/* up Facebook

Sep 8, 2013

பெண்ணியம் : பல கோணங்கள்



பெண்ணியம் அல்லது பெண்ணிலை வாதம் என்பது ஒரே நிலைப்பாடு கொண்டதல்ல. அதனுள் பல கருத்தியல்கள் - கோணங்கள் உண்டு. அவற்றுள், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.

மிதவாதப் பெண்ணியம்

இது பெண்ணின் சிறப்புக்களைக் கூறுவதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறது கடவுளுக்கு முன், ஆண் - பெண் எல்லோரும் சமம் என்று சொல்லுகிற அதே நேரத்தில் அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கிறது. வழக்காடுமன்றங்கள், சட்டமன்றங்கள்     முதலியவற்றிற்குப் போவதில் ஆர்வம் கொள்கிறது.

போராட்ட குணம் மிக்க பெண்ணியம்

பெண் உரிமைகளைப் போராடித்தான் பெற முடியும்- பெறவேண்டும் என்று இது வற்புறுத்துகிறது. பெண்களுக்குச் சொத்துரிமை போன்றவற்றிற்காக இது போராடிப் பெற்றும் தந்துள்ளது.

தீவிரவாதப் பெண்ணியம்

நவீனப் பெண்ணியம் என்று சொல்லுகின்ற இது, ‘அரசியல் அமைப்புச்     சட்டங்களிலும் அரசு ஆணைகளிலும் வழங்கப்பட்டுள்ள ஆண் - பெண் சமத்துவம் நடைமுறையில் அவைக்குதவாதது’ என்று குற்றம் காட்டுகிறது. குடும்பம், பாலியல்     உறவு முதலியவை பெண்ணை அடிமைப் படுத்துகின்றவை; எனவே இவற்றிலிருந்து பெண் விடுதலையாகி, வெளியே வர வேண்டும் என்று பேசுகிறது.

புரட்சிகரப் பெண்ணியம்

பாலியல் உரிமை (sexual right), கட்டற்ற அல்லது கட்டுப்பாடற்ற பாலியல் உறவு (free sex), பெண் - ஓரினச் சேர்க்கை (lesbianism), குழந்தை பெறுவதை மறுத்தல்- முதலியவற்றை இது வலியுறுத்துகிறது.

சமதர்மப் பெண்ணியம்

குடும்பத்திற்குள்ளும்     அதற்கு வெளியேயும் பெண், பொருளாதார அடிப்படையில் சுய நிலையும் பெறவேண்டும். அப்போதுதான் பெண் விடுதலை சாத்தியமாகும் என்று சொல்கிறது.     ஒட்டுமொத்தமான     சமூக - சமதர்ம அமைப்பிலேயே பெண்ணும் நிரந்தரமாக சமத்துவநிலை பெறுகிறாள்     என்று இது கூறுகிறது. இந்தியாவில் / தமிழகத்தில்,     பெண்ணியச்     சிந்தனைகளில் இதுவே பெரும்பான்மையாகக் காணப்படுகிறது.

நன்றி - http://www.tamilvu.org

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்