/* up Facebook

Sep 10, 2013

பெண்ணுக்கு மறுக்கப்பட்டுள்ள மூன்று விடயங்கள் - கேஷாயினி எட்மண்ட்


இன்றைய சமூகக்கட்டமைப்பில் விளிம்புநிலையில் காணப்படுகின்ற பாலினமான பெண்கள் பல்வேறு வழிகளிலும் தமது உரிமைகளை மீட்டெடுப்பதற்கு போராடி வருகின்றனர். பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் முதல் தனி நபர்கள் வரை பலர் பெண்ணியத்திற்கு குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றன பெண்ணுக்கு மறுக்கப்பட்டுள்ள மூன்று விடயங்கள்

இன்றைய சமூகக்கட்டமைப்பில் விளிம்புநிலையில் காணப்படுகின்ற பாலினமான பெண்கள் பல்வேறு வழிகளிலும் தமது உரிமைகளை மீட்டெடுப்பதற்கு போராடி வருகின்றனர். பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் முதல் தனி நபர்கள் வரை பலர் பெண்ணியத்திற்கு குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். அன்று மூலையில் முடிங்கிக் கிடந்த காலம் போய் இன்று பெண்கள் பல தலைமைப்பதவிகளை வகிக்கின்ற நிலை தோன்றிவிட்டமை பெருமைக்குறியதொரு விடயமே. ஆயினும் அன்று தொட்டு இன்று வரை பெண் வெளிப்படையாக பேசிய முடியாத சில விடயங்கள் இருக்கவே செய்கின்றன. இவற்றுள் முக்கியமானவை மூன்று.

1. அரசியல்
2. பாலியல் விடயங்கள்
3. மதம் சார்ந்த கருத்துக்கள்.

இவை தொடர்பான தமது தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமன்றி சமூகத்தில் இது தொடர்பான தான் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கூட வெளிப்படுத்த முடியாத நிலைமையே இன்று பெரும்பாலும் காணப்படுகிறது. அதையும் மீறி முற்போக்காக செயற்படும் பல பெண்களின் சுயம் பற்றிய கருத்துக்கள் அலசப்படுகின்றன, எதிர்ப்புகளை எதிர்நோக்குகின்றனர், அல்து சமூகத்திலிருந்து தள்ளிவைக்கப்படுகின்றனர்.

முதலாவது விடயமான அரசியலை பொறுத்தமட்டில் இன்று பெண்களின் விகிதாசாரம் முன்னரை விட அதிகரித்துள்ளமை உண்மை. வழமையில் அரசியல் பற்றியதொரு கருத்தினை ஆணொருவா; முன்வைக்கும் போது கொலை அச்சுறுத்தல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். ஆனால் அதுவே பெண் எனும் போது உயிராபத்து மற்றுமல்ல பாலியல் தொடர்பான அச்சுறுத்தல்களும் அவளுக்கு ஏற்படுகின்றன. குடும்ப அமைப்பினை எடுத்துக்கொண்டால் தன் ஆண் வாரிசு அரசியலைப் பற்றி பேசும் போது கிடைக்கின்ற பக்கபலம் அதுவே பெண் பேச ஆரம்பிக்கும் போது மறுக்கப்படுகின்றது. 

பெண்ணுக்கு மறுக்கப்பட்ட இரண்டாவது விடயமான “பாலியல் தொடா;பான கருத்துக்கள்” என்பதை எடுத்துக்கொண்டால் ஓர் ஆண் பாலியல் தொடா;பான கருத்தினை முன்வைக்கும் போது சமூகம் அதனை ஏற்றுக்கொள்கிறது. அது மட்டுமன்றி அவனது கரத்துக்கள் சில சமயங்களில் சமூகமாற்றத்திற்கு கூட வழிவகுக்கின்றது. ஆயினும் இந்த முன்வைத்தல் பெண் ஒருவாpனால் வைக்கப்படும் போது அல்லது பாலியல் தொடர்பிலான பிரச்சினைகள் பற்றி சுட்டிக்காட்டப்படும் போதோ சமூகத்தின் பார்வை அவள் முன்வைத்த விடயத்திலிருந்து திசை திரும்பி அவளின் மீதே படிகின்றது. அவளினால் சுட்டப்பட்ட விடயங்களை விடவும் அவளது சுயம் நோக்கியே சமூகம் பார்வையை திருப்புகின்றது. அவளது தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் விமர்சிக்க தலைப்டுகிறது. அல்லது அவள் தொடர்பான தப்பானதொரு கருத்தையே சமூகம் தேட தலைப்படுகிறது. கலைப்படைப்புக்களை எடுத்துக்கொண்டால் ஒரு பெண்ணின் நிர்வாணம் பற்றியோ காமம் பற்றியோ ஆண் இலகுவில் பேசிடமுடிகிறது. கவிதை படைத்திட முடிகிறது. ஆனால் ஆணின் நிர்வாணம் பற்றிய ஏதேனும் படைப்பினை பெண்ணினால் மேற்கொள்ள முடியுமா? 

இத்தாக்கமானது இன்று மட்டுமல்ல அன்று முதலே நமது இலக்கியங்களில் கூட எழுதப்பட்டுவிட்ட மறைமுகமான சட்டம். ஆணுக்கு அந்தப்புரம், ஆயிரம் திருமணம் என்றெழுதிய இலக்கியங்கள் அதே எழுத்தாணியினால் பெண்ணுக்கு உடன்கட்டை வழக்கம் அல்லது வனவாசத்தை தான் எழுதியது. கணவன் வேறு பெண்ணை தேடிய போது பேசாத பெண்மை தன் கணவனை தண்டித்த போது நகரையே கொழுத்தியதாக பெண் பாத்திரத்தினை படைத்திருந்தது. 

மூன்றாவதான விடயம் சமயம் தொடர்பானது. இன்றுள்ள சமய விதிமுறைகள் என்பது அன்று ஒருவாpனால் எழுதப்பட்டதொரு விடயம். காலத்திற்கேற்ற வகையில் சமய வழிபாடுகளை மாற்றிக்கொள்கின்றோம். சடங்குகளை மாற்றுகின்றோம். ஆனால் பெண்ணினால் காலத்திற்கேற்ப முன்வைக்கப்படும் மாற்றுக்கருத்துக்களை மட்டும் ஏற்க ஏனோ எம்மால் முடிவதில்லை. அப்படியே முன்வைத்தாலும் அவளை எமது சமூகத்திற்கு எதிரானவளாக பார்க்கின்றோம் அல்லது ஒதுக்கிவைக்கின்றோம்.

மேற்கூறிய விடங்களில் ஒரு பெண் தன் கருத்தினை முன்வைக்க முயலும் போது அச்சுறுத்தல்கள், பாலியல் கொடுமைகள், சமூக புறந்தள்ளல்கள், குடும்பத்தினுள் ஏற்படுகின்ற பிரச்சினைகள், தன் சுயம் பற்றிய விமர்சிப்புக்கள் என்பவற்றினை எதிர்கொள்ள வேண்டிய பலவித நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றாள். 

ஆகமொத்தத்தில் என்ன தான் பெண்ணுமைக்குரல்கள் உயர்ந்துள்ள போதும் இந்த மூவகை விடயங்களும் அன்று முதல் இன்று வரை பெண் என்கின்ற விளிம்பு நிலையினருக்கு மறுக்கப்பட்டே வருகிறது என்பதே யதார்த்த உண்மை என்பதினை யாராலும் மறுத்திட முடியாது. 


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்