வழி மறித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து ஹபரணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்