/* up Facebook

Jun 4, 2014

83 வயது மூதாட்டியை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ வீரர் கைது


சக வீரர்களின் தாயை வல்லுறவுக்கு உட்படுத்திய மூன்று இராணுவத்தினரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

இராணுவ வீரர் ஒருவர் 83 வயதான மூதாட்டியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று மொனராகலை தம்பகல்ல பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
தம்பகல்ல கங்கொடகம, தலாவ பிரதேசத்தை சேர்ந்த வயதான பெண்மணியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்மணி, சந்தேக நபரின் மனைவியின் பாட்டி என பொலிஸார் தெரவித்துள்ளனர்.

83 வயதான பெண்மணி வேறு வீட்டில் தனித்து வசித்து வந்துள்ளார். விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த இராணுவ வீரர் கடந்த 31ம் திகதி இரவு சுமார் 10 மணியளவில் பெண்மணி வீட்டுக்குள் புகுந்து விளக்கை அனைத்து விட்டு அவரை இரண்டு முறை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

மதுபோதையில் இருந்த சந்தேக நபர், கட்டிலிலேயே நித்திரை செய்துள்ளார். மூதாட்டி விளக்கை ஏற்றி சந்தேக நபரை கண்டு சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து சந்தேக நபர் துணியால் அவரது வாயை மூடியுள்ளார்.

பெண்மணி சத்தமிடுவதை கேட்ட அங்கம் பக்கத்தவர்கள் பெண்மணியின் வீட்டுக்கு சென்றதை அடுத்து சந்தேக நபர் அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தம்பகல்ல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்மணி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2ம் இணைப்பு

சக இராணுவ வீரர்களின் தாயை வல்லுறவுக்கு உட்படுத்திய மூன்று இராணுவத்தினரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

50 வயதான பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூன்று இராணுவத்தினரை எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கெப்பிட்டிகொல்லாவ நீதவான் ஸ்ரீ மேவன் மஹேந்திர இன்று உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவ கோப்ரல் மற்றும் இரண்டு இராணுவ வீரர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவரின் மனைவியும் இரண்டு இராணுவ வீரர்களின் தாயுமான பெண்ணையே சந்தேக நபர்கள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர்கள் நொச்சியாகம லிந்தவெவ இராணுவ முகாமில் கடமையாற்றி வந்தனர்.

2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி இரவு அதிக மதுபோதையில் இருந்ததுடன் இந்த பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

நன்றி - தமிழ்வின்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்