/* up Facebook

Jul 14, 2014

பஞ்சாயத்து தீர்ப்பின்படி 10 வயது சிறுமி பலாத்காரம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊர் பஞ்சாயத்தின் உத்தரவுப்படி 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக ஊர் பஞ்சாயத்து தலைவர், பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ள அக்கிராமத்தில் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜார்க்கண்ட் மாநிலம் ஸ்வாங் குல்குலியா தோரா கிராமத்தைச் சேர்ந்த நாகாபாந்தி பாஸி (25) திங்கள்கிழமை இரவு பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரது தயாரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அந்த சிறுமியின் தந்தை, நாகாபாந்தியை அடித்து துரத்தினார். தான் தாக்கப்பட்டதாக நாகாபாந்தி ஊர் பஞ்சாயத்தில் அடுத்த நாளே புகார் அளித்தார். இதையடுத்து இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பஞ்சாயத்துக்கு வரவழைக் கப்பட்டு விசாரணை நடை பெற்றது.

நாகாபாந்தி தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார். எனவே அதற்கு பழி வாங்கும் வகையில் தன்னை தாக்கியவரின் மகளை (10 வயது சிறுமி) பலாத்காரம் செய்யலாம் என்று பஞ்சாயத்து தலைவர் கோஷல் பாஸி கொடூரமான உத்தரவைப் பிறப்பித்தார்.

இதையடுத்து நாகாரபாந்தி பஞ்சாயத்தார் மத்தியில் இருந்து அந்த சிறுமியை மறைவான இடத்துக்கு இழுத்துச் சென்ற பலாத்காரம் செய்துள்ளார். அச்சிறுமியின் தாய் கதறி அழுத போதிலும் பஞ்சாயத்தில் இருந்தவர்கள் மனம் இரங்கவில்லை. என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எதிர் தரப்பில் இருந்தும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஊர் பஞ்சாயத்து தலைவர் கோஷல் பாஸி, பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே பெருமளவில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

நன்றி
தமிழ் ஹிந்து தினசரி
13-07-2014

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்