/* up Facebook

Jun 13, 2014

போரில் நடக்கும் பாலியல் வல்லுறவுகள்: லண்டன் மாநாடு: இலங்கை தொடர்பாக.. (காணொளி)


போர் நடைபெறும்போது நடக்கும் பாலியல் வன்முறைகள் தொடர்பான, 4 நாள் உச்சி மாநாடு நேற்று(10) லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் ஆரம்பமானது. பிரித்தானிய வெளிநாட்டு செயலாளர் வில்லியம் ஹேக் ஐக்கிய நாடுகள் விசேட தூதுவர் அஞ்ஜெலினா ஜோலியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த உச்சிமாநாட்டில் 140 நாடுகளைச் சேர்ந்த அரசாங்க மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்கேற்றார்கள். இதில் லண்டனை தளமாக கொண்டு இயங்கும், உலகத் தமிழர் ஊடகவியாலாளர் ஒன்றியத்தின்(GTAJ) ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டார்கள். காலை ஆரம்பமான இந்த உச்சி மாநாட்டில், வில்லியம் ஹேக் உரையாற்றுகையில் நவீன காலத்தின் மாபெரும் குற்றங்களில் ஒன்றாக பாலியல் வல்லுறவு உள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை தூதுவர் அஞ்ஜெலினா ஜோலி உரையாற்றுகையில், பொஸ்னியாவில் நடைபெறும் பாரிய பாலியல் கொடுமைகளை விபரித்தார். ஆனால் அங்கே முள்ளிவாய்க்கால் தொடர்பாக  இதுவரை பேசவில்லை. அஞ்சலீனா மற்றும் வில்லியம் ஆகியோரின் பேச்சுக்களில் இலங்கை தொடர்பான விடையங்கள் முன்னணியில் இருக்கவில்லை என்பது கவலைக்குரிய விடையம் ஆகும். பொஸ்னியா , நைஜீரியா போன்ற நாடுகளில் நடக்கும் பாலியல் கொடுமை தொடர்பான விடையங்களுக்கே அவர்கள் முக்கியத்துவத்தை கொடுத்திருந்தார்கள். அத்தோடு இலங்கை அகதிகள் தொடர்பாக சில கருத்துக்களை பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் வில்லியம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். கேள்வி நேரம் என்று, எதுவும் ஒதுக்கப்படவில்லை என்பதனால் GTAJ யின் தமிழ் ஊடகவியலாளர்களால் எக்கேள்விகளையும் எழுப்ப முடியவில்லை. இருப்பினும் முள்ளிவாய்க்கால் தொடர்பாகவும், ஈழத்தில் நடந்துவரும் பாலியல் கொடுமை தொடர்பாகவும், சில துண்டுப் பிரசுரங்கள் அடிக்கப்பட்டு, முக்கியமான நபர்களுக்கு அது வினியோகிக்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

போரின்போது இலங்கையில் இடம்பெற்ற குறிப்பான பாலியல் பிரச்சினைகள் குறித்து அங்கு வெளிடப்பட்ட ஆவணப்படத்தின் ஒரு பகுதி.









0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்