/* up Facebook

Jul 8, 2014

ஏனைய செய்தி பாலியல் துஷ்பிரயோகம் - மன்னிப்பு கோரும் பாப்பரசர்

மத குருக்களினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களை பாப்பரசர் பிரான்ஸிஸ் சந்தித்துப் பேசியுள்ளார். இவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான குற்றங்கள் மற்றும் பாவச் செயல்கள் தொடர்பில் கடவுளின் முன்னிலையில் தமது துயரத்தை தெரிவிப்பதுடன் மன்னிப்பும் கோரினார். 

பாலியல் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் பாப்பரசர் திருப்பலிப் பூஜையிலும் கலந்து கொண்டதாக வத்திக்கான் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாப்பரசர் பிரான்ஸிஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவியேற்றதை அடுத்து, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலக்கானவர்களை சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்