/* up Facebook

Apr 9, 2014

உயர் அதிகாரியினால் பாலியல் வன்முறையினை எதிர் கொண்ட ஓர் அவலப் பெண்ணின் கதை (நேர்காணல்) - அகல்யா. பிரான்சிஸ்கிளையின்



எனது பெயர்  பாமினி  2பிள்ளைகளுடன் முள்ளியவளையில் தனியே வசித்து வருகின்றேன் . கணவா  2009ம் ஆண்டு காணமல் போய்விட்டார். பொருளாதார பிரச்சனைகாரணமாக ஆரம்பத்தில் கூலி வேலைக்கு சென்றேன் பின்னா  2013ம் ஆண்டு 3ம் மாதம் முள்ளைத்தீவிலுள்ள வங்கி ஒன்றினுள் துப்பரவு வேலை செய்தேன் வங்கியினை கிலீன் செய்வதுடன் மனேச்சரின் குவாட்டசினையும் கிலீன் செய்து வந்தேன். முகாமையாளராக இருந்த விஸ்பா என்னை தனது தேவைக்கு பயன்படுத்தலாம்  என்ற என்னத்துடன்  நெடுகளும் என்னை உற்று பா ப்பார் பல கதைகள் சொல்லுவார் நான் இவை ஒன்றையும் பொருட்படுத்தாது எனது வேலையை செய்து வந்தேன்.

ஒரு நாள் நான் றூமை துப்பரவு செய்து கொண்டு நின்றபோது உள்ளுக்குள் வந்துவிட்டார். படம் பார்க்க போறிங்களா என்று கேட்டார் நான் வழமையாக படம் பார்கிறனான் நானும் ஓம் பாக்றேன் என்டேன் அவர்  செக்ஸ் படம் போட்டு காட்டினார் நான் அதை பார்க்க மாட்டேன் என்றேன் என்னை முழுவதையும்  பார்க்க சொல்லி கழுத்தை பிடிச்சு திருகினார்   என்னுடன் கூடாது அனுக தொடங்கினார். அவர்  றுமை பூட்டிப்போட்டு உள்ளுக்க வந்தார். நான் எவ்வளவோ போராடி அவருக்கு அடிச்சு றுமை திறந்து கொண்டு வெளியால் வந்தேன். இவ்விடையத்தை நான் செக்சன் மனேசருக்கு கூறினேன் அவர்  எனக்கு ஆதரவாக இருந்தார். எனது பொpயப்பாக்கு இவ்விடையத்தை கூறினேன் ஏனெனில் அவர்  தான் என்னை வேலைக்கு அங்கு சோ த்தார். அவர்  மனேச்சருக்கு அடிக்க போனார் மனேச்சர்  அப்போது மன்னிப்பு கேட்டார். எனி இவ்வாறு நடக்காது என்று.

அதற்கு பின்னரும் நான் அங்கு வேலை செய்தேன். மனேச்சா  பிறகும் என்னுடன் மோசமாக நடக்க தொடங்கி விட்டார். 5இலட்சம் காசு தருகிறேன் தன்னோட வா என்று கேட்டு என்னை தினமும் துன்புறுத்தினார். நான் கூறினேன் நான் இப்படி காசு சம்பாதிக்கிறது என்றால் வீட்டில இருந்து சம்பாதிச்சு இருந்திருப்பேன் கஸ்ரப்பட்டு இத் தொழில் செய்ய வந்திருக்க மாட்டேன் என்றேன்.

இங்கு நடந்ததை என்செக்சன் மனேச்சருக்கு முதலே நான் கூறினபடியால் அவர் எனக்கு ஆதரவாக இருந்தார். நான் மனேச்சரின் குவாட்டஸ் துப்பரவாக்க செல்லும் போதோ திறப்பு கொடுக்க செல்லும் போதோ எனக்கு துணையாக என்னுடன் ஒருவரை அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன் அவரும் எனக்கு அவ்வாறு ஒழுங்குபடுத்தி தந்தார். இதனால் அவரையும் வேறு இடத்திற்கு மாற்றி விட்டார்கள்.

எனக்கு தெரிந்த ஓர் பெண்ணிட்ட எனக்கு நடந்தவை பற்றி கூறினேன் அவர் தான் கொழும்பிற்கு அறிவித்தார். பின்னா  அந்த மனேச்சரை கொழும்பிற்கு மாற்றி விட்டார்கள். எனது பிரச்சனை தொடா பாக எந்த வித நடவடிக்கையும் இவ் உயா  அதிகாரியினா களால் எடுக்கப்படவில்லை என்னை வேலையிலிருந்து நிறுத்தி விட்டார்கள் எனக்கு ஆதரவாக நடவடிக்கையும் எடுக்காது. என்னில் பிழைபோல் ஆக்கி விட்டார்கள் பிரச்சனை நடந்து ஒருமாதத்திந்குபின்னா  தானே நான் தொpயப்படுத்தினேன் உடனே கூறவில்லை என்று கூறினார்கள். இவர் மன்னிப்பு கேட்டதால் தான் சொல்லாமல் விட்டேன் ஆனால் இவர் மன்னிப்பு கேட்ட பின்னரும் என்னுடன் தப்பாக நடக்கதொடங்கினார். ஏன்று கூறினேன் ஆனால் இவர்கள் எனது கதையினை பொருட்படுத்தவில்லை.

கிலீனிங் சேவிசிலிருந்து தான் நான் இந்த வங்கிக்கு கிலீனராக வேலை செய்வதற்கு அனுப்பப்பட்டேன். இப்பிரச்சனையை நான் அவர் களுக்கும் அறிவித்தேன் ஆனால் அவர் கள் எந்தவித நடவடிக்கையும் எனக்கு எடுக்கவில்லை வேறு வேலை எனக்கு எடுத்து தல்லாம் என்று வவுனியாவில் உங்களுக்கு இதே வேலை இருக்கு செய்யுங்கள் என்று கூறினார் ஏனெனில் நான் அங்கு போக மாட்டேன் என்று தொpந்து நான் வேலைக்கு போகும் போதே கூறியிருந்தேன் எனது கணவனை ஆமி பிடித்து கொண்டு சென்று வி ட்டான் நான் 3பிள்ளைகளுடன் தனிய வசிக்கிறேன் வெளியிடங்களில் சென்று வேலை செய்ய முடியாது. இதை தொpந்த அவர் கள்  வேலையே எனக்கு எடுத்து தராது பொய் சொன்னார்கள். 2மாத சம்பள காசு உனக்கு தரலாம் என்று கூறிவிட்டு 5000, 5000 ரூபாவாக இரண்டு மாதமும் தந்தார்கள். இந்த காசும் எனது சம்பளத்தில் நின் ற காசினைத்தான் தந்தார்கள் அவர் களாக தரவில்லை.

இன்று நான் வேறு வேலையை கேட்டு எத்தனையே எமது இடங்களுக்கு சென்றேன் வங்கியில் நடந்த சம்பவத்தால் எனக்கு யாரும் வேலை தருகிறார்கள் இல்லை நான் என்ன பிழை செய்தேன் என்னை தண்டிக்கிறார்கள் பிழை செய்த மனேச்சர் மட்டும் இன்று கொழும்மில் சந்தோசமா வேலை செய்கிறார் இவரின் இவ் வலையில் இன்றும் எத்தனையோ பெண்களின் வாழ்க்கை அழியப்போகின்றதோ எனக்கு தெரியவில்லை இன்று என் கிராமத்தவர்கள்  நான் தான் கூடாதவள் கணவனும் இவளுக்கு இல்லை இவள் தான் அந்த மனேச்சரிடம் போயிருப்பாள் என்று கதைக்கிறார்கள்.

என் போன்று தான் இன்று கணவன் இல்லாது வேலைக்கு செல்லும் எத்தனையோ பெண்களின் நிலமையுள்ளது. இந்த கொடிய யுத்தத்தில் நாம் எத்தனையோ உறவுகள் சொத்துக்கள் என இழந்து இந்த கொடிய இராணுவம் செய்யும் அட்டூலியங்கள் பாலியல் வன்முறைகளுக்கு மத்தியிலும் மீண்டும் நாம் வாழ முயற்சிக்கையில் எம் ஆண்களே எம்மை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார்கள். நான் பெண்ணாக பிறந்தது நான் செய்த பாவமா?????

(பெயர்கள் புனை பெயர்)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்