/* up Facebook

Mar 11, 2014

பெண் போராளிகளின் உடல்கள் தொடர்பாக மிருகத்தனமான கலாசாரம் - கெலும் மக்ரே


இலங்கையில் போரின் இறுதிக் கால கட்டத்தில் இடம்பெற்றதான போர்க்குற்றங்கள் தொடர்பான தமது ஆவணப்படங்கள் குறித்து கெலும் மக்ரே எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார் . 



இந்த ஆவணப்படங்கள் வெளிப்படுத்தும் இறப்புகளின் அளவுகள் மட்டுமல்ல ஒரு போரின் போது 5 பேரின் சாவு சின்ன விடயம் தான் . அது 40 ஆயிரம் பொது மக்கள் கடைசி மாதங்களில் மோதலில் அரச தரப்பு மேற் கொண்ட செல் வீச்சினால் கொல்லப்படும் அளவுக்கு மேல் நோக்கி சென்றிருந்தது .

இந்தப் படத் தொகுப்புகள் மிக வெறுப்பூட்டுபவையாக இருக்கின்றன . பெண் போராளிகளின் உடல்கள் தொடர்பாகப் படையினர் நடந்து கொண்டுள்ள முறைகள் , ஒரு முறை சார்ந்த மிருகத்தனமான கலாசாரம் மற்றும் பால் நிலை வன் செயல்களை அவை எடுத்துக்காட்டுகின்றன . இந்தப் படங்களைக் கைத் தொலைபேசியில் ஒரு சிப்பாய் எடுத்திருக்கிறார் . அதில் சிங்களம் பேசும் படையினர் காணப் படுகிறார்கள் . அவர்களின் உடைகள் ஒரு விசேட அணியைச் சேர்ந்தவர்களாகக் காட்டுகின்றன . அவர்கள் சிரிக்கிறார்கள் , ஊக்கப்படுத்திக் கொள்கிறார்கள் - புலிப் போராளிகளின் சாவுகளை கொண்டாடுகிறார்கள் . சடலங்களின் மீது அசிங்கமான பால்நிலை வன் செயல்களை மேற்கொள்கிறார்கள் .

போராளிகள் போன்று தோன்றும் இவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதும் எமக்குத் தெரியாது . ஆதாரங்கள் சோடிப்பு இல்லை இந்தப்படங்களை பிரபல்யமான விஞ்ஞான முறையில் ஆய்வுகள் செய்பவரான டாக்டர் றிச்சார்ட் யப்பர்ட் பரிசோதனை செய்துள்ளார் . சடலங்களில் காணப்படும் காயங்கள் உண்மையானவை . இப் படத் தொகுதி போலியானவையல்ல என்று முடிவுக்கு அவர் வந்தது மட்டுமன்றி அந்தக் காயங்கள் போரின் போது ஏற்பட்டவையாக தெரியவில்லை . இது போரின் பின்னர் அல்லது ஒளித்திருந்து தாக்கிய போது ஏற்பட்டவை போல் காணப்படுவதாக அவர் ஆச்சரியம் தெரிவித்தார் . இந்த சடலங்களில் குறைந்தது இரண்டின் மீது காணப்பட்ட காயங்களை - தலைகளில் ஏற்பட்டிருந்த அழமான காயங்களை அவரால் அடையாளம் காண முடிந்தது . உயர் வேகத் துப்பாக்கி வேட்டுகளால் இவை ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் - காயங்களின் ஒழுங்கைப் பார்க்கும்போது இவை கொலை செய்யப்படுவதற்கான வேட்டுகள் என்பதை தம்மால் ஒதுக்க முடியாது என்றும் கூறினார் .

பிரிட்டிஷ் தமிழ் பேரவையினால் எமக்கு வழங்கப்பட்ட வீடியோ படங்களும் பிரிட்டிஷ் நீதிமன்றங்களுக்குப் பணியாற்றுகிறவரான கெளரவமான ஒரு டிஜிட்டல் பட ஆய்வாளரால் சுதந்திரமாக பரிசோதிக்கப்பட்டு உண்மையானவை என்று காணப்பட்டுள்ளன . ஒவ்வொரு பிரதியாக விரிவான ஆய்வின் பின்னர் அவர் கூறினார் . எதுவித சோடிப்புகளையோ , கையாடல்களையோ என்னால் காண முடியவில்லை இந்த வீடியோப் படங்கள் உண்மையானவை என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளன . காட்டப்படும் சம்பவங்களை அவை சரியாக பிரதிபலிப்பவையாக உள்ளன என்று கூறினார் .

பால்நிலை கொடுமைகள் 
இத் தொகுப்பில் மிகத்தெளிவாக உள்ளது என்னவென்றால் பால்நிலை கொடுமைகள்தான் பெண்களின் உடல்களை பெற்று மீண்டும் மீண்டும் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளன . தமிழீழ விடுதலைப்புலிகளும் மோசமான போர்க்குற்றங்களை - சிறுவர்களை போரில் ஈடுபடுத்தியது பொதுமக்கள் குடியிருப்புகள் மீது குண்டு வீசியது போன்றவைகளை செய்துதான் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை . ஆனால் தனது சொந்த செயல்களை நியாயப்படுத்துவதற்கு அரசு இவைகளைப் பயன்படுத்த முடியாது . புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளர் இசைப்பிரியா உடைகள்களைப் பெற்று கொல்லப்பட்டதான படங்களை நாம் வெளியிட்ட போது , மோதலின் இடையில் சிக்கி அவர் உயிர் இழந்ததாக அரச தரப்பினர் விடாப்பிடியாக கூறி வந்தார்கள் . ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர் படைகளினால் உயிருடன் பிடிபட்டிருக்கும் படம் எமக்கு கிடைத்தது . அவர் ஆயுதம் இல்லாமலிருந்தார் - உயிருடன் காயமின்றி காணப்பட்டார் .
இசைப்பிரியா மோதலின் போது இடையில் சிக்கி சாகவில்லை . அரச படைகளின் காவலில் இருந்தபோது அவர் இறந்துள்ளார் . அந்த அடிப்படையில் தான் இப்பொழுது கிடைத்துள்ள ஆதாரங்கள் ஆராயப்பட வேண்டும் . ஒரு முறையான திட்டவட்டமான வகையில் வன்முறைகள் பயன்படுத்தப்பட்டு கொலைகள் நடைபெற்றுள்ளன . இலங்கையில் இருப்பதாகக் கூறப்படுவது போல் ஒழுக்கமும் செயன்முறையும் கொண்ட ஒரு இராணுவத்தில் இந்த மாதிரி செயற்பாடுகளுக்கு கட்டளையிடும் பொறுப்பானது மிக உச்ச நிலை வரைக்கும் தடயங்களை காண முடியும் . இதன் கருத்து என்னவென்றால் அது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவரைக்கும் செல்கிறது மற்றும் ஆயுதப் படைகளின் சகல நிலைக் கட்டளைத் தளபதியான அவரது சகோதரர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை நோக்கியும் போகின்றது 
நன்றி - டிடிஎன் இணையம்

தொடர்புடைய பதிவு : http://www.penniyam.com/2010/12/4.html

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்