/* up Facebook

Jan 8, 2014

‘இங்கிருந்து’ இலங்கைத் தமிழ் சினிமா தொடர்பான கலந்துரையாடல்

இலங்கைத் தமிழ் சினிமா தொடர்பான கலந்துரையாடல்மார்ச் 1ம் 2ம் திகதிகளில் இலங்கைத் தமிழ் சினிமா தொடர்பான இரு கலந்துரையாடல்கள் பத்தனை ஸ்ரீபாததேசியகல்விக்கல்லூரியிலும் வெள்ளவத்தை தேசியகலை இலக்கியப் பேரவையிலும் நடைபெறவுள்ளன. பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்டவிரிவுரையாளரும் ஆங்கிலத்துறைத் தலைவருமான கலாநிதி.சுமதி சிவமோகனின் திரைக்கதை, இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த ‘இங்கிருந்து’திரைப்படத்தை முன்னிறுத்திய கருத்துப்பகிர்வாக இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மார்ச் முதலாம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பத்தனை ஸ்ரீபாதகல்லூரியில் பீடாதிபதி ஏ. சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் சு. முரளீதரன் (கூடைக்குள் தேசம்), எட்டியாந்தோட்டை கருணாகரன் ஆகியோரும் மார்ச் இரண்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமைமாலை 4.00 மணிக்கு வெள்ளவத்தை ஹெம்டன் லேன் இலக்கம் 121இல் அமைந்துள்ள தேசியகலை இலக்கியப் பேரவை நிகழ்வில் கேஷாயினி எட்மண்ட் தலைமையில் தெளிவத்தை ஜோசப் மற்றும் என். ஆத்மாவும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.


‘இங்கிருந்து’ திரைப்படத்தின் இயக்குனர் சுமதி சிவமோகனுடன் திரைத்துறைஆர்வலர்கள்,பார்வையாளர்கள்,கலைஞர்கள்,எழுத்தாளர்கள் பங்குபெறும் திறந்த கலந்துரையாடலாக இந்நிகழ்வகள் அமையவுள்ளன. சினிமா, ஊடகம், மலையகம், பெண்ணியம், இலக்கியம்,வரலாறு எனப் பரந்துபட்ட தளங்களில் கருத்துப்பகிர்வுகள் இடம்பெறவுள்ளன.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்