/* up Facebook

Jun 3, 2013

வன்னியில் பெண்களின் துன்பங்களை நோக்காமல் பெண்ணுரிமை பேசுவதா? - ப்ரியாணி குணரத்ன


 போரினால் சொல்லொணாத் துயரங்களை அடைந்து இன்று வன்னி பெரு நிலப்பரப்பில் நிர்க்கதியாகக் கண்ணீர் சிந்தி வாழும் தமிழ்ப் பெண் சகோதரிகளின் துன்பங்களைக் கணக்கில் எடுக்காமல், அவர்களின் உரிமைப் போராட்டங்களை உள்ளடக்காமல், இந்த நாட்டில் எந்த மூலையிலும் எவரும் பெண்ணுரிமை பற்றிப் பேசமுடியாது, பேசவும் கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் நிர்வாக செயலாளரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான பிரியாணி குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மருதானை சி.எஸ்.ஆர் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் சமூக நீதிக்கான பெண்கள் நடவடிக்கை அமைப்பின் மாநாடு இடம் பெற்றது. விக்கிரமபாகு கருணாரத்ன, சிறிதுங்க ஜெயசூரிய, ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா ஆகியோர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரியாணி குணரத்ன மேலும் தெரிவித்துள்ளதாவது:

வடக்குகிழக்கில் 90,000 விதவைகள் இருகின்றார்கள் என்ற ஒரு கொடும் உண்மையே அனைத்து கொடுமைகளையும் படம் பிடித்துக் காட்டுகிறது. இதைப் புரிந்துகொண்டாலே வடக்குகிழக்கு பெண்களின் அவல வாழ்வு பற்றிப் புரியும். 

குடும்பங்களை தலைமை தாங்கிட வேண்டிய நிலைமையில், வாழ்வாதார தேவைகள் கிடைக்காமை, பலவந்தமாக மாற்று இடங்களில் குடியேற்றம், காணிகள் பறிபோகின்றமை, இராணுவ நிர்வாகம், பாலியல் வன்புணர்வு, பிள்ளைகளின் கல்வித் தேவைகள் ஆகிய பல்வேறு சவால்கள் வன்னியிலே வாழும் தமிழ் பெண்களை விரக்தி நிலைமைக்குத் தள்ளியுள்ளன.

சொந்த நிலங்கள் பறிக்கப்பட்டுப் பரிச்சயம் இல்லாத காட்டு நிலங்களில் குடியேற்றப்படுகின்றமைக்கு, முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராம மக்களின் அவலவாழ்வு கண்முன் நிற்கும் உதாரணமாகும். இங்கே பெண்களே பெருந்துன்பங்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

யுத்தத்தில் கொல்லப்பட்ட தமது பிள்ளையின், கணவரின், தந்தையின் நினைவுக் கல்லறைகளைப் படைத்தரப்பினர் அழித்துள்ளதைத் தமிழ் பெண்களால் மன்னிக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கொல்லப்பட்டவர்களை நினைவுகூர முடியாதுள்ள வன்னி நில தமிழ் பெண்களின் இன்றைய யதார்த்தத்தை நாம் அறியவேண்டும். இறந்தவர்களை நினைவுகூர அவர்களுக்குத் தேசிய துக்க தினத்தை நிர்ணயிக்கவாவது நாம் வழி காண வேண்டும்.

வடக்குகிழக்கின் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தமிழ்ப் பெண்களை ஆக்கிரமித்துள்ளன. இராணுவ வலயங்களும், படைத்தரப்பினரின் தொந்தரவுகளும் வன்னிப் பெண்களை அச்சுறுத்துகின்றனஎன்றார்.

நன்றி - உதயன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்