/* up Facebook

May 9, 2014

நாப்கீன் சாதனையாளர் முருகானந்தத்திற்கு விருது


பெண்கள் மென்சஸ் காலத்தில் அனுபவிக்கும் சங்கடங்கள் ஒருபுறம் இருக்க அதை 'தீட்டு' என்றும் 'வீட்டுத்தூரம்' என்றும் கூறி பெண்களை அவமானப்படுத்திய இந்து கலாச்சாரம் 'தூமைத் துணி' என்கிற சுகாதாரமற்ற ஒன்றை தான் அவர்கள் மீது திணித்திருந்தது.

மேற்கத்திய நவீன பாதுப்பான சுகாதாரமான நாப்கீனை பயன்படுத்தும் அரிய வாய்ப்புகள் பணக்கார பெண்களுக்கே வாய்த்தது. தங்கள் வீட்டு பெண்களுக்காக அந்த 'நாப்கீன்'களை கடைக்குச் சென்று வாங்கக்கூட சங்கடப்படும் பல படித்த ஆண்களுக்குகூட மென்சஸ் காலத்தில் பெண்களின் சங்கடங்கள் குறித்து தீவிர சிந்தனை செய்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஏன் நாப்கீன் உபயோகிக்கும் பெண்களேகூட, 'தூமைத்துணி' உபயோகப்படுத்தும் மற்ற பெண்களைக் குறித்து முருகானந்தம் போல் சிந்தித்து இருக்கவே மாட்டார்கள்.

நாப்கீன், கழிவுகளை மட்டும் சுமக்கும் குப்பையல்ல. அது பெண்களின் அத்தியாவசிய தேவைகளுள் மிக முக்கியமானதொன்று என்பதை உணர்ந்து அது அனைத்து பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்கிற மிக உன்னதமான நேசமிக்க உணர்ச்சி இருக்கிறதே. அது சுயநலமற்ற சிந்தனையில்தான் உயிரூட்ட முடியும்.

அதை முருகானந்தம் சாதித்து இருக்கிறார். அதற்காக அவர்பட்ட அவமானங்களையும், இழப்புகளையும் அவருடைய தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும், எல்லா பெண்களும் நாப்கீன் உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காக மலிவு விலையில் நாப்கீன் தயாரிப்புகளையும் குறித்த லட்சிய போராட்டத்தின் வெற்றியை அமெரிக்காவின் 'டைம்ஸ்' பத்திரிக்கையின் மூலம் சர்வதேச உலகத்தை திருப்பி பார்க்க வைத்திருக்கிறது.

சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்ற 100 பேர் பட்டியலில் முருகானந்தத்தின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. விருது பெறுவதற்காக அமெரிக்க செல்ல இருக்கும் முருகானந்தாவின் முயற்சிக்கு பின்னே உள்ள வேதனையான சம்பவங்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

‪#‎வாழ்த்துக்கள் முருகானந்தம்‬. நீங்கள்தான் நாங்கள் வாழும் காலத்தின் மிகச் சிறந்த பெண்ணியவாதி.

- தமிழச்சி
08/05/2014

(தமிழச்சியின் முகநூல் நிலைத்தகவலிளிருந்து நன்றியுடன்.)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்