/* up Facebook

May 29, 2014

உ.பி.யில் தலித் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொலை


பதுவான்: உத்தர பிரதேசத்தில் 2 தலித் சகோதரிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ்காரர் உள்பட 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், பதுவான் மாவட்டத்தை சேர்ந்த கத்ரா கிராமத்தில் வசித்த 14 மற்றும் 15 வயது 2 தலித் சகோதரிகள் கடந்த  செவ்வாய்க்கிழமை இரவு காணாமல் போய்விட்டனர். அந்த சிறுமிகளின் பெற்றோரும் கிராமத்தினரும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை அந்த 2  சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்குவதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

காணாமல் போன அந்த சகோதரிகளை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம்  செய்தது தெரிய வந்தது. இந்த போராட்டத்தில் அந்த 2 சிறுமிகளும் இறந்துவிட்டனர். உடனே சிறுமிகளின் உடல்களை மரத்தில் தூக்கு போட்டு தொங்க விட்டுவிட்டு  பலாத்கார கும்பல் தப்பியோடிவிட்டது. உடல்களை மீட்ட குடும்பத்தினர், பிரேத பரிசோதனைக்கு போலீசிடம் ஒப்படைக்க மறுத்தனர். மேலும், குற்றவாளிகளை  உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த சர்வேஷ் யாதவ் மற்றும்  ரக்ஷாபால் யாதவ் என்ற 2 போலீஸ் கான்ஸ்டபிள்கள், பப்பு யாதவ் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யும்படி பெற்றோர் உஷியாத்  காவல்நிலையத்தில் புகார் செய்தனர். எனினும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதையடுத்து பொதுமக்கள்  மறியலைத் தொடர்ந்து போலீஸ்காரர் ஒருவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்